என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா
    X

    திருநாவுக்கரசர் எம்.பி. பிறந்த நாளையொட்டி ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது.

    காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா

    • காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா நடந்தது.
    • அரண்மனை கோட்டை பிள்ளையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான திருநா வுக்கரசர் பிறந்தநாள் விழா நடந்தது. இதற்கு பொறுப்புக்குழு உறுப்பினர் பாரனூர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். விழாவையொட்டி அரண்மனை கோட்டை பிள்ளையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.மேலும் அரண்மனையில் உள்ள ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து கிருஷ்ணன், பால கிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் வாலாந்தரவை டாக்டர் மேகநாதன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் தமிழரசன், வீரபாண்டி, பொன்.பெரியார் பாண்டியன், திருப்புல்லாணி வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் முகம்மது யூசுப், மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×