search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் விபத்தில் பெண் படுகாயம் - இங்கிலாந்து ராணியின் கணவர் மீது வழக்கா?
    X

    கார் விபத்தில் பெண் படுகாயம் - இங்கிலாந்து ராணியின் கணவர் மீது வழக்கா?

    பிரிட்டன் இளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் பெண் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. #PrincePhilip
    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) கடந்த 17-ந் தேதி கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சான்ட்ரிங்காம் எஸ்டேட்டுக்கு தனது சொகுசு காரில் சென்றபோது, அவரது கார், மற்றொரு கார் மீது மோதியது.

    இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது.

    அவரது தோழியும் காயம் அடைந்தார். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    மணிக்கட்டு உடைந்த அந்த பெண், விபத்து தொடர்பாக இளவரசர் தன்னிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை என வேதனை தெரிவித்தார்.

    இந்த நிலையில் கார் விபத்தில் இளவரசர் பிலிப் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என அந்த பெண் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்த பெண் இளவரசர் பிலிப் மீது வழக்கு தொடர்வாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. #PrincePhilip
    Next Story
    ×