என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராகுல்காந்தி பிறந்தநாள் விழா
- ராஜபாளையத்தில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ராகுல்காந்தி நீடூழி வாழவேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
ராஜபாளையம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53-வது பிறந்த நாள் விழா ராஜபாளையம் நகர் காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. ராஜபாளையம் நகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ராகுல்காந்தி நீடூழி வாழவேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ரங்கசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் சங்கர்கணேஷ், பால்கனி, ஜாபர், டைகர் சம்சுதீன், ரவிராஜா, சக்தி, வெங்கட்ராமன், வாசுதேவா ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நகர தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான
ஆர்.சங்கர்கணேஷ் செய்திருந்தார்.
Next Story






