search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Birthday party"

    • என்.ஏ.ராமச் சந்திரராஜாவின் 99-ஆவது பிறந்த நாள் விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டது.
    • ”வாழப் பழகலாம் வாங்க” என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினாா்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி, ந.அ.மஞ்சம்மாள் நினைவு தொடக்கப்பள்ளி மற்றும் ந.அ.மஞ்சம்மாள் தொழில் நுட்பக்கல்லூாி ஆகிய கல்வி நிறுவனங்களை நிறுவிய கல்வி வள்ளல், தொழில திபா் அமரா் என்.ஏ.ராமச் சந்திரராஜாவின் 99-ஆவது பிறந்தநாள் விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டது.

    முதல்நாள் நிகழ்வாக, என்.ஆா்.கிருஷ்ணம ராஜா மண்டபத்தில் செந்த மிழ்ச்சுடா் சிவக்குமாா் "வாழப் பழகலாம் வாங்க" என்னும் தலைப்பில் சொ ற்பொழிவாற்றினாா்.

    2-ம் நாள் விழா மதுரை ரோட்டில் ந.அ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப் பள்ளிக்கு வடபுறம் அமைந்துள்ள "சாந்தி ஸ்தல்" நினைவுப் பூங்காவில் நடை பெற்றன. காலை நிகழ்ச்சி யில், மானேஜிங் டிரஸ்ட்டி என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி ராஜா நிறுவனரது நினை வாலயத்தில் மாலைகள் அணிவித்து மலா்களால் வழிபாடு செய்தாா். மேலும், நினைவுப்பூங்காவைப் பராமரித்துவரும் ஊழியா்களுக்கு வேட்டி சேலைகள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கினாா். தொடா்ந்து ஸ்ரீவில்லி புத்தூா் ஸ்திரிரத்னா கலைவளர்மணி உமா சந்திரசேகா் மற்றும் குழுவினரின் கீா்த்தனாஞ்ஜலி நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, என்.ஏ.ராமச்சந்திரராஜா குருகுலத் தாளாளா் மஞ்சுளா கிருஷ்ணமூா்த்தி ராஜா முன்னிலை வகித்தாா்.

    விழாவில், கடையநல்லூா் முனைவா் சங்கர நாரா யணன் வீணை இசையால் நிறுவனருக்கு வீணாஞ்ஜலி செலுத்தினாா். ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிாியா் நல்லா சிாியர் ரமேஷ் வரவேற்றுப் பேசினாா். முடிவில் பட்டதாாி உதவித் தலைமை ஆசிாியா் இளையபெருமாள் நன்றி கூறினாா். தமிழாசி ரியர் பிரான்சிஸ் அருள்ராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    • 13 தங்க மோதிரம், ரூ.1 லட்சம், கேமரா திருட்டு
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் - இளவேனில் தம்பதியினரின் பெண் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் விழாவை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு கொண்டாடினர்.

    அப்போது திருமண மண்டபத்தில் குழந்தைக்குப் பரிசாக வழங்கப்பட்ட 13 மோதிரம், 5 பவுன் நகை, 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    இது தொடர்பாக அஜித்குமார் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமண மண்டபத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரைக்குடியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடந்தது.
    • வட்ட செயலாளர்கள் இலைக்கடை சரவணன், பக்கீர்முகம்மது, ஜோசப்விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா நடந்தது. இதையொட்டி ஐந்து விளக்கு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழச்சியில் மாவட்ட மகளிரணி தலைவர் டாக்டர் சித்ராதேவி, மாவட்ட மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர், நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், ராம்குமார், அமுதா, கனகவள்ளி, நகர மகளிரணி செயலாளர் சுலோச்சனா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சேதுபதி, கணேசன், மாவட்ட பிரதிநிதி தட்சிணாமூர்த்தி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனரணி இணை செயலாளர் ஆரோக்கியசாமி, வட்ட செயலாளர்கள் இலைக்கடை சரவணன், பக்கீர்முகம்மது, ஜோசப்விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • எஸ்.புதூர் ஒன்றியத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா, ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா, ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், அவைத்தலைவர் நாகராஜன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக கூறி வந்த நீட் தேர்வு ரத்து இன்று வரை தீர்வு காணப்படாத ஒரு கனவாகவே இருந்து வருகிறது. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மக்களுக்கு பலனளிக்கும் துறையில் இருந்து வந்த 2 அமைச்சர்களை அமைச்சரவை மாற்றம் என்ற பெயரில் மாற்றம் செய்து ஏனோ தானோ என்ற பேரில் துறையை வழங்கி உள்ளார் என்றார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் வாசு, குணசேகரன், சுப்பிரமணியன், வேலு, செந்தில்குமார், ஜெகன், ஒன்றிய தலைவர்கள் திவ்யா பிரபு, விஜயகுமார், ஒன்றிய அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் நேரு, நெற்குப்பை பேரூர் செயலாளர் அடைக்கப்பன், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் நாகராஜன், துலாவூர் பார்த்திபன் மற்றும் மாவட்ட, ஒன்றி,ய பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • குடியாத்தம் நகர அ.தி.மு.க. சார்பில் நடந்தது
    • அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டது

