search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bail petition"

    லாலு பிரசாத் யாதவின் ஜாமீனை நீட்டிக்க மறுத்த ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு வரும் 30-ந்தேதி அவர் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. #LaluPrasadYadav #JharkhandHC
    ராஞ்சி:

    பீகார் முன்னாள் முதல்- மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தனது ஆட்சி காலத்தில் பீகாரில் மாட்டுத் தீவனம் வாங்கியதில் பல கோடி ஊழல் செய்துள்ளார்.

    இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டு அவருக்கு 5 வழக்குகளில் ஜெயில் தண்டனை விதித்துள்ளது. இன்னும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையே லாலு பிரசாத் யாதவுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மகன் திருமணத்துக்காக 3 மாத இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் அவர் தனது மகன் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

    இந்த ஜாமீனை மருத்துவ காரணங்களுக்காக மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று லாலு சார்பில் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு லாலு பிரசாத்துக்கு ஜாமீன் நீடிப்பு வழங்க முடியாது என்று மறுத்து விட்டதுடன் வருகிற 30-ந்தேதி அவர் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்று உத்தரவிட்டது. #LaluPrasadYadav #JharkhandHC
    மாணவிகளுக்கு வலைவீசிய பெண் வார்டன் புனிதா முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை இன்னும் ஒருசில நாட்களில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    கோவை:

    கோவை பீளமேட்டில் இயங்கி வரும் தனியார் பெண்கள் விடுதியில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பெண் வார்டன் புனிதாவை(32) போலீசார் தேடி வருகின்றனர்.

    கணவரை பிரிந்து வாழும் அவருக்கு ஒரு காதலன் இருப்பதாக கூறப்படுகிறது. செல்போனை அணைத்து விட்டு காதலனுடன் தப்பிச் சென்ற புனிதா எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை தனிப்படை போலீசார் பெங்களூர், சென்னை ஆகிய இடங்களில் தேடினர். கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலும் புனிதாவிடம் இதற்கு முன்பு பெண்கள் யாரும் ஏமாந்தார்களா? புனிதாவின் பின்னணி என்ன? அவருடன் செல்போனில் தொடர்பில் இருந்தவர்கள் யார்- யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பெண் வார்டன் புனிதா முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை இன்னும் ஒருசில நாட்களில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் புனிதாவுக்கு ஜாமீன் கொடுக்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் அரசு வக்கீல்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
    ஜாமீன் கேட்டு வேல் முருகன் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. #Velmurugan #HighCourt
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடந்தது.

    அப்போது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை (என்.எல்.சி.யை) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த ஏப்ரல் 10-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து நெய்வேலி அனல் மின்நிலையம் போலீசார் வேல்முருகன் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் மீது இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

    அதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1-ந்தேதி நடைபெற்ற போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை சிலர் தாக்கினர்.

    இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்பட பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

    இந்த இரு வழக்குகளில் வேல்முருகன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சார்பில் ஜாமீன் கேட்டு உளுந்தூர்பேட்டை கோர்ட்டிலும், கடலூர் கோர்ட்டிலும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் வேல்முருகன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி, ‘ஜாமீன் மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி நெய்வேலி அனல்மின் நிலையம் போலீஸ் இன்ஸ்பெக்டர், உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #Velmurugan #HighCourt
    அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான முருகன், கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. #NirmalaDevi #Karuppasamy #Murugan
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    முருகனும், கருப்பசாமியும் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3-வது முறையாக மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஜாமீன் வழங்குவதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்ததுடன், வழக்கு விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். #NirmalaDevi #Karuppasamy #Murugan
    உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் கைதான வேல்முருகன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 4-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. #VelMurugan
    விழுப்புரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக்கோரியும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தின்போது சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுதொடர்பாக வேல்முருகன் உள்பட 13 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 26-ந் தேதி வேல்முருகனை போலீசார் கைது செய்து திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது வக்கீல் காந்திகுமார் மூலம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 28-ந் தேதி மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி (பொறுப்பு) திருமகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இந்த ஜாமீன்மனு விசாரணையை வருகிற ஜூன் 4-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #VelMurugan
    செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள வேல்முருகன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
    விழுப்புரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக்கோரியும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தின்போது சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுதொடர்பாக வேல்முருகன் உள்பட 13 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 26-ந் தேதி வேல்முருகனை போலீசார் கைது செய்து திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது வக்கீல் காந்திகுமார் மூலம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதி (பொறுப்பு) திருமகள் ஏற்றுக்கொண்டார். மனு மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) நடைபெறும் என்று கூறினார். #Velmurugan
    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை 3-வது முறையாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #Nirmaladevi
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான முறையில் வழிநடத்த முயன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.

    நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் சாத்தூர், விருதுநகர் நீதி மன்றங்களில் நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் கோர்ட்டில் நிர்மலா தேவி ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.

    கடந்த 18-ந் தேதி அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஜாமின் கேட்டு மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். அப்போதும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி 3-வது முறையாக ஜாமின் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதி சிங்கராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நிர்மலா தேவிக்கு ஜாமீன் கொடுப்பதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நிர்மலாதேவியின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரது ஜாமின் மனுவும் இதே கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அவர்களது ஜாமின் மனுக்கள் குறித்தான விசாரணையை வருகிற 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #Nirmaladevi
    அருப்புக்கோட்டை நிர்மலாதேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பான உரையாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கல்லூரி செயலாளர் ராமசாமி, அருப்புக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சிங்கராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் கருப்பசாமியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, முருகனின் மனுவை விசாரணைக்காக 25-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


    ×