search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness rally"

    • சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • திருச்சுழி உட்கோட்ட பகுதியை சேர்ந்த சாலைப் பணியாளர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பூமிநாதர் கோவில் வாசலில் இருந்து தொடங் கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை திருச்சுழி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறி யாளர் கணேசன் தொடங்கி வைத்தார்.

    இந்த விழிப்புணர்வு பேரணியில் போக்குவரத்து சின்னங்களை பின்பற்றுதல், மது அருந்தி வாகனம் ஓட்டா தே, தலைக்கவசம் அணிவ தன் அவசியம் என்பது போன்ற பல்வேறு வாசகங் கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்ட வாறு முக்கிய வீதிகள் வழி யாக ஊர்வலமாக வந்தனர்.

    மேலும் சாலையில் தலை கவசம் அணிந்து சாலை விதிகளையும், பாதுகாப்பு அம்சங்களோடு பின்பற்றி வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு கோஷங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு ஆண்டுக்கான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங் கப்பட்டன.

    இந்த விழிப்புணர்வு பேரணி பூமிநாதர் கோவி லில் இருந்து தொடங்கி திருச்சுழி நெடுஞ் சாலைத் துறை உட்கோட்ட அலுவல கம் வரை நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணி யில் உதவிப்பொறியாளர் சுந்தரபாண்டியன், சாலை ஆய்வாளர்களான முத்து செல்வம், சுந்தர வள்ளி மற் றும் திருச்சுழி உட்கோட்ட பகுதியை சேர்ந்த சாலைப் பணியாளர் கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • குப்பையில்லா இந்தியா விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாணவர்கள் பொதுமக்களுக்கு குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும் என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நேருயுவகேந்திரா இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகம் மற்றும் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்களால் குப்பையில்லா இந்தியா தூய்மை சேவை விழிப்புணர்வு பேரணி வள்ளல் சீதக்காதி ஸ்டேடியத்தில் இருந்து தொடங்கி சேதுபதி நகர் 5-வது தெரு வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மக்கும் குப்பைகள், மக்காத குப்பை என 50 கிலோ எடையுள்ள குப்பைகளை மாணவர்கள் சேகரித்து குப்பை தொட்டியில் போட்டனர். இந்நிகழ்ச்சியை குற்ற பிரிவு பொருளாதார காவல் ஆய்வாளர் நந்தக்குமார், சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், நேருயுவகேந்திரா தன்னார்வலர்கள் தொடங்கி வைத்தனர். மாணவர்கள் பொதுமக்களுக்கு குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும் என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    • ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ந்தேதி உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
    • உலகளாவிய மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணமாகி வருகிறது.

    திருப்பூர்:

    ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ந்தேதி உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். மாறிவரும் காலங்களில், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. உலகளாவிய மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணமாகி வருகிறது.

    இதனிடையே இதய நோய்களில் இருந்து தப்பிப்பது மற்றும் இதயத்தை நலமுடன் பாதுகாப்பது ஆகியவை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, பார்க் சாலை வழியாக சென்று மீண்டும் மாநகராட்சியை வந்தடைந்தது. இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், 1 -வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, 2-வது மண்டல தலைவர் கோவிந்தராஜ் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
    • பேரணியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    உலக அளவில் இதய நோய்களால் பாதிக்கப்படு வதையும், மாரடைப்பால் மரணமடைவதையும் தடுக்கும் வகையில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    விழிப்புணர்வு பேரணி