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு குடியாத்தம் படவேட்டு எல்லையம்மன் கோவில் அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் உருவ படத்துடன் மேள தாளங்களுடன் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி தலைமை தாங்கினார்.

    மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா, முன்னாள் நகர மன்ற தலைவர் எம்.பாஸ்கர், நகர் மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, வழக்கறிஞர் கே.எம்.பூபதி, நகர நிர்வாகிகள் ஆர்.கே.அன்பு, வி.என்.தனஞ்செயன், கே.அமுதாகருணா, எஸ். என்.சுந்தரேசன், எஸ்.ஐ. அன்வர்பாஷா, அட்சயாவினோத்குமார், எம்.கே. சலீம், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ்.டி.மோகன்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் த.வேலழகன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் அன்னதானங்களை தொடங்கி வைத்தார். நகரில் உள்ள 36 வார்டுகளிலும் எம்.ஜி.ஆர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா நடந்தது.
    • சுவாமிநாதன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலாளர் மகாதேவன், அவைத்தலைவர் மகேந்திரன் மாவட்ட பேரவை செயலாளர் முனியசாமி முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வெள்ளத்துரை வழங்கினார். இதில் ஒன்றிய மாணவர் அணி காளிமுத்து, ஊராட்சி செயலாளர்கள் நல்லமருது, பெருமாள், முனியசாமி, பேரவை துணைச் செயலாளர் கருப்பசாமி, கிளைச் செயலாளர் ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.

    சாயல்குடியில் அ.ம.மு.க. சார்பில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த தின நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பச்சைக்கண்ணு தலைமை வகித்தார். நகர செயலாளர் சரிபு, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர்ஜெசிமா பானு, தொண்டர் அணி ராமசாமி முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் .அ.ம.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர். இதேபோல் கடலாடி தெற்கு ஒன்றியம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பாப்பாகுளம் பூமிநாதன் முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    • பள்ளபாளையம் வாளவாடி ஆகிய இடங்களிலும் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • ஆதித்யா ராஜ் மற்றும் மாநில,மாவட்ட,நகர,வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே .வாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்உடுமலை நகரத்தில் ஏரி பாளையம் மற்றும் ரயில் நிலையம் அருகிலும் மேலும் போடிபட்டி,பள்ளபாளையம் வாளவாடி ஆகிய இடங்களிலும் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும்,அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் மாவட்டத் தலைவர் டி.ரெத்தினவேல்,மாநில செயற்குழு உறுப்பினர் யு .கே. சி. முத்துக்குமாரசாமி, மாநில இளைஞரணி துணைத்தலைவர் அபிராமி செந்தில்குமார்,நகரத் தலைவர் பாலகிருஷ்ணன்,வட்டாரத் தலைவர்கள் அருளானந்தம்,ரவிச்சந்திரன் மாவட்ட மகளிர் அணி தலைவி மீனா குமாரி,மாவட்ட இளைஞரணி தலைவர் பிரசாந்த் குமார்,மாவட்ட மாணவர் அணி தலைவர் ஆதித்யா ராஜ் மற்றும் மாநில,மாவட்ட,நகர,வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது.
    • பா.ஜ.க. சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் மருந்துகள் வைக்கும் இரும்பு அலமாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் மருந்துகள் வைக்கும் இரும்பு அலமாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.மணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கே.சி.எம்.பி.சீனிவாசன், மாவட்டத் துணைத் தலைவர்கள் வினோத் வெங்கடேஷ், ஜி.கே.எஸ்.பாலு மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் வடிவேலன்,ரமேஷ், தினேஷ், பன்னீர் செல்வகுமார், கனக செல்வம், நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • காங்கயம் பா.ஜ.க. நகர தலைவர் சிவப்பிரகாஷ் தலைமை தாங்கினார்.
    • காங்கயம் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் நகர பஸ் நிலைய வளாகத்தில் நகர பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கயம் பா.ஜ.க. நகர தலைவர் சிவப்பிரகாஷ் தலைமை தாங்கினார். வாஜ்பாயின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கட்சி–யின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதே போல் காங்கயம் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் வழங்கினார்.
    • இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் விமல், தென்பழஞ்சி சுரேஷ், பெருங்குடி வசந்த் முன்னிலை வகித்தனர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் சார்பில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அறிவுறுத்தலின்படி திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன் தலைமை தாங்கினார். இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் விமல், தென்பழஞ்சி சுரேஷ், பெருங்குடி வசந்த் முன்னிலை வகித்தனர்.

