search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "banned"

    ராமநாதபுரத்தில் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு அடிக்கடி தடை விதிக்கப்படுவதால் மீன்களின் விலை அதிக விலைக்கு உயர்ந்துள்ளது.

    ராமநாதபுரம்:

    மன்னார் வளைகுடா பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல்சீற்றம் காரணமாக கடலுக்கு செல்லும் மீன்பிடி படகுகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் பகுதிக்கு மீன் வரத்து குறைந்துள்ளது. நாட்டுப் படகுகளில் கொண்டு வரப்படும் மீன்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் அசைவ பிரியர்கள் காய்கறி கடைகளை தேடி செல்கின்றனர்.

    ராமநாதபுரம் நகர் பகுதிக்கு தினந்தோறும் கீழக்கரை, ஏர்வாடி, ராமேசுவரம், மண்டபம், பாம்பன், வாலிநோக்கம், முந்தல் பகுதியிலிருந்து மீன்கள் விற்பனைக்கு வருகிறது. ராமநாதபுரம் சாலை தெரு, பாரதி நகர் பகுதியில் மீன்மார்க்கெட் உள்ளது. கடந்த சில மாதங்களாக முன்பு வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக அடிக்கடி புயல் மையம் கொண்டது. இதனால் கடல் சீற்றமாக இருந்தது.

    இதையடுத்து மீன்வர்கள் கடலுக்கு செல்ல அடிக்கடி தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமநாதபுரம் நகர் பகுதிக்கு மீன் வரத்து குறைந்தது. தொடர்ந்து மார்க்கெட்டில் மீன் கடைகள் திறக்கப்படவில்லை. தற்போது கடல்சீற்றம் குறைந்து காணப்படுகிறது. மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு சென்று வருகின்றனர்.

    தற்போது நாட்டுப் படகிலும் குறைந்த அளவு மீன்களே வரும் நிலையில் அவைகள் ராமநாதபுரம் நகர் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. வரத்து குறைவால் அசைவ பிரியர்கள் வேறு வழியில்லாமல் கூடுதல் விலை கொடுத்து அதிருப்தியுடன் மீன்களை வாங்கி செல்கின்றனர்.

    மீன் மார்க்கெட்டில் வெளமீன், கிலக்கான், மாவுளா, போன்ற மீன்கள் கிலோ ரூ.300க்கும், முரல் மீன் கிலோ ரூ.300 வரையிலும், கும்ளா மீன் ரூ.250 வரையிலும், நண்டு, இறால் அதிகபட்சமாக ரூ.500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை ஏற்றத்தால் ஏழை, எளிய மக்களின் பார்வை காய்கறி கடைகளின் பக்கம் திரும்பி உள்ளது.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மகன் முஸ்லிம்களுக்கு எதிராக பதிவிட்டதால் அவரது கணக்கை பேஸ்புக் முடக்கி வைத்தது. #IsraelPM #YairNethanyahu #Facebookbanned
    ஜெருசலேம்:

    இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேதன்யாகு. இவரது மகன் யாய்ர் நேதன்யாகு. சமீபத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இரு போலீசார் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வகையில் யாய்ர் நேதன்யாகு தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.



    1. இஸ்ரேல் மண்ணை விட்டு யூதர்கள் அனைவரும் வெளியேறும் வரை.., 2. இஸ்ரேல் மண்ணை விட்டு முஸ்லிம்கள் அனைவரும் வெளியேறும் வரை.. இந்த நாட்டில் அமைதி இருக்காது. நான் இரண்டாவதை நம்புகிறேன் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த பதிவு வெளியான சில நிமிடங்களில் யாய்ர் நேதன்யாகுவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது. பின்னர், சர்ச்சைக்குரிய அந்த கருத்து நீக்கப்பட்டு சுமார் 24 மணிநேரத்துக்கு பின்னர் அந்த பக்கம் செயல்பட தொடங்கியது.

    இதுதொடர்பாக மீண்டும் கருத்து தெரிவித்த யாய்ர் நேதன்யாகு, பேஸ்புக் போலீஸ் என்னை கண்டுபிடித்து விட்டது, வாழ்த்துகள்! என குறிப்பிட்டார்.

    ஹமாஸ், ஹெஸ்புல்லா மற்றும் ஈரான் அரசை சேர்ந்தவர்களுக்கு பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வ கணக்குகள் உள்ளன. இதுதவிர யூதர்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் கணக்குகளும் செயல்பட்டு வருகின்றன.

