என் மலர்
உள்ளூர் செய்திகள்

காங்கயத்தில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா
- காங்கயம் பா.ஜ.க. நகர தலைவர் சிவப்பிரகாஷ் தலைமை தாங்கினார்.
- காங்கயம் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காங்கயம் :
காங்கயம் நகர பஸ் நிலைய வளாகத்தில் நகர பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கயம் பா.ஜ.க. நகர தலைவர் சிவப்பிரகாஷ் தலைமை தாங்கினார். வாஜ்பாயின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கட்சி–யின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதே போல் காங்கயம் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Next Story






