என் மலர்
நீங்கள் தேடியது "Heart Day"
- சில உணவுகளான சர்க்கரை, கார்போஹைட்ரேட், உப்பு அல்லது காரமான மசாலாப் பொருட்கள் கூட இதயத் துடிப்பை அதிகரிக்கலாம்.
- இதயத் துடிப்பு வழக்கத்தை விட வேகமாக இருப்பது ஒரு அடிப்படை மருத்துவ பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.
மன அழுத்தம், பதட்டம், கவலை, காபின், உடற்பயிற்சி, அதிகப்படியான வெப்பம், தைராய்டு சுரப்புக் கோளாறுகள், சில மருந்துகள் மற்றும் உணவுகள் போன்றவை இதயம் வேகமாகத் துடிப்பதற்கான பொதுவான காரணங்களாகும்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த இதயத் துடிப்பு பாதிப்பில்லாதது. இருப்பினும், இதயத் துடிப்பு தொடர்ந்து அதிகமாக இருந்தால் அல்லது மார்பு வலி, மயக்கம் போன்ற பிற அறிகுறிகளுடன் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம். மன அழுத்தம், பயம் அல்லது மன உளைச்சல் ஏற்படும் போது உடலில் அட்ரினலின் என்னும் ஹார்மோன் வெளியிடப்பட்டு இதயத் துடிப்பை அதிகரிக்கும்.
காபின், நிகோடின் மற்றும் ஆல்கஹால் போன்ற பொருட்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கலாம். சில உணவுகளான சர்க்கரை, கார்போஹைட்ரேட், உப்பு அல்லது காரமான மசாலாப் பொருட்கள் கூட இதயத் துடிப்பை அதிகரிக்கலாம்.
உடற்பயிற்சி, அதிக வெப்பநிலை அல்லது ஈரப்பதம் ஆகியவை உடலின் இதயத் துடிப்பை அதிகரிக்க வழிவகுக்கும், ஏனெனில் உடல் குளிர்ச்சியடையவும், தசை செல்களுக்கு அதிக ஆக்சிஜனை வழங்கவும் இந்த மாற்றம் ஏற்படுகிறது. தைராய்டு சுரப்பி அதிகமாக செயல்பட்டால் (ஹைப்பர் தைராய்டிசம்), இதயம் வேகமாகத் துடிக்கும்.
ஒழுங்கற்ற இதயத் துடிப்பு: இது இதயத்தின் தாளத்தில் ஏற்படும் ஒரு நிலை, இதில் இதயம் சீரற்ற அல்லது எதிர்பாராத விதமாக வேகமாகத் துடிக்கலாம்.
இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்போது மார்பு வலி, தலைச்சுற்றல், மயக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதயத் துடிப்பு வழக்கத்தை விட வேகமாக இருப்பது ஒரு அடிப்படை மருத்துவ பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.
- உலக இருதய தினத்தை முன்னிட்டு மணப்பாறையில் நடந்த மாரத்தான் போட்டியில் மழலையர் முதல் முதியோர்கள் வரை கலந்து கொண்டனர்
- 21 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் ஊட்டியைச் சேர்ந்த நிகில் குமார் என்பவர் முதலிடம் பிடித்தார். இதே போல் 10 கிலோ மீட்டர் பெண்கள் பிரிவில் மனப்பாறையை சேர்ந்த யுவா முதலிடம் பிடித்தார்
திருச்சி:
இயங்க மறுக்கம் இதயத்திற்கு உற்சாகம் தருவதே ஓட்டமும், நடைபயிற்சியும் தான். மனித உடலை சீராக வைத்து கொள்வதற்கு உடற்பயிற்சி நல்துணையாக இருக்கும் என்று அனைவரும் கூறி வரும் நிலையில் மழலைகள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்டு ஓடி அசத்திய மராத்தான் போட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு சிந்துஜா மருத்துவ மனை மற்றும் தியாகேசர் ஆலை முன்னாள் மாணவர்கள் சார்பில் "மணவை மராத்தான்" என்ற தலைப்பில் மராத்தான் போட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் அருளரசன், செயலாளர் அசோக்குமார், ஆலை பொது மேலாளர் சதீஸ் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
ஆண்களுக்கு 21 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 10 கிலோ மீட்டரும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே 5, 3 கிலோ மீட்டர் ஓட்டமும் நடைபெற்றது. டாக்டர் கலையரசன் மற்றும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் போட்டியை தொடங்கி வைத்தனர்.
21 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் ஊட்டியைச் சேர்ந்த நிகில் குமார் என்பவர் முதலிடம் பிடித்தார். இதே போல் 10 கிலோ மீட்டர் பெண்கள் பிரிவில் மனப்பாறையை சேர்ந்த யுவா முதலிடம் பிடித்தார்.
