search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan minister"

    • சென்ற வாரம், ரஷியாவின் லூனா-25 முயற்சி தோல்வி அடைந்தது
    • பாகிஸ்தான் ஊடகங்கள் சந்திரயான் குறித்து தகவல்களை வெளியிட வேண்டும்

    2003 ஆகஸ்ட் 15 அன்று இந்திய சுதந்திர தின விழாவில் அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தனது உரையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) மூலம் சந்திரயான் எனும் பெயரில் நிலவிற்கு விண்கலங்களை அனுப்பி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் திட்டம் குறித்து முதன்முதலாக அறிவித்தார்.

    தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திரயான் திட்டத்தை ஊக்குவித்து வருவதை தொடர்ந்து, அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திரயான்-3 எனும் விண்கலத்தை கடந்த ஜூலை 14 அன்று ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக அனுப்பியது.

    இந்த விண்கலம் இன்று மாலை 06:04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுவரை நிலவின் தென் துருவத்தில் எந்த நாடும் விண்கலத்தை இறக்கியதில்லை.

    சமீபத்தில் உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியா, லூனா-25 எனும் பெயரில் இதே போன்று நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை இறக்கும் ஒரு முயற்சியை மேற்கொண்டது. ஆனால், சென்ற வாரம் லூனா-25, நிலவில் நொறுங்கி விழுந்ததையடுத்து இந்த முயற்சி தோல்வியடைந்தது.

    இதன் பின்னணியில் இந்தியாவின் முயற்சி வெற்றி அடைவதை உலகமே பெரும் எதிர்பார்ப்புடன் ஆர்வமாக எதிர்நோக்கியுள்ளது.

    இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் முந்தைய அதிபர் இம்ரான் கான் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக இருந்த ஃபவத் அஹ்மத் ஹுசைன் சவுத்ரி, இந்தியாவின் முயற்சியை வரவேற்றுள்ளார்.

    இது குறித்து எக்ஸ் (டுவிட்டர்) பதிவில் அவர், "பாகிஸ்தான் ஊடகங்கள் இந்தியாவின் சந்திரயான் நிலவில் இறங்கும் நிகழ்வை பிரபலப்படுத்தி இந்த செய்தியை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். இது மனித குலத்திற்கே ஒரு மகத்தான தருணம். குறிப்பாக, இந்திய மக்களும், விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் பெருமைப்பட வேண்டிய நிகழ்வு. அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்," என்று கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் அமைச்சர் இந்தியாவையும், இந்திய விஞ்ஞானிகளையும் பாராட்டுவதை இரு நாடுகளுக்கிடையே நல்லுறவை வளர்க்கும் ஒரு முயற்சியாக வரவேற்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    • இந்திய பிரதமர் மோடியை விட பாகிஸ்தானுக்கு இம்ரான்கான் ஆபத்தானவர்.
    • இந்திய பிரதமர் மோடியை பாகிஸ்தான் மந்திரி விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார். அவர் மீது ஊழல், தேச துரோகம், பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த மாதம் இம்ரான்கான் கோர்ட்டுக்கு வந்த போது அவரை துணை ராணுவம் கைது செய்தது. இதனால் நாடுமுழுவதும் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

    கலவரத்தை தூண்டியதால் இம்ரான்கான் மீது பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது.

    இந்தநிலையில் இந்திய பிரதமர் மோடியை விட இம்ரான்கான் பாகிஸ்தானுக்கு ஆபத்தானவர் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி குவாஜா ஆசீப் கூறி உள்ளார்.

    தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வெளிநாட்டு எதிரி பற்றி உங்களுக்கு தெரியும். ஆனால் பாகிஸ்தானில் பிறந்து, அந்த தேசத்தில் இருக்கும் (இந்தியா) எதிரியை விட பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எதிரியை மக்கள் இன்னும் அடையாளம் காண முடியவில்லை.

    இந்திய பிரதமர் மோடியை விட பாகிஸ்தானுக்கு இம்ரான்கான் ஆபத்தானவர். இதை மக்கள் கண்டுகொள்ளவே இல்லை. அவர் நம்மிடையே இருக்கிறார். இந்த எதிரி உண்மையில் நமது பாதுகாப்பிற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார். இதற்கு மே 9-ந்தேதி நடந்த கலவரமே சான்றாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய பிரதமர் மோடியை பாகிஸ்தான் மந்திரி விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    • பாகிஸ்தான் மீது மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகளை கூறினால் பாகிஸ்தான் அமைதியாக கேட்டுக் கொண்டு இருக்காது.
    • தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவை விட பாகிஸ்தான் அதிகம் தியாகம் செய்துள்ளது.

    இந்திய பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளி உறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

    இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ கொடும்பாவிகளை எரித்தனர்.

    இந்தநிலையில் இந்தியாவுக்கு, பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளது. பாகிஸ்தான் ஆளும் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பெண் தலைவரும், அமைச்சருமான ஷாஜியா மாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ஷாஜியா மாரி கூறியதாவது:-

    பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிடக்கூடாது. எங்களது அணுசக்தி நிலை அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. தேவை ஏற்பட்டால் நாங்கள் பின்வாங்க மாட்டோம். எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரியும்.

    எங்களை அறைந்தால் நாடு பின்வாங்காது. பாகிஸ்தானும் சமமான தீவிரத்துடன் பதிலடி கொடுக்கும். இந்தியாவின் பிரதமர் நாட்டில் வெறுப்பை மட்டுமே பரப்புகிறார்.

    மோடி அரசாங்கம் சண்டையிட்டால் பிறகு அவருக்கு தக்க பதிலடி கிடைக்கும். பாகிஸ்தான் மீது மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகளை கூறினால் பாகிஸ்தான் அமைதியாக கேட்டுக் கொண்டு இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஷாஜியா மாரி தனது டுவிட்டர் பக்கத்தில், பாகிஸ்தான் பொறுப்புள்ள அணுசக்தி நாடு. இந்திய ஊடகங்களில் உள்ள சில கூறுகள் பீதியை உருவாக்க முயலுகின்றன.

    தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவை விட பாகிஸ்தான் அதிகம் தியாகம் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

    பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தியேட்டர்கள் மற்றும் பொது இடங்களில் ஆபாச சினிமா பட போஸ்டர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Pakistanminister ##FayazulHasan
    லாகூர்:

    பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் இங்கு இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்- இ-இன்சாப் கட்சி ஆட்சியை பிடித்தது.

    அங்கு புதிய தகவல் துறை மந்திரியாக பயாஸ்- உல்-ஹசன் சோகன் நியமிக்கப்பட்டார். அவர் பதவி ஏற்றபிறகு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

    அதன்படி பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தியேட்டர்கள் மற்றும் பொது இடங்களில் ஆபாச சினிமா பட போஸ்டர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டால் முதலில் அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறினால் அந்த தியேட்டர் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    பயாஸ்- உல்-ஹசன் சோகன்

    மனிதாபிமான மற்ற முறையில் ஒரு பெண்ணின் அரை நிர்வாண போஸ்டரை எப்படி வைக்கிறார்கள் என தெரியவில்லை. இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலில் இம்ரான்கான் மதவாத கட்சிகளின் கடும் ஆதரவில் தான் வெற்றி பெற்றார். சோகன் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியில் இருந்து பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சிக்கு வந்தவர் என்பது குறிப்பிடதக்கது. #Pakistanminister ##FayazulHasan
    ×