திருக்குறுங்குடியில் வாழைகளை நாசம் செய்த குரங்குகள்-இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

வாழைகளின் குருத்துக்களை குரங்குகள் முறித்து போட்டுள்ளன.விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
குரங்குகளால் நாசப்படுத்தப்பட்ட வாழைகள்.
குரங்குகளால் நாசப்படுத்தப்பட்ட வாழைகள்.
Published on

களக்காடு:

திருக்குறுங்குடியில் இருந்து வனத்துறை சோதனை சாவடிக்கு செல்லும் சாலையில் செட்டியாபத்து பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்த குரங்குகள் 100-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்துள்ளன. வாழைகளின் குருத்துக்களை குரங்குகள் முறித்து போட்டுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாசமான வாழைகள் 3 மாதமே ஆன மட்டி ரக வாழைகள் ஆகும். எனவே நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com