search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bananas"

    • பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
    • ஆடி- 18 பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.300-க்கும் ஏலம் போனது.

    தற்போது ஆடி- 18 பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.500-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.600-க்கு விற்பனையானது. ஆடி- 18 பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
    • மொத்தம் 2100 வாழைத்தார் ஏலத்திற்கு வந்திருந்தன. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.

    ஆடி 18 விடுமுறை என்பதால் கடந்த 1-ந் தேதியே வாழைப்பழங்கள் ஏலம் நடைபெற்றது. இதில் கதலி ஒரு கிலோ ரூ.45-க்கும், நேந்திரன் ஒரு கிலோ ரூ.41-க்கும் விலை போனது.

    பூவன் ஒருத்தார் ரூ.780-க்கும், செவ்வாழை ஒருத்தார் ரூ.720-க்கும் ரொபஸ்டா ஒருத்தார் ரூ.560-க்கும் ரஸ்தாலி ஒருத்தார் ரூ.580-க்கும், முந்தன் ஒருத்தார் ரூ.710-க்கும், பச்சைநாடன் ஒருத்தார் ரூ.470-க்கும் விலை போனது. மொத்தம் 2100 வாழைத்தார் ஏலத்திற்கு வந்திருந்தன. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.

    ஏலத்தில் கோபி சத்தியமங்கலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஏலத்தில் கலந்து கொண்டு வாழைப்பழங்களை வாங்கி சென்றனர்.

    • கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
    • ஆடி அமாவாசையை முன்னிட்டு‌ நடைபெற்ற ஏலத்திற்கு 1500 வாழைத்தார்களை விவசாயி கள் கொண்டு வந்திருந்தனர்.Bananas, price, rise, வாழைத்தார், விலை, உயர்வு,

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டிமற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.3-க்கும் ஏலம் போனது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.450-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கு விற்பனையானது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு‌ நடைபெற்ற ஏலத்திற்கு 1500 வாழைத்தார்களை விவசாயி கள் கொண்டு வந்திருந்தனர்.வாழைத்தார்கள்விலை உயர்வ டைந்துள்ள தால்வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பயிர்களுக்கிடையில் ஊடுபயிராக வாழை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
    • ஒரு பூவன் பழம் ரூ. 8 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    உடுமலை:

    உடுமலை பகுதியில் ஆண்டுப் பயிரான வாழை சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ஆண்டு முழுவதும் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்ட போதும் அறுவடை சமயத்தில் போதிய விலை கிடைக்காமல் தவிக்கும் நிலை இருந்து வந்தது. இந்தநிலையில் தற்போது வாழைப்பழத்துக்கு நல்ல விலை கிடைத்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    உடுமலை பகுதியில் தனிப்பயிராகவோ, தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கிடையில் ஊடுபயிராகவோ வாழை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. திட்டமிட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடவு செய்யும் விவசாயிகளுக்கு சீரான இடைவெளியில் அறுவடை செய்வதன் மூலம் விலை குறைவால் ஏற்படும் பாதிப்புகளை ஒருசில விவசாயிகள் தவிர்க்கின்றனர்.

    நமது பகுதியைப் பொறுத்தவரை பூவன், ரஸ்தாளி, தேன் கதலி, கற்பூரவள்ளி போன்ற ரகங்கள் அதிக பயன்பாட்டில் உள்ளது. இதுதவிர செவ்வாழை சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக ஆடி மாதத்தில் தான் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். ஆனால் கடந்த சில வாரங்களாகவே அதிக வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளாத வாழை மரங்கள் பலத்த காற்றினால் முறிந்து சேதமடைந்துள்ளன. இதனால் சந்தைக்கு வாழைத்தார்களின் வரத்து குறைவாகவே உள்ளது. அத்துடன் ஆடி மாதத்தில் கோவில் திருவிழாக்கள் போன்றவை நடைபெறுவதால் வாழைப்பழங்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதனால் தற்போது வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. ஆனாலும் சில்லறை விலையோடு ஒப்பிடும்போது விவசாயிகளிடம் மிகக்குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது சில்லறை விற்பனையில் ஒரு பூவன் பழம் ரூ. 8 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • வாய்க்காலின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் விவசாய விளை பொருட்களை சாகுபடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
    • நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு நிலங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் ஆக்கிரமி ப்பாளர்களிடமிருந்து மீட்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் நிரம்பி வழியும். கடந்தாண்டு வடகிழக்கு பருவ மழையின் போது வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.

    இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் அந்தியூர் பகுதியில் பெய்த கனத்த மழை காரணமாக மீண்டும் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறிக் கொண்டி–ருக்கிறது.அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் சுமார் 3 ஆயிரம் மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    விவசாயிகளின் கோரி–க்கையை ஏற்று தமிழ்நாடு அரசு, அணை–யில் இருந்து ஆண்டு தோறும் புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் தண்ணீர் திறந்து விடுகிறது.

    இதில் வாய்க்கால் பாசன த்திற்காக வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 3 வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்படுகின்றன. இதன்மூலம் விவசாயிகள் பயன் பெற்ற வருகின்றனர். வாய்க்கால் பாசனப் பகுதியில் உள்ள புறம்போக்கு இடங்கள், நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

    வாய்க்காலின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் அப்பகுதியில் உள்ளோர், விவசாய விளை பொருட்களை சாகுபடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இது சம்பந்தமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், வரட்டுப்ப–ள்ளம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் வாய்க்கால்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்து எல்லைக்கல் நட்டனர்.

    எச்சரிக்கை

    மேலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தவர்க–ளுக்கு, சாகுபடி செய்யக்கூ–டாது என எச்சரிக்கையும் விடப்பட்டது. ஏற்கனவே சாகுபடி செய்திருந்தவர்கள் அறுவடை செய்த பின்பு, மீண்டும் சாகுபடி செய்யக்கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டிப்புடன் எச்சரிக்கை விடுத்தனர்.

    ஆனால், வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் வட்டக்காடு பகுதியில் உள்ள முதல் வாய்க்கால் பகுதியில் உள்ள புறம்போக்கு இடங்களில் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த நபர்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    பொதுப்பணித்துறை அதிகாரிகளின் எச்சரி–க்கையும் மீறி அப்பகுதியில் உள்ள நபர்கள் அப்பகுதியை ஆக்கிரமித்து சாகுபடி செய்து வருகின்றனர்.

    வட்டக்காடு பகுதியில் உள்ள வாய்க்கால்களின் இரண்டு புறங்களிலும் ஆக்கிரமிப்பாளர்கள், தொடர்ந்து பொதுப்ப ணித்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையை பொருட்ப–டுத்தாமல் வாழை, சோளம் உள்ளிட்ட விளை பொருட்கள் சாகுபடி செய்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது,

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் எல்லைக்கல் நட்டதற்குப் பிறகும் அப்பகுதியை சேர்ந்த சிலர் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதிகளில் சாகுபடி செய்து வருகின்றனர்.

    நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு நிலங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் ஆக்கிரமி ப்பாளர்களிடமிருந்து மீட்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இல்லையேல், வாய்க்கால் புறம்போக்கு பகுதியை பயன்படுத்தி வந்த நபர்களிடமிருந்து, எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தினார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக வாடகை வசூல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாழைகளின் குருத்துக்களை குரங்குகள் முறித்து போட்டுள்ளன.
    • விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    களக்காடு:

    திருக்குறுங்குடியில் இருந்து வனத்துறை சோதனை சாவடிக்கு செல்லும் சாலையில் செட்டியாபத்து பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்த குரங்குகள் 100-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்துள்ளன. வாழைகளின் குருத்துக்களை குரங்குகள் முறித்து போட்டுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாசமான வாழைகள் 3 மாதமே ஆன மட்டி ரக வாழைகள் ஆகும். எனவே நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • வேரின் நுனி பாகம் அழுகி புதிய வேர் தோன்றாமல் செய்து விடும்.
    • நூற்புழுக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைவதுடன், வாழைத்தார்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்

    வெள்ளகோவில்:

