என் மலர்
உள்ளூர் செய்திகள்

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
- குடியாத்தம் நகர அ.தி.மு.க. சார்பில் நடந்தது
- அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டது
குடியாத்தம்:
குடியாத்தம் நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு குடியாத்தம் படவேட்டு எல்லையம்மன் கோவில் அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் உருவ படத்துடன் மேள தாளங்களுடன் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா, முன்னாள் நகர மன்ற தலைவர் எம்.பாஸ்கர், நகர் மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, வழக்கறிஞர் கே.எம்.பூபதி, நகர நிர்வாகிகள் ஆர்.கே.அன்பு, வி.என்.தனஞ்செயன், கே.அமுதாகருணா, எஸ். என்.சுந்தரேசன், எஸ்.ஐ. அன்வர்பாஷா, அட்சயாவினோத்குமார், எம்.கே. சலீம், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ்.டி.மோகன்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் த.வேலழகன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் அன்னதானங்களை தொடங்கி வைத்தார். நகரில் உள்ள 36 வார்டுகளிலும் எம்.ஜி.ஆர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டது.






