என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியை டீன் ரேவதி பாலன் கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
இன்று உலக இருதய தினம்- நெல்லை அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி
- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- பேரணியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
உலக அளவில் இதய நோய்களால் பாதிக்கப்படு வதையும், மாரடைப்பால் மரணமடைவதையும் தடுக்கும் வகையில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
விழிப்புணர்வு பேரணி
அதன்படி இந்த ஆண்டு இன்று இருதய தினத்தை யொட்டி நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து பல்நோக்கு மருத்துவமனை வரை பேரணியாக விழிப்புணர்வு கோஷ மிட்டு பதாகைகள் ஏந்திய படி நடந்து சென்றனர். பின்னர் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் மாணவ-மாணவிகள் கைகளால் இருதய வடிவில் நின்று விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.
இந்த பேரணியில் மருத்துவமனை கண்கா ணிப் பாளர் பால சுப்பிர மணியம், உதவி முதல்வர் சுரேஷ் துரை, இதயவியல் மருத்துவத்துறை தலைவர் ரவிச்சந்திரன் எட்வின், செவிலியர் ஆசிரியர் செல்வம் மற்றும் மருத்துவ கல்லூரி மாண வர்கள் கலந்து கொண்டு இருதயம் வடிவில் நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.






