என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இதய தினத்தையொட்டி மனித சங்கிலி நடத்தி உலக சாதனை
    X

    உலக சாதனை நிகழ்ச்சியில் கல்லூரி டீன். டாக்டர் செந்தில்குமார், புதுச்சேரி போலீஸ் சூப்பிரண்டு மாறன், இயக்குனர் ஆட்ன்ரூ ஜான், சந்துரு பங்கேற்ற காட்சி. 

    இதய தினத்தையொட்டி மனித சங்கிலி நடத்தி உலக சாதனை

    • மாணவர்கள் குறுநாடகம், நடனம்,உயிர்காக்கும் அவசர சிகிச்சை முறையான சிபிஆர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு செய்து காட்டினர்.
    • பலூன்களை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு 8 நிமிடம் 3 விநாடிகளில்விரை வாக கடத்தி சாதனை புரிந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, கிருமாம்பாக்கம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவ னத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். கணேசன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.

    புதுச்சேரி ராக் பீச்சில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் டீன் பேராசிரியர் டாக்டர் பி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தி னராக போலீஸ் சூப்பிரண்டு மாறன் கலந்து கொண்டார். டீன் பேராசிரியர் செந்தில்கு மார் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் இதயத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மாணவர்கள் குறுநாடகம், நடனம்,உயிர்காக்கும் அவசர சிகிச்சை முறையான சிபிஆர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு செய்து காட்டினர்.

    மாணவர்கள் இதய வடிவ சின்னம் அமைத்து இதய வடிவிலான பலூன்களை பறக்க விட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு டாக்டர் வி பிரேம்நாத் உதவி பேராசிரியர், இதயவியல் துறை, மகாத்மா காந்தி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் டாக்டர் வி பிரேம்நாத், ஏ .ஜி பத்மாவதி மருத்துவமனை தலைமை கேத் ஆய்வக தொழில்நுட்பவியலாளர் அப்துல் ஹாரிஃப் கலந்து கொண்டனர். அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இயக்குனர் ஆன்ட்ரூ ஜான் வரவேற்று பேசினார்.

    பின்னர் உலக சாதனைக்கான முயற்சி செய்யும் விதமாக 750 மாணவர்கள் வரிசையாக நின்று இதய வடிவிலான பலூன்களை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு 8 நிமிடம் 3 விநாடிகளில்விரை வாக கடத்தி சாதனை புரிந்தனர். இச்சாதனை யானது நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததை அதன் இயக்குநர் ஹேமலதா, தீர்ப்பாளர் ஞானசேகரன் அறிவித்தனர்.

    பின்னர் நிகழ்ச்சியின் நிறைவாக அனைத்து இதயவியல் துறை மாணவர்களும் இணைந்து இதய வடிவ சின்னம் உருவாக்கி இதயத்தை பாதுகாப்பதின் நோக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஏற்பாடு களை நிர்வாக அதிகாரி சந்துரு, இதயவியல் துறை உதவி பேராசிரியர்கள் குளோரி மெர்லின், மிராக்ளின் ஷேரன் விஜய், சிவசங்கரி, அனிதா, சந்தோஷ் ஜெயசூர்யா, கோவர்த்தன விஷ்ணு மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×