search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழைத்தார்கள்"

    • குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ரப்பர் மற்றும் வாழை அதிக அளவு பயிர் செய்யப்படுகிறது.
    • வெளியூர்களுக்கும், கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ரப்பர் மற்றும் வாழை அதிக அளவு பயிர் செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் குறிப்பாக மட்டி, செவ்வாழை, ரசக்கதலி, ரோபஸ்டா உள்பட பல்வேறுவிதமான வாழைப்பழங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தியாகும் வாழைத் தார்கள் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி வெளியூர்களுக்கும், கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் பருவமழையை நம்பியும் பாசன குளங்களை நம்பியும் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை குமரி மாவட்டத்தில் பொய்த்து போய்விட்டது. இதனால் பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லை. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் செய்யப்பட்ட வாழைகளுக்கு தண்ணீர் இல்லாமல் கருகிப்போய் உள்ளது. சில விவசாயிகள் மோட்டார் மூலமாக தண்ணீரை வைத்து வாழை பயிரிட்டுள்ளனர். ஆனால் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதனுடைய உற்பத்தி குறைவாகவே உள்ளது. நாகர்கோவில் மார்க்கெட்டுகளுக்கு வரக்கூடிய வழைத்தார்களின் வரத்து குறைந்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார்கள் வரத்து குறைந்துள்ளதால் வாழைத்தார்கள் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக நாகர்கோவில் மார்க்கெட்டில் ஒரு கிலோ மட்டி பழம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ.130 ஆக உயர்ந்துள்ளது. மட்டி வாழைத்தார் ரூ.1000-க்கு மேல் விற்பனை ஆகிய வருகிறது. இதேபோல் ரசக்கதலி வாழைப்பழத்தின் விலையும் 4 மடங்கு உயர்ந்துள்ளது.

    ஏற்கனவே ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது ரூ.95 ஆக உயர்ந்துள்ளது. ரசக்கதலி வாழைத்தார் ஏற்கனவே ரூ. ௨௫௦ முதல் ரூ.300 வரை விற்பனை ஆகி வந்த நிலையில் தற்போது ரூ.800 முதல் ரூ.௮௫௦ வரை விற்பனையாகி வருகிறது. பாளையங்கோட்டை பழமும் கிலோ ரூ.15-ல் இருந்து ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. செவ்வாழை பழத்தை பொறுத்த மட்டில் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ செவ்வாழை ரூ.65-க்கு விற்பனை யானது. ஒரு வாழைத்தார் ரூ.1200 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்பட்டது. ஏத்தன் பழத்தின் விலையும் அதிகமாகியுள்ளது. ரூ.40-க்கு விற்கப்பட்ட ஏத்தன்பழம் தற்போது ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. ரோபஸ்டா, நாட்டுபழம், சக்கை பேயன் விலை உயர்ந்துள்ளது. வாழைத்தார்கள் விலை 2 மடங்கு முதல் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது.இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-குமரி மாவட்டத்தில் ஏற்கனவே வாழைத்தார்கள் அதிகளவு விற்பனைக்காக வரும்.ஆனால் தற்போது பருவமழை பொய்த்து விட்டதால் வழைத்தார்கள் வரத்துகுறைவாகி உள்ளது. மேலும் ஆவணி மாதம் திருமண சீசன் அதிகம் இருக்கும்.இதனால் மக்களுக்கு பழத்தின் தேவை அதிகமாக தேவைப்படும். வரத்து குறைவாகஉள்ள காரணத்தினால் விலை உயர்ந்துள்ளது. இது மட்டும் இன்றி ஓணம் பண்டிகையின்போது கேரளாவில் இருந்து வியாபாரிகள் குமரி மாவட்டத்திற்கு வந்துபழங்களை வாங்கி செல்வார் கள். தற்போது ஓணம் பண்டிகை 29-ந்தேதிகொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் வியா பாரிகள் கேரளாவில் இருந்துபழங்களை வாங்குவதற்கு வருகி றார்கள். ஆனால் போதிய அளவு வாழைத்தார்கள்இல்லாததால் விலை அதிகரித்து உள்ளது என்றார்.

    • தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கோடை மழை பெய்தது.
    • விவசாயிகள் கையில் வாழைத்தார்களுடன் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் வீ. கே. புதூர் அருகே உள்ள கீழவீராணம் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் வாழை பயிரிட்டுள்ளனர். தற்பொழுது வாழைகள் குலைதள்ளி பாதி விளைந்த நிலையில் இருந்தது. கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கோடை மழை பெய்தது. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்திற்கு சூறைகாற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள் கையில் வாழைத்தார்களுடன் வந்திருந்தனர். அவர்கள் சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ரவிச்சந்திரன் விவசா யிகளுக்கு தேவையான இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • வெளி மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்காக அதிகளவு கொண்டு வரப்படுகிறது.
    • கடந்த 2 வாரத்துக்கு மேலாக பனிப்பொழிவு அதிகரிப்பு மற்றும் மழையால் வாழைத்தார்களின் அறுவடை பாதிக்கப்பட்டது.

    பொள்ளாச்சி

    பொள்ளாச்சி பகுதியில் பனிப் பொழிவு அதிகரிப்பால் வாழைத்தார் அறுவடை பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்த னர்.

    பொள்ளாச்சி காந்தி தினசரி மார்க்கெட்டுக்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்காக அதிகளவு கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் முகூர்த்த நாட்கள் அதிகம் இருந்ததால் வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்ததுடன் கூடுதல் விலைக்கு விற்பனையானது.

    இந்நிலையில் கடந்த 2 வாரத்துக்கு மேலாக பனிப்பொழிவு அதிகரிப்பு மற்றும் மழையால் வாழைத்தார்களின் அறுவடை பாதிக்கப்பட்டு. மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் வாழைத்தார்களின்வரத்து குறைந்தது. இதில் நேற்று சுற்றுவட்டார பகுதியிலிருந்து மட்டுமின்றி, தூத்துக்குடி மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார் வரத்து குறைவானது. வரத்து குறைவாக இருந்தாலும், தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கேரள வியாபாரிகள் அதிகம் வந்திருந்தனர்.

    இதனால், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் செவ்வாழை ஒரு கிலோ ரூ.50 வரையிலும், சாம்ராணி ரூ.38-க்கும். பூவந்தார் 35-க்கும், மோரீஸ் 35-க்கும், ரஸ்தாளி 40-க்கும், நேந்திரன் 35-க்கும், என கடந்த மாதத்தைவிட ஒவ்வொரு வாழைத்தாருக்கும் ரூ.5 முதல் ரூ.8 வரை என கூடுதல் விலைக்கு போனது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
    • ஆடி- 18 பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.300-க்கும் ஏலம் போனது.

    தற்போது ஆடி- 18 பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.500-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.600-க்கு விற்பனையானது. ஆடி- 18 பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×