    இவற்றின் மூலமாக யூதர்களை ஒழித்துக்கட்ட வேண்டும். யூதர்களை கொல்ல வேண்டும் என்றெல்லாம் பிரசாரம் செய்யப்படுகிறது. என்னையும் என் குடும்பத்தாரையும் கொல்லப்போவதாக நேரடியாகவே மிரட்டல்கள் வருகின்றன. ஆனால், இவை எல்லாம் பேஸ்புக் போலீஸ் கண்களில் படவில்லை.

    கருத்து சுதந்திரம் என்ற முத்திரையுடன் இவற்றை எல்லாம் அனுமதிக்கும் பேஸ்புக் போலீஸ் என்னை கண்டுபிடித்து எனது கணக்கை முடக்கியது கண்டனத்துக்குரியது என அந்த பதிவில் யாய்ர் குறிப்பிட்டுள்ளார். #IsraelPM #YairNethanyahu  #Facebookbanned
    தருமபுரி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி கொல்லங்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவர் எஸ்.வி. ரோட்டில் பீடா கடை நடத்தி வருகிறார். மதேஸ்வரன் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து தருமபுரி டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் அங்கு சென்று மாதேஸ்வரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பாக்கெட்டு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இது போன்று அரூர் அருகே கீழ்பாட்சா பேட்டை பகுதியில் கிருஷ்ணன் (53என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை அரூர் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 பாக்கெட்டு புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    தமிழக அரசு அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த உள்ள பிளாஸ்டிக் தடை சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என விருதுநகர் தொழில்துறை சங்கம் கோரி உள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க தலைவர் வி.வி.எஸ்.யோகன், முதல்- அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் ஆணை எண் 84-ன்படி குறு மற்றும் சிறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் பொருட் கள் அடுத்த ஆண்டு முதல் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லை. இதனால் குறு, சிறு நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.

    இந்தநிலையில் அந்த மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை தடுக்க வாய்ப்பு இருக்காது. பிற மாநிலங்களில் தடை இல்லாமல் தமிழகத்தில் மட்டும் தடை செய்வதால் நம்முடைய உற்பத்தி மற்றும் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். அதிலும் பிளாஸ்டிக் உற்பத்தியை வாழ்வாதாரமாக கொண்டுள்ள சிறு நிறுவனங்களும் அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். தமிழகத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தெடுக்கும் முறையை முழுமையாக செயல்படுத்திட வேண்டும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான பிளாஸ்டிக் தார்சாலை இதுவரை அமைக்கப்படவில்லை. இவைகளை நிறைவேற்றுவதால் கழிவு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்து மாசு ஏற்படுவதை தடுக்க முடியும்.

    எனவே பொதுமக்கள் நலனிலும், குறு,சிறு நிறுவனங்களின் வளர்ச்சியிலும் அக்கறை உள்ள தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு அமல்படுத்த உள்ள தடையை உடனடியாக செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்து அதற்கு நல்ல தீர்வு காண வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    கர்நாடகா முழுவதும் புகைப்பிடிக்க தடை உடனடியாக அமலுக்கு வந்தது என்று அந்த மாநில மந்திரி யு.டி.காதர் அறிவித்தார். #Karnataka #SmokingBan
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து பெங்களூருவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் நகர மேம்பாட்டு துறை மந்திரி யு.டி.காதர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் உள்ள அம்சங்களை மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுபான விடுதி, உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் ஏற்கனவே புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. விமான நிலையங்களில் வரி இல்லாத கடைகளில் மதுபானம் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டு உள்ளது. புகையிலை பொருட்கள், மதுபானம் மீதான வரி சலுகையை திரும்ப பெற அரசு ஆலோசித்து முடிவு எடுக்க இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, மாநில அரசு கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 30-க்கும் அதிகமான இருக்கைகள் இருக்கும் மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகளில் புகைப்பிடிக்க தனியாக இடம் ஒதுக்க சட்டத்தில் இடம் உள்ளது. இருப்பினும் அங்கு 18 வயது நிரம்பாதவர்கள், புகைப்பழக்கம் இல்லாத பொதுமக்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும். புகைப்பிடிக்க ஒதுக்கும் இடத்தில் மதுபானம், அனைத்து வகையான தின்பண்டங்களை விற்கக்கூடாது. தனியாக இடம் ஒதுக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, தீயணைப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். இதை மீறினால் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 
    ‘கஜா புயல்’ காரணமாக நாளை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் குமரி மாவட்ட மீனவர்கள் 2 நாள் கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #GajaCyclone #GajaStorm #Fishermen
    நாகர்கோவில்:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ‘கஜா’ புயல் தீவிரம் அடைந்துள்ளது.

