search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP government"

    மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திரமாக செயல்பட்டு குற்ற வழக்குகளை நேர்மையோடு விசாரித்து வந்து நீதியை நிலைநாட்டிய சி.பி.ஐ. துறையை அரசின் சுயலாபத்திற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

    தங்களின் கைப்பாவையாக மாற்றி ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆணைப்படி புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.

    மேலும், புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், அனைத்து பிரிவு நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு நமச்சிவாயம் கூறியுள்ளார்.

    ரபேல் ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு தயாரா? என மத்திய அரசுக்கு ராகுல்காந்தி சவால் விடுத்துள்ளார். #Rahul #RafaleDeal

    புதுடெல்லி:

    பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 2001-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்தது.

    2012-ம் ஆண்டு இதற்காக பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்தது. பிறகு அந்த ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு திடீரென ரத்து செய்து விட்டது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி ஏற்பட்டதும், பிரான்ஸ் நாட்டிடம் ரபேல் போர் விமானங்கள் வாங்குவது பற்றி மீண்டும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டுடன் மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி புதிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது.

    இந்த புதிய ஒப்பந்தப்படி, “ரபேல் போர் விமானத்துக்கான 50 சதவீத உதிரிப்பாகங்களை இந்தியாவில் உள்ள நிறுவனத்திடம் இருந்து பிரான்சு கொள்முதல் செய்ய வேண்டும்” என்று இந்தியா நிபந்தனை விதித்திருந்தது. இதை பிரான்ஸ் ஏற்றுக் கொண்டதால் இந்திய பாதுகாப்புத் துறைக்கு நவீன ரபேல் போர் விமானங்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகளும், ஊழலும் நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அடிக்கடி “ரபேல் விமான கொள்முதலில் ஊழல்” என்று பேசி வருகிறார்.

    ராகுலின் பொதுக்கூட்ட மேடை பேச்சு மற்றும் பேட்டிகளின் போது ரபேல் விவகாரம் தவறாமல் இடம் பெறுகிறது. இதைத் தொடர்ந்து மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி நேற்று ரபேல் ஒப்பந்தம் பற்றி ராகுலிடம் 15 கேள்விகளை கேட்டுள்ளார்.


    இந்த கேள்விகளை தனது ‘பேஸ்புக்‘ இணையத்தள பக்கத்தில் அருண்ஜெட்லி வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ரபேல் போர் விமான கொள்முதல் பற்றி ராகுல் தொடர்ந்து தவறான தகவல்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.

    மேலும், “காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பேசப்பட்டதை விட 20 சதவீதம் குறைவான விலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை பா.ஜ.க. அரசு செய்துள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் வைக்கப்பட்டு 14 மாதங்கள் கழித்துத்தான் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. எனவே எந்த உண்மையையும் அரை குறையாக ராகுல் பேசக்கூடாது” என்றும் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

    நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் இந்த விளக்கத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் உடனடியாக டுவிட்டரில் பதில் அளித்தார். அதில் ராகுல் கூறி இருப்பதாவது:-

    ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய கொள்ளை நடந்து இருப்பதாக நான் நாடு முழுவதும் கூறி வருகிறேன். இதுவரை மத்திய அரசு இதில் எதுவும் சொல்லாமல் இருந்தது. முதன் முதலாக இந்த கொள்ளை பற்றிய தகவல்களை நாட்டு மக்களின் கவனத்துக்கு அருண் ஜெட்லி கொண்டு வந்துள்ளார். இதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    ரபேல் ஒப்பந்தம் பற்றி பாராளுமன்ற கூட்டுக்குழுவில் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணைக்கு மத்திய அரசு தயாரா? என்பதை அறிய விரும்புகிறேன்.

    இந்த விவகாரத்தில் உங்கள் தலைவர் (மோடி) தனது நண்பரை (அணில்அம்பானி) காப்பாற்றி வருகிறார். இதுதான் இப்போது பிரச்சினையாக உள்ளது. இதுபற்றி அருண்ஜெட்லி 24 மணி நேரத்தில் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு ராகுல் சவால் விட்டுள்ளார். இதை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

    முதலில் அருண்ஜெட்லி கேட்ட 15 கேள்விகளுக்கு ராகுல் பதில் சொல்லட்டும். அதில் இந்த பிரச்சினைக்குரிய எல்லா விடைகளும் இருப்பதாக ராகுலுக்கு பா.ஜ.க. தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

    பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு சுட சுட பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    நாட்டு மக்கள் அனைவரையும் முட்டாள் என்று நினைத்துக் கொண்டு ராகுல் பேசி வருகிறார். அவரை விட நாட்டு மக்களுக்கு புத்திசாலித்தனம் அதிகமாக உள்ளது.