5 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் பொள்ளாச்சியை சேர்ந்த கனிராஜா என்பவரும், பெண்கள் பிரிவில் மணப்பாறை ஏ.பி.ஜே. விளையாட்டு அகாடமியை சேர்ந்த கனிஷா என்பவரும், 3 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் நத்தம் பகுதியை சேர்ந்த ராம்பிரதி,
பெண்கள் பிரிவில் மணப்பாறை ஏ.பி.ஜே. விளையாட்டு அகாடமியை சேர்ந்த சாதனா பாரதி ஆகியோர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு பிரிவாக நடைபெற்ற போட்டியில் மழலைகளுக்கு 500 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் கலந்து கொண்டு போட்டி போட்டு ஓடியது அனைவரின் கவனங்களையும் வெகுவாக ஈர்த்தது.
இந்த மராத்தான் போட்டியை தொடங்கி வைத்த போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தங்கள் குழுவினருடன் 21 கிலோமீட்டர் முழுமையாக ஓடி ஓட்டத்தை நிறைவு செய்தார். தொழிலதிபர் காந்திராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மராத்தான் போட்டியில் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடிய போது வழிநொடுகிளும் கிராம மக்கள் சாலை ஓரங்களில் நின்று அனைவரையும் கைத்தட்டி உற்சாகமூட்டினார்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆணழகன்கள் மேடையில் அனைவகுத்து நின்று தங்களின் கட்டலகை காண்பித்தனர். மழலைகள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற மராத்தான் போட்டி மக்களின் கவனங்களை வெகுவாக இருப்பதுடன் பாராட்டையும் பெற்றது.
- மாணவர்கள் குறுநாடகம், நடனம்,உயிர்காக்கும் அவசர சிகிச்சை முறையான சிபிஆர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு செய்து காட்டினர்.
- பலூன்களை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு 8 நிமிடம் 3 விநாடிகளில்விரை வாக கடத்தி சாதனை புரிந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி, கிருமாம்பாக்கம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவ னத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். கணேசன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
புதுச்சேரி ராக் பீச்சில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் டீன் பேராசிரியர் டாக்டர் பி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தி னராக போலீஸ் சூப்பிரண்டு மாறன் கலந்து கொண்டார். டீன் பேராசிரியர் செந்தில்கு மார் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் இதயத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மாணவர்கள் குறுநாடகம், நடனம்,உயிர்காக்கும் அவசர சிகிச்சை முறையான சிபிஆர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு செய்து காட்டினர்.
மாணவர்கள் இதய வடிவ சின்னம் அமைத்து இதய வடிவிலான பலூன்களை பறக்க விட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு டாக்டர் வி பிரேம்நாத் உதவி பேராசிரியர், இதயவியல் துறை, மகாத்மா காந்தி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் டாக்டர் வி பிரேம்நாத், ஏ .ஜி பத்மாவதி மருத்துவமனை தலைமை கேத் ஆய்வக தொழில்நுட்பவியலாளர் அப்துல் ஹாரிஃப் கலந்து கொண்டனர். அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இயக்குனர் ஆன்ட்ரூ ஜான் வரவேற்று பேசினார்.
பின்னர் உலக சாதனைக்கான முயற்சி செய்யும் விதமாக 750 மாணவர்கள் வரிசையாக நின்று இதய வடிவிலான பலூன்களை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு 8 நிமிடம் 3 விநாடிகளில்விரை வாக கடத்தி சாதனை புரிந்தனர். இச்சாதனை யானது நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததை அதன் இயக்குநர் ஹேமலதா, தீர்ப்பாளர் ஞானசேகரன் அறிவித்தனர்.
பின்னர் நிகழ்ச்சியின் நிறைவாக அனைத்து இதயவியல் துறை மாணவர்களும் இணைந்து இதய வடிவ சின்னம் உருவாக்கி இதயத்தை பாதுகாப்பதின் நோக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஏற்பாடு களை நிர்வாக அதிகாரி சந்துரு, இதயவியல் துறை உதவி பேராசிரியர்கள் குளோரி மெர்லின், மிராக்ளின் ஷேரன் விஜய், சிவசங்கரி, அனிதா, சந்தோஷ் ஜெயசூர்யா, கோவர்த்தன விஷ்ணு மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
- புதுவை கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் மற்றும் கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனை சார்பில் உலக இதய நாள் குறித்து விழிப்புணர்வு நடந்தது.
- இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கான செயல்பாடுகள், மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் மற்றும் கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனை சார்பில் உலக இதய நாள் குறித்து விழிப்புணர்வு நடந்தது.
புதுவை கன்னி யக்கோவில் ராஜகவுரி நகரில் உள்ள வீ ஹெர்பல் கேர் நிறுவனத்தில் நடைபெற்ற இதயநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இதயம் காப்பத்தற்கான வழிமுறைகள், இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கான செயல்பாடு கள், மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும். இன்முகத்துடன் உள்ளுணர்ந்து சிரிக்க வேண்டும் என அக்குபஞ்சர் கவுன்சிலின் தலைவரும், தி சுசான்லி குழுமத்தின் சேர்மனுமான டாக்டர் ரவி உரையாற்றினார்.
முன்னதாக வி ஹெர்பல் கேர் நிறுவனத்தின் மேலாளர் தாயார் அனைவரையும் வரவேற்றார். முடிவில் தலைமை மருந்து உற்பத்தி மேலாளர் சுந்தர் நன்றி கூறினார்.