    இந்த புயலானது கடலூர்-பாம்பனுக்கு இடையே நாளை மறுநாள் (15-ந்தேதி) கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் பரவலாக நேற்று மழை பெய்தது. நாகர்கோவில், சுருளோடு, ஆரல்வாய்மொழி, மயிலாடி, கொட்டாரம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் கனமழை கொட்டி தீர்த்ததால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சிற்றாறு-2-ல் அதிகபட்சமாக 41 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    கஜா புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் 48 மணி நேரம் கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் உள்ள பங்கு தந்தைகள், மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.



    இது குறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குமரி கடல் பகுதியில் இன்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுமென்று எச்சரிக்கை வந்துள்ளது. இதையடுத்து மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் 2 நாள் கடலுக்கு செல்லக்கூடாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.  #GajaCyclone #GajaStorm #Fishermen

    தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ் பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் காவேரிப்பட்டணம் கொசமேடு சினிமா தியேட்டர் பகுதியில் ரோந்து சென்றனர். 

    அப்போது அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டு இருந்த அப்பாசாமிநாயுடு தெருவை சேர்ந்த கார்த்திகேயண்(வயது 45) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த பணம்ரூ100 மற்றும் 5 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோல் லாட்டரி சீட்டு விற்ற வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடதக்கது.

    இதேபோல் பாரூர் மற்றும் போச்சம்பள்ளி போலீசார் புலியூர், போச்சம்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த புலியூர் பகுதியை சேர்ந்த முகமது(39), காவேரிப்பட்டணம் அன்னாநகர் செவுகத் பாஷா(42) என்பவர்களிடமிருந்து தலா 5 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
    நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் துணிப்பை பயன்பாட்டுக்கு வியாபாரிகள் மாறி இருக்கின்றனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ‘உன்னத உதகை‘ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகள் மூலமாகவும், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலமாகவும் பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தவிர மாவட்டத்தில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்வோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டு சுற்றுலா வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அதில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால், பறிமுதல் செய்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதற்கான ரசீது வினியோகிக்கப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், நீலகிரி மாவட்ட வியாபாரிகள் துணிப்பை பயன்பாட்டுக்கு மாறி இருக்கின்றனர். தங்கள் கடைகளில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களை துணிப்பையில் போட்டு கொடுத்து வருகின்றனர். மேலும் இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக வாழை இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. துரித உணவகங்களில் பாக்கு மட்டையால் ஆன தட்டுகள், தேநீர் விற்பனை நிலையங்களில் சில்வர் டம்ளர்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகளில் எளிதில் மக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்கள் பேக்கிங் செய்து தரப்படுகின்றன. மேலும் பேக்கிங் செய்வதற்கு செய்தித்தாள்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தவிர கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களும் துணிப்பைகளை கொண்டு வருவதால், பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து வருகிறது. இதனால் பிளாஸ்டிக் ஒழிப்புக்கான மாவட்ட நிர்வாகம் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளது.

    மேலும் தமிழக அரசும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    அமிர்தியில் அரிய வகை பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அடுக்கம்பாறை:

    வேலூரை அடுத்த கணியம்பாடி அருகே அமிர்தியில் சிறு வன உயிரின பூங்கா உள்ளது. ஜவ்வாது மலைத்தொடரில், இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவில் முதலை, மான், முள்ளம்பன்றி, நரி, பாம்பு வகைகள், மயில், வெள்ளை மயில் உள்ளிட்டவைகள் உள்ளன.

    இந்த பூங்காவை உரசியபடி பீமன் நீர்வீழ்ச்சி எனும் கொட்டாறு செல்கிறது. ஜவ்வாதுமலையில் இருந்து உருவாகும் இந்த மழைநீர் ஓடைக்கால்வாய்கள் மூலமாக அமிர்தி நீர்வீழ்ச்சி வழியாக நாகநதி ஆற்றுக்கு செல்கிறது. இயற்கை அழகுடன் அமைந்துள்ள இந்த அமிர்திக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.



    குறிப்பாக பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக வந்து வன உயிரின பூங்காவை பார்வையிடுவதுடன், நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் செய்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பசுமையுடன் அமைந்துள்ள அமிர்திக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து அரிய வகை பறவைகள் வரத் தொடங்கியுள்ளது. மேலும் அமிர்தி காட்டில் அரியவகை பறவைகள் இடம் பெயர்ந்ததுடன், கூடும் கட்டியுள்ளது. இந்த கூடுகளில் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து உள்ளது.