    அதன்படி இந்த ஆண்டு இன்று இருதய தினத்தை யொட்டி நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து பல்நோக்கு மருத்துவமனை வரை பேரணியாக விழிப்புணர்வு கோஷ மிட்டு பதாகைகள் ஏந்திய படி நடந்து சென்றனர். பின்னர் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் மாணவ-மாணவிகள் கைகளால் இருதய வடிவில் நின்று விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த பேரணியில் மருத்துவமனை கண்கா ணிப் பாளர் பால சுப்பிர மணியம், உதவி முதல்வர் சுரேஷ் துரை, இதயவியல் மருத்துவத்துறை தலைவர் ரவிச்சந்திரன் எட்வின், செவிலியர் ஆசிரியர் செல்வம் மற்றும் மருத்துவ கல்லூரி மாண வர்கள் கலந்து கொண்டு இருதயம் வடிவில் நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • கொடைக்கானலில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சள் பை பயன்பாடு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • இந்த பேரணியில் ஏராளமான நாட்டு நலப்பணி திட்டத்தினர் கலந்து கொண்டனர்,

    கொடைக்கானல்:

    மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக பாரதியார் பல்கலைக்கழகம் ஸ்ரீவாசவி கல்லூரி மாணவிகள் கொடைக்கானல் வருவாய்த்துறை மற்றும் போலீசாருடன் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சள் பை பயன்பாடு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    கொடைக்கானல் வட்டாட்சியர் கார்த்திகேயன் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மஞ்சள் பை பயன்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    இந்த பேரணியில் ஏராளமான நாட்டு நலப்பணி திட்டத்தினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) தாமரைக்கண்ணன் தலைமையில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜராஜேஸ்வரி, கலைமணி, அசோக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஏராளமான அடியார்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
    • மாலையில், ஐந்தெழுத்து மந்திரம் ஓதி உலக நலன் வேண்டி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

    சென்னை அம்பத்தூர் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில் சென்னை திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரியம்மன் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவில்களில் உழவாரப்பணி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    திருக்கோவில்களின் தூய்மை, கோவில்களின் வளர்ச்சி, கோவில் சொத்துக்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏராளமான அடியார்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரண்டு கோவிலிலும் உட்பிரகாரங்கள், வெளிபிரகாரங்கள், கோசாலை, திருக்குளம் நந்தவனம், பக்தர்கள் தங்கும் விடுதி, அன்னதானக் கூடம் உள்ளிட்ட இடங்களில் தூய்மைப் பணி நடைபெற்றது.

    பின்னர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்றுகள் நடப்பட்டன. மாலையில், ஐந்தெழுத்து மந்திரம் ஓதி உலக நலன் வேண்டி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அருணாச்சலம் ஒத்துழைப்புடன், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்ற நிறுவனர் ச.கணேசன் செய்திருந்தார்.

    • பெருங்கடம்பனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • அதனை தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட இரண்டாம் ஆண்டை முன்னிட்டு வனத்துறை சார்பில் நாகை பெருங்கடம்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    அதனையொட்டி தேசிய பசுமை படை மாணவர்கள், ஆதிபராசக்தி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் வனச்சரகர் ஆதிலிங்கம், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், பசுமை கண்காணிப்பாளர் டிவைனியா, தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் எழிலன், ஓவிய சங்கத் தலைவர் முருகையன், இயற்கை ஆர்வலர் கீழ்வேளூர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு மாணவர் பெயரிலும் ஒவ்வொரு மரக்கன்று நடப்பட்டு அவற்றை பராமரித்து வளர்த்து காட்டும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் ஒரு வருடம் கழித்து அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

    தேசிய பசுமை படை மாணவர்களுக்கு கிரேட் எஃப் தொண்டு நிறுவனம் சார்பாக மஞ்சப்பைகள் வழங்க ப்பட்டன.

    • சிறுதானிய உணவுகளின் பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியை கலெக்டர் பூங்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறுதானிய உணவுகளின் பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஆரோக்கிய நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

    பேரணியை கலெக்டர் பூங்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் கம்பு உடலுக்கு தெம்பு, சோம்பல் நீக்கும் சோளம், குதிரை வாலி தந்திடும் குறைவில்லா வாழ்வு, புற்றுநோயை போக்கும் பனிவரகு என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

    300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பேரணி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் தொடங்கி தலைமை தபால் நிலையம், பஸ்நிலையம், காமராஜர் சிலை, அரசு மருத்துவக்கல்லூரி, அண்ணாசிலை வழியாக மீண்டும் முகாமை வந்தடைந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பசுமை தமிழ்நாடு தினத்தினை முன்னிட்டு மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.
    • வனத்துறை சார்பில் 2,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பசுமை தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.

