என் மலர்
உள்ளூர் செய்திகள்

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
- எஸ்.புதூர் ஒன்றியத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
- மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா, ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா, ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், அவைத்தலைவர் நாகராஜன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக கூறி வந்த நீட் தேர்வு ரத்து இன்று வரை தீர்வு காணப்படாத ஒரு கனவாகவே இருந்து வருகிறது. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மக்களுக்கு பலனளிக்கும் துறையில் இருந்து வந்த 2 அமைச்சர்களை அமைச்சரவை மாற்றம் என்ற பெயரில் மாற்றம் செய்து ஏனோ தானோ என்ற பேரில் துறையை வழங்கி உள்ளார் என்றார்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் வாசு, குணசேகரன், சுப்பிரமணியன், வேலு, செந்தில்குமார், ஜெகன், ஒன்றிய தலைவர்கள் திவ்யா பிரபு, விஜயகுமார், ஒன்றிய அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் நேரு, நெற்குப்பை பேரூர் செயலாளர் அடைக்கப்பன், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் நாகராஜன், துலாவூர் பார்த்திபன் மற்றும் மாவட்ட, ஒன்றி,ய பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






