search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Heart Day"

    • மனித சங்கிலி நிகழ்ச்சி அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
    • மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நெல்லை:

    உலக இருதய தினத்தை முன்னிட்டு நெல்லை அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை சார்பில் இதயம் காப்போம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவப்பிரகாச சத்திய ஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு நடமாடும் மருத்துவ சிகிச்சையாக ஆம்புலன்ஸ் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ரோட்டரி கவர்னர் முத்தையா, ஐ.டபிள்யூ.டி. முன்னாள் மாவட்ட சேர்மன் அமுதா ராஜேந்திரன், டாக்டர் சொர்ண லதா, டாக்டர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அதனைத்தொடர்ந்து அருணா கார்டியாக் கேர் சார்பில் மருத்துவமனை வளாகத்தில் இதயம் காப்போம் என்ற பெயரில் மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆதர்ஸ் பச்சேரா, குமரேசன், இன்னர் வீல் கிளப் ஆப் திருநெல்வேலி தலைவர் மீனா சுரேஷ், செயலாளர் சுனிதி பாலகிருஷ்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுமன் ஜெயபிரகாஷ் மற்றும் பொருநை ரோட்டரி கிளப் தலைவர் கோமதி மாரியப்பன், செயலாளர் பவித்ரா கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மனித சங்கிலி நிகழ்ச்சியில் எச்.டி.எப்.சி. வங்கி மேலாளர் லெட்சுமணன், வங்கி ஊழியர்கள், அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் இதய நலனுக்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

    • ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ந்தேதி உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
    • உலகளாவிய மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணமாகி வருகிறது.

    திருப்பூர்:

    ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ந்தேதி உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். மாறிவரும் காலங்களில், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. உலகளாவிய மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணமாகி வருகிறது.

    இதனிடையே இதய நோய்களில் இருந்து தப்பிப்பது மற்றும் இதயத்தை நலமுடன் பாதுகாப்பது ஆகியவை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, பார்க் சாலை வழியாக சென்று மீண்டும் மாநகராட்சியை வந்தடைந்தது. இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், 1 -வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, 2-வது மண்டல தலைவர் கோவிந்தராஜ் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
    • பேரணியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    உலக அளவில் இதய நோய்களால் பாதிக்கப்படு வதையும், மாரடைப்பால் மரணமடைவதையும் தடுக்கும் வகையில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    விழிப்புணர்வு பேரணி

    அதன்படி இந்த ஆண்டு இன்று இருதய தினத்தை யொட்டி நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து பல்நோக்கு மருத்துவமனை வரை பேரணியாக விழிப்புணர்வு கோஷ மிட்டு பதாகைகள் ஏந்திய படி நடந்து சென்றனர். பின்னர் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் மாணவ-மாணவிகள் கைகளால் இருதய வடிவில் நின்று விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த பேரணியில் மருத்துவமனை கண்கா ணிப் பாளர் பால சுப்பிர மணியம், உதவி முதல்வர் சுரேஷ் துரை, இதயவியல் மருத்துவத்துறை தலைவர் ரவிச்சந்திரன் எட்வின், செவிலியர் ஆசிரியர் செல்வம் மற்றும் மருத்துவ கல்லூரி மாண வர்கள் கலந்து கொண்டு இருதயம் வடிவில் நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • இதய நோய் ஏற்படாமல் இருக்க உணவுக் கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், நல்ல எண்ணம், நல்ல சுற்றுச்சூழல் ஆகியவை முக்கியமாகும்.
    • தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

    உலகில் புற்றுநோய், காசநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களைவிட இதய நோய் பாதிப்பால் ஏற்படும் மரணங்கள்தான் அதிகம். இதய நோய்களால் சராசரியாக ஆண்டுக்கு 1.70 கோடி பேர் உயிரிழக்கின்றனர். இது அடுத்த 10 ஆண்டுகளில் 2.30 கோடியாக உயரும் என்கின்றன மருத்துவ ஆய்வு முடிவுகள்.

    புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவு, உடல் உழைப்பின்மை போன்றவற்றைத் தவிர்த்தாலே இதயக் கோளாறுகளால் ஏற்படும் 80 சதவீத மரணங்களைத் தவிர்க்க முடியும் என்கிறது உலக இதயக் கூட்டமைப்பு.

    ரத்தக் கட்டிகள் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்டால் மாரடைப்பும், மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதமும் ஏற்படலாம். அதேபோல் காலில் ரத்தக்கட்டிகள் ஏற்பட்டு, அந்தக் கட்டிகள் உடைந்து நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்படும். இதயத் தசைகளின் 'பம்பிங்' திறன் குறைவு, சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படவும் சாத்தியம் உண்டு.

