search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Birthday party"

    • நாடார் உறவின்முறை மகளிர் பள்ளியில் நாளை காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக–ளுக்கு பள்ளி தலைவர் எஸ்.எம்.பிச்சை பாண்டியன் பரிசுகள் வழங்கி பேசுகிறார்.

    மதுரை

    மதுரை கீரைத்துறை மேலதோப்புத்தெருவில் அமைந்துள்ள மதுரை அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பெருந்த–லைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா நாளை கல்வி வளர்ச்சி நாளாக நடைபெறுகிறது.

    பள்ளியின் செல்வி விளையாட்டு மைதானத்தில் நடை பெறும் விழாவில் மதுரை பட்டிமன்ற தென்றல் மதுரை ஜோதிகாராஜன் கலந்துகொண்டு மக்கள் மனம் கவர்ந்த நாயகன் என்ற தலைப்பில் சிறப்புரை–யாற்றுகிறார்.

    மேலும் விழாவை–யொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக–ளுக்கு பள்ளி தலைவர் எஸ்.எம்.பிச்சை பாண்டியன் பரிசுகள் வழங்கி பேசுகிறார்.

    விழாவுக்கான ஏற்பாடு–களை தலைவர் எஸ்.எம்.பிச்சை பாண்டியன், துணைத் தலைவர்கள் ஜெ.ஜெயசிங், ஏ.ராஜா ராம், செயலாளர் வி.என்.சிவக் குமார், பொருளாளர் ஜெ.தாமரை செல்வன், தலைமை யாசிரியை டி.சரஸ் வதி ஆகியோர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    • விருதுநகரில் நாளை காமராஜர் 121-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடு–களை நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    விருதுநகர்

    நாடார் மகாஜன சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கல்வித்தி–ருவிழாவாக விருதுநகரில் நாளை (15-ந்தேதி, சனிக் கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

    அதன்படி காலை 8.30 மணிக்கு காமராஜர் இல்லத் தில் நோட்டு, புத்தகங்களை காணிக்கையாக வைத்து அஞ்சலி செலுத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் காளீஸ்வரி குழுமம் ஏ.பி.செல்வராஜன் பங்கேற்கி–றார். தொடர்ந்து காலை 9 மணி முதல் 10 மணி வரை காமாட்சி என்ற காமராஜர் விளக்கிற்கு நாடார் மகளிர் மன்றத்தினர் மலர் அர்ச் சனை செய்கிறார்கள்.

    இதையடுத்து நாடார் மகளிர் மன்றத்தினர் திரு–விளக்கு ஏற்றுகிறார்கள். விழாவில் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் வரவேற் புரை ஆற்றுகிறார். தமிழ்நாடு மெர்க்கண்டைல் இயக்கு–னர்கள் பி.விஜய–துரை, கே.நாகராஜன், பி.சி.ஜி.அசோக்குமார், முன்னாள் இயக்குநர் சி.எஸ்.ராஜேந்தி–ரன், குளோபல் பாலிபேக் அதிபர் முரளிதரன் ஆகி–யோர் கல்வித்தாய், கல்வித் தந்தை விருதுகளை வழங்கு–கிறார்கள்.

    இதையடுத்து மாநில அளவில் பேச்சுப்போட்டி–யில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெறு–கிறது. இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ஆர்.ராதாகிருஷ் ணன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் தங்கப்பாண்டியன், ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன், ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், ஏ.ஆர்.ஆர்.ரகுமான், பழனி நாடார் ஆகியோர் கலந்துகொள்கி–றார்கள்.

    மேலும் விழாவில் முன் னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச் சர் மாபா க.பாண்டியராஜன், மான்ராஜ் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரெங்கன், எஸ்.எஸ்.கதிரவன், கே.சுரேஷ்குமார், பார்த்திபன், பா.ஜ.க. மாநில துணைத்த–லைவர் கரு.நாகராஜன், ஆறுமுக நயினார், அவனிமா–டசாமி, மாரிக்கண்ணு, வேலுச்சாமி, வி.எஸ்.கந்த–சாமி மற்றும் நிர்வாகி–கள் கலந்துகொள்கி–றார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடு–களை நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    • காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா நடந்தது.
    • அரண்மனை கோட்டை பிள்ளையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான திருநா வுக்கரசர் பிறந்தநாள் விழா நடந்தது. இதற்கு பொறுப்புக்குழு உறுப்பினர் பாரனூர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். விழாவையொட்டி அரண்மனை கோட்டை பிள்ளையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.மேலும் அரண்மனையில் உள்ள ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து கிருஷ்ணன், பால கிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் வாலாந்தரவை டாக்டர் மேகநாதன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் தமிழரசன், வீரபாண்டி, பொன்.பெரியார் பாண்டியன், திருப்புல்லாணி வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் முகம்மது யூசுப், மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் ராமசுப்பிரமணிய ராஜா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • திருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

