என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தை பிறந்தநாள் விழா
- 13 தங்க மோதிரம், ரூ.1 லட்சம், கேமரா திருட்டு
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் - இளவேனில் தம்பதியினரின் பெண் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் விழாவை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு கொண்டாடினர்.
அப்போது திருமண மண்டபத்தில் குழந்தைக்குப் பரிசாக வழங்கப்பட்ட 13 மோதிரம், 5 பவுன் நகை, 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக அஜித்குமார் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமண மண்டபத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