    இதய நோய் ஏற்படாமல் இருக்க உணவுக் கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், நல்ல எண்ணம், நல்ல சுற்றுச்சூழல் ஆகியவை முக்கியமாகும். நம் உடல் உறுப்புகளில் முக்கியமானது இதயம். மூளைச்சாவு அடைந்தவர்களுக்குக் கூட இதயம் வேலை செய்து கொண்டிருக்கும். எனவே, இந்த இதயத்தைப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நம் தலையாய கடமை.

    தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். தற்போதைய உணவு உள்ளிட்ட பல்வேறு பழக்கவழக்கத்தால் 15 வயது முதலே மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனம் செய்தால் மாரடைப்பு ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். இடது கை, தோள் பட்டையில் வலி ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். எண்ணெய் உணவுகள், அசைவ உணவுகளை தவிர்த்தல் நல்லது. 19 வயது நபருக்கு கூட பைபாஸ் சர்ஜரி செய்யும் நிலை உள்ளது. உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி செய்வதன் மூலம் நோய்களை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று இதய நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இதயம் இதமாக இருக்க 10 கட்டளைகள்

    1. உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

    2. வெள்ளைச் சர்க்கரையைத் தவிருங்கள்.

    3. கொழுப்புச் சத்து மிகுந்த உணவைத் தவிருங்கள்.

    4. புகைப் பழக்கத்தை கைவிடுங்கள்.

    5. மது அருந்தாமல் இருங்கள்.

    6. மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    7. உடல் பருமனைக் குறைவாக வைத்துக் கொள்ளுங்கள்.

    8. குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்குங்கள்.

    9. தினசரி 1 மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

    10. மனித நேயத்துடன் செயல்படுங்கள்.

    இவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் இதயத்தை இதமாக வைத்துக்கொள்ள முடியும் என்று இதய நிபுணர்கள் கூறுகின்றனர்.

    • காலை உணவு என்பது நாம் தவிர்க்கக் கூடாத அவசியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.
    • நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு நம்முடைய கெட்ட கொழுப்பினால் ஏற்படும் ரத்தக்குழாய் அடைப்புகளை சரி செய்ய உதவுகிறது.

    இதயம் நம் உடலின் மிக முக்கியமான ஒரு உறுப்பு. பிறந்தது முதல் இறக்கும் வரையில் இடைவெளி இன்றி நமக்காக உழைத்துக் கொண்டே இருக்கும் ஒரு உறுப்பு. அந்த இதயத்தை நல்ல முறையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். இதய நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள், நம்மில் பலர் இதய நலத்திற்காக வாழ்வியல் மாற்றம் செய்து கொள்ளுங்கள் என்றெல்லாம் கூறும் பொழுது, எனக்கு நேரமில்லை, நிறைய வேலைகள் இருக்கிறது, என் உடல் நலத்திற்காக அதிக நேரம் என்னால் ஒதுக்க முடியவில்லை, இந்த வேலை எல்லாம் முடிந்த பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் பல சமாளிப்பு வார்த்தைகளை கூறுவதை நாம் கேட்கிறோம். சரி, அதிக உடற்பயிற்சி, முழுமையான உணவு கட்டுப்பாடு, தியானம் மனம் தளர்த்தும் பயிற்சிகள் என்று பலவற்றையும் முறைப்படி கற்றுக்கொண்டு என்னால் பின்பற்ற முடியவில்லை என்று கூறும் நண்பர்களுக்காக, உங்கள் இதயத்தைக் காக்க நீங்கள் செய்யக்கூடிய சில சின்ன சின்ன மாற்றங்களை கீழ்வரும் கட்டுரையில் காணலாம்.

    காலை உணவு:

    காலை உணவு என்பது நாம் தவிர்க்கக் கூடாத அவசியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையில் காலை உணவை நல்ல ஆரோக்கியமானதாகவும் குறைந்த அளவிலும் எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் நாம் பொதுவாக சாப்பிடக்கூடிய அதிகமான மாவுச் சத்துள்ள பொருட்கள், எண்ணெயில் செய்த பொருட்கள், அதிக இனிப்பு கொண்ட பொருட்கள் போன்றவற்றை முழுமையாய் தவிர்க்க வேண்டும். காலை உணவில் முழு தானியத்தால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு உணவை அதாவது இட்லி, தோசை, சப்பாத்தி, முழு தானிய கஞ்சி, முழு கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு போன்று ஏதாவது ஒன்றினால் செய்த காலை உணவை சாப்பிடுவது நல்லது.