    திண்டுக்கல்:

    பசுமை தமிழ்நாடு தினத்தினை முன்னிட்டு மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பூங்கொடி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து மரக்கன்றுகள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழகத்தின் பசுமைப் பரப்பினை அடுத்த 10 ஆண்டுகளில் 23.69 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரிக்கும் பொருட்டு பசுமை தமிழ்நாடு இயக்கம் உருவாக்கப்பட்டது. கடந்த 24.09.2022 அன்று பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கியது. ஓராண்டு நிறைவடைவதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று பசுமை தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.

    அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் துறை வாரியாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. வனத்துறை சார்பில் 2,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பசுமை தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மரங்கள் வளர்ப்பும், அதன் பயன் குறித்தும் பொதுமக்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    மேலும் வனத்துறை மூலம் பசுமை தமிழ்நாடு இயக்க திட்டம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்கள், பூங்காக்கள், அரசு அலுவலகங்கள், சாலையோர பகுதிகள், தொழிற்சாலை பகுதிகள், தனியார் நிலங்கள், குளக்கரைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்கள், மாநகராட்சி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் இலவசமாக நடவு செய்ய வழங்கப்பட்டுள்ளது.

    பயனாளிகள் மரக்கன்றுகளை பெற தங்களது ஆதார் அட்டை நகல், பட்டா அல்லது சிட்டா நகல், 2 புகைப்படம் கொண்டு வந்து இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்தார்.

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் திண்டுக்கல் உதவி வனப்பாதுகாவலர் ஸ்ரீநிவாசன், மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள், விவசாயிகள், தொண்டு நிறுவனங்கள், வனத்துறை பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • உசிலம்பட்டியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பேரணியில் செவிலிய மாணவர்கள் மற்றும் டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சுற்றி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு தலைமை மருத்துவமனை மாவட்ட மனநல திட்டத்தின் மூலமாக உலக தற்கொலை தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நடராஜன், நிலைய மருத்துவர் டாக்டர் மாதவன், மாவட்ட மனநல மருத்துவர் சந்தோஷ்ராஜ், மனநல உளவியலாளர் அப்துல், சமூகப்பணியாளர் சோனியா, ஜெகன், செவிலியர் பிரசாத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.பேரணியில் செவிலிய மாணவர்கள் மற்றும் டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சுற்றி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    • 2,270 சமையல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்
    • பலர் கலந்து கொண்டனர்

    ேவங்கிக்கால்:

    திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கிராம ஊராட்சியில் உள்ள அரசு மாதிரி ஆரம்ப பள்ளியில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தும் முறை குறித்து கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார்.

    மேலும் பள்ளி மாணவர்களுக் கலெக்டர் உணவு பரிமாறினார். தொடர்ந்து பேசிய ஆட்சியர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 1,581 பள்ளிகளில் படிக்கும் 88 ஆயிரத்து 988 மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.

    இதற்காக 2,270 சமையல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார். இதில் மகளிர் திட்ட இயக்குநர் சையித் சுலைமான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருணாசலம், பிரித்விராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறு தானிய உணவு குறித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி டவுன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறுதானிய உணவு குறித்து விழிப்பு ணர்வு பேரணி தலைமை யாசிரியர் வசந்தா தலைமை யில் நடைபெற்றது.

    மாணவ, மாணவிகள் உணவு தானிய குறித்து பதாகைகளை ஏந்தியும் தானிய உணவு நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    விழிப்புணர்வு பேரணி காந்தி ரோடு மார்க்கெட் வீதி சத்தியமூர்த்தி சாலை முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வந்தடைந்தன.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி உள்ளிட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    ×