    வட்ட செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழைகளுக்கு தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம், சலவைப் பெட்டி ஆகியவற்றை வழங்கினார்.

    இதில் மாவட்ட கவுன்சிலர் புவனேசுவரி ராஜசேகர், அரசு வழக்கறிஞர் சிவராஜா நீதி மன்னன், ஏசு சாமுவேல், இளைஞர் அணி சாரதி, அவனியாபுரம் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • திருப்பூர் மாவட்டம் முழுவதும் 8 சட்டமன்றத் தொகுதிகளில் பல்வேறு விழாக்கள் நடைபெற இருக்கிறது.
    • நற்பணி மன்றத்தில் இணைக்கும் இணைப்பு விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற தலைவர் என்.எஸ்.கே.சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் இன்று முதல் 10 நாட்கள் தொடர்ந்து விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் டிசம்பர் 2-ந் தேதி உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாநில தலைவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளைெயாட்டி தொடர்ந்து 10 நாட்கள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 8 சட்டமன்றத் தொகுதிகளில் பல்வேறு விழாக்கள் நடைபெற இருக்கிறது.

    குறிப்பாக ஆதரவற்றோர் விடுதிகளுக்கு அன்னதானம், பல துறை மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம், ரத்ததான முகாம், நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்குதல், பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை, புதிதாக உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற பெயர் பலகை திறப்பு விழா, மாற்று கட்சியில் இருந்து நண்பர்களை நற்பணி மன்றத்தில் இணைக்கும் இணைப்பு விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழா தொடக்கமாக உடுமலைப்பேட்டை நகராட்சி தேஜஸ் மகாலில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    10 நாட்கள் விழாவில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள், கழகத்தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும். இ்வ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருச்சி மாவட்ட வியாபார கழக நிர்வாகக் குழு உறுப்பினர் கே.சீனிவாசன் பிறந்தநாள் விழா நடை பெற்றது.
    • நிகழ்ச்சியில் பொருளாளர் கே.டி.தனபால், இணைச்செயலாளர் சீத்தாராமன் மற்றும் உறுப்பினர்கள் என்.கே.இஸ்மாயில்கான், ஆர்.ரவி, பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சி,

    திருச்சி மாவட்ட வியாபார கழக நிர்வாகக் குழு உறுப்பினர் கே.சீனிவாசன் பிறந்தநாள் விழா, தலைவர் ஜே.ஜே.எல்.ஞானராஜ் தலைமையில், துணைத்தலைவர் ரேசன் தாமஸ் ஆரோக்கியராஜ் மற்றும் செயலர் எம்.தங்கராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பொருளாளர் கே.டி.தனபால், இணைச்செயலாளர் சீத்தாராமன் மற்றும் உறுப்பினர்கள் என்.கே.இஸ்மாயில்கான், ஆர்.ரவி, பாலகிருஷ்ணன்,

    பாலசுப்பிரமணியன், ஜி.பாபு, பி.பத்திநாதன், பி.எம்.கண்ணன், ஜி.எம்.எழில் ஏழுமலை, எம்.எஸ்.நாகராஜன் மற்றும் மேலாளர் எம்.அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×