    மேலும் காலை உணவில் அதிகமான அளவில் நார்ச்சத்து இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு நம்முடைய கெட்ட கொழுப்பினால் ஏற்படும் ரத்தக்குழாய் அடைப்புகளை சரி செய்ய உதவுகிறது. மேலும் அது ரத்த சர்க்கரையின் அளவை குறைத்து இதனால் இதயத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் நீடித்த அழற்சிகள் உடலில் இருந்தால் அவற்றை சரி செய்யவும் நார்ச்சத்து உணவுகள் நமக்கு உதவுகின்றன. எனவே காலை உணவை ஆரோக்கியமானதாக நார்ச்சத்து நிறைந்ததாக முழு தானியம் கொண்டதாக குறைந்த அளவாக இருந்தாலும் எடுத்துக் கொள்வது சிறந்தது. அத்துடன் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    தனிமையை தவிர்த்தல்:

    இன்று பலர் வெளியில் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலைகளை செய்யக்கூடிய நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். இது பலருக்கும் அனுகூலமாக இருந்தாலும் அது மனதின் ஆரோக்கியத்தை குறைக்க கூடியதாகவும் அதன் மூலமாக இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்க கூடியதாகவும் இருக்கிறது என்பது சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள். என்னுடைய வேலைகளை எல்லாம் நான் வீட்டிலிருந்தபடியே கணினி மூலம் செய்கிறேன் அதை தாண்டி சமூக ஊடகங்களில் ஆழ்ந்திருப்பதும் ஏதேனும் சமூக அமைப்புகளில் உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் அவற்றின் மீட்டிங்குகளையும் ஜூம், வாட்ஸ் அப், கூகுள் மீட் போன்றவற்றிலேயே நான் செய்து விடுகிறேன் என்று கூறுபவராகவும் நீங்கள் இருந்தால் இதை நீங்கள் நிச்சயமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

    இந்த முறையில் செயல்படும் பொழுது குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தனிமையான உணர்வும் இதனால் மன அழுத்தமும் ஏற்படும். இது இதய நலத்தையும் பாதிக்கிறது. எனவே அவ்வப்பொழுது சில மீட்டிங்குகளை நேரில் சென்று மனிதர்களை சந்திக்கும் விதமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் நண்பருடன் சென்று காபி அல்லது டீ அருந்துவது, நண்பர்களுடன் மதிய உணவு வெளியில் சென்று உண்பது, மாலை நேரங்களில் ஒரு சிறிய நடைபயிற்சியை மேற்கொள்வது அந்த நேரத்தில் பலவிதமான மனிதர்கள் வந்து போகக்கூடிய இடங்களில் சிறிது நேரம் அமர்ந்திருப்பது, பொருட்கள் வாங்க அவசியம் இல்லை என்றாலும் கடைவீதிகளில் அல்லது மால்களில் சிறிது நடந்து விட்டு புதிய மனிதர்களையும் பொருட்களையும் பார்த்து வருவது போன்ற சிறுசிறு நிகழ்வுகளை நம் அன்றாட நடைமுறையில் புகுத்திக் கொண்டால் மனநலம் மட்டுமின்றி இதய நலனையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

    மனம் உடல் தளர்த்தும் தியானம்:

    மனம் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு அலைநீளத்தில் செயல்படுகிறது. பெரும்பாலான நேரம் நம் மனம் பீட்டா அலையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. எப்பொழுதுமே இந்த அலையில் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது நம் உடல் தளர்வாக இருப்பதில்லை. நம் உடல் தசைகள் ஒரு கடினத் தன்மையுடன் தயார் நிலையில் இருந்து கொண்டிருக்கும். உடல் தசைகள் தளர்வாக இருக்கும் பொழுது தான் நம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் உடலின் தசைகள் தளர்வாக இருக்கும் பொழுது, அது அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை, அதிக ரத்தஅழுத்தம் மற்றும் மூளை இதயத்திற்கான ரத்தக்குழாய்களில் அடைப்பு போன்றவற்றை தவிர்க்க உதவுகிறது. உடல் தளர்வாக இருக்க வேண்டும் என்றால் அது மனதினால் மட்டுமே முடியும். மனம் தளர்வாக இருக்கும் பொழுது மட்டுமே அதை உடலும் கற்றுக் கொள்கிறது. எனவே மனதைக் கொண்டு தான் உடலை தளர்த்த வேண்டும். மனதை தளர்த்த தியானம் நமக்கு உதவுகிறது.

    ×