    வாழையில் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து வேளாண் உதவி பேராசிரியர்கள் ப.மஞ்சு (தாவர நூற்புழுவியல்) மற்றும் சு.ஹேமலதா (மண்ணியல்) ஆகியோர் விளக்கம் தருகின்றனர். அவர்கள் கூறியதாவது:-

    விவசாயிகள் நேந்திரன், செவ்வாழை, கதலி, பூவன், மொந்தன் போன்ற வாழை ரகங்களை பயிரிட்டுள்ளனர். இவற்றில் நேந்திரன் மற்றும் செவ்வாழை ரகங்களில் நூற்புழு பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. பொதுவாக வேர் அழுகல் நூற்புழு, வேர் குடையும் நூற்புழு மற்றும் சுருள் வடிவ நூற்புழு போன்றவை அதிக அளவில் வாழையை தாக்கும். ஆனால் தற்போது வேர் முடிச்சு நூற்புழுக்களின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இந்நூற்புழு தாக்கப்பட்ட மரங்களின் முதல் மற்றும் இரண்டாம் நிலை சல்லி வேர்களில் வேர் முடிச்சுகள் காணப்படுகின்றன.

    இதனை தொடர்ந்து பாதித்த வேரின் நுனி பாகம் அழுகி புதிய வேர் தோன்றாமல் செய்து விடும். மரத்தின் வளர்ச்சி குன்றி காணப்படும். மேலும் குலை தள்ளும் நாட்கள் அதிகமாகவும், தாரில் சீப்புகளின் எண்ணிக்கை குறைந்தும் மற்றும் காய்களின் நீளம் குறைந்தும் காணப்படும்.

    இந்நூற்புழு அதிகமாவதற்கு காரணம் பயிர் சுழற்சி முறையை கடை பிடிக்காமல் ஒரே வகையான பயிரை தொடர்ந்து பயிரிடுவதால் மண்ணில் நூற்புழுக்களின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. நூற்புழுக்களின் தாக்கத்தைக் குறைக்க கரும்பு, பருத்தி மற்றும் தானிய பயிர்களுடன் பயிர் சுழற்சி செய்ய வேண்டும். இதனால் நூற்புழுவின் இனப்பெருக்கம் குறைக்கப்படுகிறது. வாழை கிழங்குகளை நடுவதற்கு முன் ட்ரை கோடெர்மா விவரிடி, சூடோமோனாஸ் ப்ளூரெஸன்ஸ், பேசில்லோமை சஸ் லிலாசினஸ் கலந்த உயிர் பூசணக் கொல்லிகளை தலா 2 கிலோ எடுத்து 1 டன் தொழு உரம் அல்லது வேப்பம் புண்ணாக்குடன் கலந்து 15 நாட்கள் மூடி வைத்து பின் வயலில் இட்டு வாழை நடவு செய்ய வேண்டும்.

    வாழை விதைக்கன்றுகளின் வேரை நீக்கி, கிழங்கின் மேல்தோலை நீக்கி, பின்பு வேப்பம் கரைசலில் (15 மில்லி/ லிட்டர் தண்ணீர்) அல்லது 50-55 டிகிரி செல்சியஸ் கொதிநீரில் 30 நிமிடம் மூழ்க வைத்து, பின்பு நிழலில் உலர்த்தி, வாழை கன்றுகளை நடவு செய்ய வேண்டும். வாழை நடும் போது துலுக்க சாமந்தியை ஊடு பயிர் செய்து 60-ம் நாள் பிடுங்கி வாழையை சுற்றி புதைக்கலாம். வாழை கன்று நட்ட மூன்று மற்றும் ஆறாவது மாதங்களில், வேப்பம் புண்ணாக்குடன் (250 கிராம்) எதிர் நுண்ணுயிரிகளான 'பெசி–லோ மைசிஸ் லிலாசினஸ்' மற்றும் 'சூடோமோனாஸ் புளோரசன்ஸ்' ஆகியவற்றை, 30 கிராம் வீதம் கலந்து இடுவதால் மண்ணிலும், வேரிலும் உள்ள நூற்புழுக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைவதுடன், வாழைத்தார்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்றனர். 

    ×