    இதனை அறிந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில நாட்களாக அமிர்திக்கு வரத்தொடங்கியுள்ளனர். உள்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த அமிர்தி வனக்காட்டில் பறவைகளை பார்வையிட்டு, ஆராய்ச்சி கட்டுரைகளும் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அமிர்திக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கவும், மேளம் அடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக வனத்துறை சார்பில் தண்டோரா மூலம் மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக அமிர்தி வனச்சரக அலுவலர் ராஜா தெரிவித்தார். 
    சாரிடான் மாத்திரை உள்பட 328 வகையான மருந்து தயாரிப்பில் மேற்படி மோசடிகள் நடைபெறுவது மீண்டும் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. #Saridon #CombinationDrugs #Banned #Govenment
    புதுடெல்லி:

    2 அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துகள் எப்.டி.சி. மருந்துகள் என அழைக்கப்படுகிறது. இந்த மருந்துகளை இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் சோதனை செய்தது. அப்போது 344 வகையான மருந்துகள் குறிப்பிட்ட விகித சேர்க்கை இன்றியும், அலட்சியமாகவும் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த மருந்துகளால் உடல் நலத்துக்கு கேடு என்பதால் கடந்த 2015-ம் ஆண்டு அவை தடை செய்யப்பட்டன. இதை எதிர்த்து சில மருந்து நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த மருந்துகளின் தயாரிப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்யுமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.



    அதன்படி இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் சிறப்பு வல்லுனர் குழு மீண்டும் இந்த மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 328 வகையான மருந்து தயாரிப்பில் மேற்படி மோசடிகள் நடைபெறுவது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. எனவே அந்த மருந்துகளை தடை செய்யுமாறு நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இதைத்தொடர்ந்து அந்த மருந்துகளை தயாரித்தல், விற்பனை மற்றும் வினியோகத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த மருந்துகள் பெரும்பாலும் வலி நிவாரணிகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கிருமி நாசினிகள் ஆகும். இதில் பிரபல தலைவலி மாத்திரையான சாரிடானும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை தவிர மேலும் 6 எப்.டி.சி. மருந்துகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  #Saridon #CombinationDrugs #Banned #Govenment
    பிரான்ஸ் நாட்டில் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளின் இடைவேளை நேரம் உள்பட நாள் முழுவதும் மாணவ- மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #France #school #phones
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டில் தற்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளின் இடைவேளை நேரம் உள்பட நாள் முழுவதும் மாணவ- மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனினும் பேரிடர் காலங்களிலும் மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்கும் இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பள்ளிகளுக்கு செல்லும் போது மாணவர்கள் தங்களது செல்போன்களை அனைத்து வைப்பதுடன் அவற்றை பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.



    இந்த சட்டத்தை உயர் நிலைப்பள்ளிகளும் தாமாக முன்வந்து செயல்படுத்தலாம். தடையை மீறி செல்போன் பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்யும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.#France #school #phones
    பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தியேட்டர்கள் மற்றும் பொது இடங்களில் ஆபாச சினிமா பட போஸ்டர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Pakistanminister ##FayazulHasan
    லாகூர்:

    பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் இங்கு இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்- இ-இன்சாப் கட்சி ஆட்சியை பிடித்தது.

    அங்கு புதிய தகவல் துறை மந்திரியாக பயாஸ்- உல்-ஹசன் சோகன் நியமிக்கப்பட்டார். அவர் பதவி ஏற்றபிறகு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

    அதன்படி பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தியேட்டர்கள் மற்றும் பொது இடங்களில் ஆபாச சினிமா பட போஸ்டர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டால் முதலில் அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறினால் அந்த தியேட்டர் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    பயாஸ்- உல்-ஹசன் சோகன்

    மனிதாபிமான மற்ற முறையில் ஒரு பெண்ணின் அரை நிர்வாண போஸ்டரை எப்படி வைக்கிறார்கள் என தெரியவில்லை. இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலில் இம்ரான்கான் மதவாத கட்சிகளின் கடும் ஆதரவில் தான் வெற்றி பெற்றார். சோகன் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியில் இருந்து பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சிக்கு வந்தவர் என்பது குறிப்பிடதக்கது. #Pakistanminister ##FayazulHasan
    ×