    ராஜபாளையம்

    ராமசுப்பிரமணிய ராஜா 88-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ராஜபாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கீர்த்தனாஞ்சலி மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தது. ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, அவரது மகன் பி.வி.அபினவ் ராமசுப்பிரமணிய ராஜா மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அபினவ வித்யாதீர்த்த பாரதீ பாடசாலையில் அமைந்துள்ள ராமசுப்பிரமணிய ராஜாவின் திருஉருவ சிலைக்கு பூஜைகள் நடந்தது. பின்னர் அங்கிருந்து நினைவு ஜோதி ஓட்டத்தை வெங்கட்ராம ராஜா தொடங்கி வைத்தார்.

    நினைவு ஜோதியை ராம்கோ டெக்ஸ்டைல் பிரிவு ஊழியர்கள் ஏந்தி வந்தனர். இந்த ஓட்டம் சாரதம்பாள் கோவில் ராமசுப்பிரமணிய ராஜா இல்லமான ராமமந்திரம் வழியாக ராஜபாளையம் மில்ஸ் வந்தடைந்தது. அங்கு நினைவு ஜோதியை வெங்கட் ராமராஜா ஸ்தாபனம் செய்தார். பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் நேற்று முன்தினம் டி.எம்.கிருஷ்ணா இசைநிகழ்ச்சியும், நேற்று சஞ்ஜய் சுப்பிரமணியன் இசை நிகழ்ச்சியும் நடந்தன.

    • வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில மகளிரணி தலைவி பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.
    • தெற்கு வாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    மதுரை

    வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் தென் மண்டல அமைப்பாளரும், மாநில மகளிர் அணி தலைவியு மான அன்னலட்சுமி சகிலா கணேசனின் பிறந்தநாள் விழா மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.

    இதில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவி களை பாராட்டும் விதமாக கல்வி வளர்ச்சி விருதினை வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஹரிஹரன் பிள்ளை மற்றும் மாநில பொதுச் செயலாளர் வேளச்சேரி மாதவன், தென்னக மக்கள் இயக்கத் தின் நிறுவனத்தலைவர் அய்யப்பன் கார்த்தி, மாநில ஆலோசனை குழு தலைவர் ஆடிட்டர் முருகேசன் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்வின் வெள்ளா ளர் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து மாவட்ட நிர்வா கிகள், அனைத்து சமூக உறவுகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • வ.உ.சி.பேரவை நிறுவன தலைவர் அன்னலட்சுமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது.
    • பாண்டிய வெள்ளாளர் திருமண மகாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.

    மதுரை

    தென் மாவட்ட வ.உ.சி பேரவை நிறுவனத் தலைவரும், மதுரை அனுப்பானடியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஆட்டோ கணேசன் மகள் அன்னலட்சுமியின் பிறந்த நாள் விழா மதுரை தெற்கு வாசலில் அமைந்துள்ள பாண்டிய வேளாளர் திருமண மகாலில் நாளை (2-ந் தேதி) நடக்கிறது.

    இதையொட்டி காலை 9 மணிக்கு சிம்மக்கல்லில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு சிம்மக்கல்லில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    காலை 11 மணியளவில் மதுரை தெற்கு வாசலில் அமைந்துள்ள பாண்டிய வெள்ளாளர் திருமண மகாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. அதனைத் தொடர்ந்து வேளாளர் வெள்ளாளர் சமுதாயத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • கண்ணதாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • கவிதை தொகுப்பை வெளியிட்டு கவிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிறுகூடல் பட்டியில் கவியரசு கண்ணதாசன் 97-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூர் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு, பாரதி இலக்கியக் கழகம் இணைந்து 101 கவிஞர்களின் கவிதை தொகுப்பு வெளியீடு நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து கவிதை தொகுப்பை வெளியிட்டு கவிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் சேது பாஸ்கரா கல்வி குழும நிறுவனர் சேது குமணன், பழனியப்பன், பொற்கை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நூல் ஆசிரியர் ஜெயச்சந்திரன் செய்திருந்தார்.