    ரபேல் போர் விமான விலை பற்றி ராகுல் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி கூறி வருகிறார். டெல்லி, பெங்களூர், ராய்ப்பூர், ஐதராபாத், ஜெய்ப்பூர் நகரங்களில் ரபேல் போர் விமான விலை பற்றி மாறுபட்ட தகவல்களை ராகுல் கூறினார்.

    பாராளுமன்றத்தில் இதுபற்றி பேசும்போது, வேறு விலையைக் குறிப்பிட்டு பேசினார். இதுபற்றி பாராளுமன்ற கூட்டுக்குழுவில் விசாரிக்க 24 மணி நேரம் கூட ராகுல் காத்திருக்க வேண்டியதில்லை.

    காங்கிரஸ் கட்சியிலேயே ஒரு கூட்டுக்குழு உள்ளது. அங்கு விசாரித்தாலே போதுமே.

    இவ்வாறு ராகுலை கிண்டல் செய்து அமித்ஷா பதில் அளித்துள்ளார்.

    மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளோம் என சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. #ParlimentMonsoonSession #NoConfidenceMotion #ShivSena
    மும்பை:

    நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒப்புதல் அளித்தார். இதுதொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நாளை நடக்கவுள்ளது. 

    இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம் எனகேட்டுக் கொண்டதாக தெரிகிறது.



    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளோம் என சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு  எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக சிவசேனா எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ParlimentMonsoonSession #NoConfidenceMotion #ShivSena
    மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் ஜனநாயக விரோத போக்கை பா.ஜனதா அரசு கடைபிடிக்கிறது என்று மாநில காங். தலைவர் நமச்சிவாயம் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத பா.ஜனதா ஆட்சியமைக்க துணைபோன கவர்னரையும், மத்திய அரசையும் கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், பாலன், ஜெயமூர்த்தி, தனவேலு, விஜயவேணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    மத்திய அரசு எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கவர்னரை ஏஜெண்டாக நியமித்து தொல்லை கொடுத்து வருகிறது. கர்நாடகத்தில் காங்கிரசும், ஜனதாதளமும் கூட்டணி அமைத்து 116 இடங்களை பெற்றுள்ளனர்.

    ஆனால், காங்கிரஸ் கூட்டணியை ஆட்சிக்கு அழைக்காமல் பெரும்பான்மை எனக் கூறி பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்துள்ளார்.

    பீகார், ராஜஸ்தான், மணிப்பூர், கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் பா.ஜனதா குறைந்த இடங்களை பெற்றும் அதிகாரத்தை பயன்படுத்தியும், பணம் கொடுத்தும் மாற்று கட்சியினரை இழுத்து ஆட்சி அமைத்துள்ளனர்.

    மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜனநாயக விரோத போக்கில் ஈடுபடுகின்றனர். தங்கள் விருப்பத்தை ஏற்ப அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிக்கொள்கின்றனர். மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் அவர்களுக்கு எதிராக ஆட்சியமைக்கும் பணியை பா.ஜனதா செய்கிறது.

    மாநில அரசுகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் மத்திய அரசு ஏஜெண்டாக செயல்படும் கவர்னர்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். ராகுல்காந்தி பிரதமர் ஆவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என மானாமதுரையில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி அளித்தார்.
    மானாமதுரை:

    மானாமதுரையில் தேவேந்திர மக்கள் அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் எச்.ராஜா பேசும்போது, கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி கர்நாடகாவில் 135 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று பா.ஜனதா ஆட்சி அமைக்கும். 

    பின்னர் நடைபெற்ற முகாமில் 200–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். 

    முகாமிற்கான ஏற்பாடுகளை தேவேந்திர மக்கள் அறக்கட்டளை நிறுவனர் சிவசங்கரி பரமசிவம், சட்ட ஆலோசகர் சிவகாமி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கவுதம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    ×