என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்லடத்தில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா
- வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது.
- பா.ஜ.க. சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் மருந்துகள் வைக்கும் இரும்பு அலமாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் மருந்துகள் வைக்கும் இரும்பு அலமாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.மணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கே.சி.எம்.பி.சீனிவாசன், மாவட்டத் துணைத் தலைவர்கள் வினோத் வெங்கடேஷ், ஜி.கே.எஸ்.பாலு மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் வடிவேலன்,ரமேஷ், தினேஷ், பன்னீர் செல்வகுமார், கனக செல்வம், நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story