    • ராஜபாளையத்தில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ராகுல்காந்தி நீடூழி வாழவேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53-வது பிறந்த நாள் விழா ராஜபாளையம் நகர் காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. ராஜபாளையம் நகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ராகுல்காந்தி நீடூழி வாழவேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ரங்கசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் சங்கர்கணேஷ், பால்கனி, ஜாபர், டைகர் சம்சுதீன், ரவிராஜா, சக்தி, வெங்கட்ராமன், வாசுதேவா ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நகர தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான

    ஆர்.சங்கர்கணேஷ் செய்திருந்தார்.

    • காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவ-மாணவிகளுக்கு நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர் தலைவர் கோபி தலைமையில் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி ராமநாதபுரம் அரண்மனை அருகே கோட்டைவாசல் விநாயகர் கோவிலில் அவரது பெயரில் அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மாணவ-மாணவிகளுக்கு நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினர்.

    இதில் மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி, மண்டபம் மேற்கு வட்டார தலைவர் அன்வர் அலி நத்தர், மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம், முன்னாள் காவல்துறை அதிகாரி முருகேசன், சிறுபான்மை துறை உதவி தலைவர் பனைக்குளம் ஹனீப் கான், மாவட்ட பொதுச்செயலாளர் மோதிலால் நேரு, அழகன்குளம் அல் அமீன், பொன்னுச்சாமி, பாண்டி, நகரச் செயலாளர் முகவை பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள தனியார் ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் காலை உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

    கீழக்கரை

    இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53-வது பிறந்தநாள் விழா ராமநாதபுரத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்புக்குழு சார்பில் முன்னாள் மாவட்ட தலைவரும், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினருமான ம.தெய்வேந்திரன் தலைமையில் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள தனியார் ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காலை உணவு மற்றும் இனிப்பு வழங்கினர்.

    முன்னதாக அரண்மனை கோட்டை வாசல், விநாயகர் கோவிலில் ராகுல்காந்தி பெயரில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முத்துவேல், மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் மேகநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன், போகலூர் வட்டார தலைவர் முனீஸ்வரன், மாவட்ட பொதுச்செயலாளர் தமிழரசன், முன்னாள் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொன்.பெரியார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மலரினால் அலங்கரித்து பூஜைகள் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே பரஞ்சேர்வழி கிராமத்தில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார். விழாவை முன்னிட்டு பரஞ்சேர்வழி கரிய காளியம்மன் கோவிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மலரினால் அலங்கரித்து பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு பூஜை ஏற்பாடுகளை ஒன்றிய மாணவர் அணியினர் செய்திருந்தனர்.

    இதில் அ.தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள், மாணவர் அணி பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    • ராஜபாளையத்தில் ராம்கோ நிறுவனர் ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் பி. எஸ். கே. நகர் பகுதியில் உள்ள நினைவாலயத்தில் கீர்த்தனாஞ்சலியும், புஷ்பாஞ்சலியும் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி. ராமசாமி ராஜா 129-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பி. எஸ். கே. நகர் பகுதியில் உள்ள நினைவாலயத்தில் கீர்த்தனாஞ்சலியும், புஷ்பாஞ்சலியும் நடந்தது. ராம்கோ சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜாவும், குடும்பத்தினரும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். சொக்கர் கோவிலில் ராமசாமி ராஜா படத்திற்கும், நினைவு ஜோதிக்கும் பூஜைகள் நடந்தன. ஜோதி ஓட்டத்தை ராம்கோ சேர்மன் தொழிலாளரிடம் வழங்கி தொடங்கி வைத்தார். ராம மந்திரம் இல்லம் முன்பு அமைந்துள்ள சிலைக்கு பூஜைகள் நடைபெற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    ராம்கோ சிமெண்டு தொழிற்சாலை வளாகத்தில் ராம்கோ சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ரத்த தானம், அன்னதானம், மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தொடர் ஜோதி ஓட்டத்தின்போது ராம்கோ மில் தொழிலாளர்கள் ஜோதியை விருதுநகர் துலுக்கப்பட்டியில் அமைந்துள்ள ராம்கோ சிமெண்டு ஆலைக்கு கொண்டு சென்றனர். விழாவில் ராம்கோ குடும்பத்தினர்கள், மற்றும் நகர பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ×