search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness Program"

    • விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்

    செய்யாறு:

    செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் க.ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வழக்கறிஞர் அசோக், முதுகலை ஆசிரியர் குமரவேல், உடற்கல்வி இயக்குனர் சூரியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக டி எஸ் பி வெங்கடேசன் கலந்துகொண்டு , போதைப் பொருள் பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனதிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமாக கூறினார். தொடர்ந்து மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    பள்ளி வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலத்தினை போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர்வு ஊர்வலம் பிரதான சாலையான காந்தி சாலை, ஆற்காடு சாலையில் உழவர் சந்தை வரை சென்றது. ஊர்வலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப் இன்ஸ்பெக்டர் சங்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் பி.சரவணன், டி.ரகுராமன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • போதைப் பொருள்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
    • போதைப்பொருள்லிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் காவல் துறை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.காங்கயம்- தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கயம் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன், பள்ளியின் தலைமை ஆசிரியா் சிவகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

    இதில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்தும், போதைப் பொருள்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும், பாலியல் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கயம் போலீசார், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • சுமார் 89,337 பொதுமக்களிடம் உறுதி மொழி எடுக்கப்பட்டுள்ளது.
    • முத்துநகர் பீச் பகுதியில் போலீசார் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி குரும்பூர், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம், எட்டை யாபுரம், மெஞ்ஞான புரம் மற்றும் தூத்துக்குடி வடபாகம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி

    மாற்றத்தைதேடி

    3097 மாற்றத்தை தேடி விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 89,337 பொதுமக்களிடம் உறுதி மொழி எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி குரும்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நாலுமாவடி பகுதியிலும், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் வானரமுட்டி கிராமத்திலும், எட்டையாபுரம் காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் அங்காள ஈஸ்வரி மற்றும் போலீசார் குமாரகிரிபுதூர் பகுதியில் பொது மக்களிடமும், மெஞ்ஞான புரம் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ் மற்றும் போலீசார் சத்யாநகர் பொது மக்களிடமும், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் குமரே சன், ரவிச்சந்திரன், சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் திருமலை ராஜ் மற்றும் போலீ சார் முத்துநகர் பீச் பகுதியில் பொதுமக்களிடமும் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

    விழிப்புணர்வு

    அதன் மூலமாக கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்து வதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண்களான 1098, 1091, 181 ஆகிய செல்போன் எண்கள் குறித்து எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் காவல்துறை யினரின் முன்னிலையில் பொதுமக்கள் குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கு வோம் என்ற அடிப்படையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • செருவலூர் ஊராட்சியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
    • நிகழ்ச்சியில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை பொதுமக்கள் எடுத்து கொண்டனர்.

    திருவாரூர்:

    உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அரசு ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் செருவலூர் ஊராட்சியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    பூந்தோட்டம் மருத்துவ அலுவலர் டாக்டர் விநாயகர்வேலன் தலைமை தாங்கினார். பல் மருத்துவர் ஆனந்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் உமாராணி, மருத்துவ துணைஇயக்குனரின் உதவியாளர் கணேசன், சித்தா டாக்டர் சரண்யா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
    • 63 வகையான உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார். 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்துள்ளது.

    அதனை தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் முன்முயற்சிகள் மூலம் குடிமக்களிடையே ஆரோக்கியமான மற்றும் மாறுபட்ட உணவின் ஒரு பகுதியாக சிறுதானிய உணவுகளை இணைப்பதை ஊக்குவித்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை, வேளாண்மை துறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட, நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், பள்ளி மாணவிகள் ஆகியோர் இணைந்து சர்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் வேளாண்மை துறை சார்பில் சிறுதானிய இனிப்புகள் மற்றும் சிறுதானிய விதைகள் காட்சிப்படுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் சார்பாக 15 வகையான சிறுதானிய வகை உணவு பொருட்களையும் மற்றும் 35 வகையான சிறுதானியங்களை காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து திருவண்ணாமலை அரசு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 63 வகையான சிறுதானியத்தால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட சிறுதானியத்தால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் சிறுதானிய விதைகளை பார்வையிட்டார். மேலும் பள்ளிகளில் காலை வழிப்பாட்டு கூட்டத்தின் போது சிறுதானியத்தின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உணவு இடைவேளையின் போது சிறுதானிய சிற்றுண்டிகள் உட்கொள்ளவும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    • மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் தேசிய குடற்புழு நீக்க தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கலந்து கொண்டு குடற்புழு உருவாக்கம், அதை நீக்குவது குறித்து எடுத்து கூறினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு பொது சுகாதாரதுறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கலந்து கொண்டு குடற்புழு உருவாக்கம், அதை நீக்குவது குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்து கூறினார்.

    தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் அவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. கல்லூரி நூலகர் முகம்மது முகைதீன் நன்றி கூறினார்.

    • கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் பிப்ரவரி 9-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பல்லடம் :

    கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ந்தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து பல்லடத்தில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பல்லடம் தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்துறை சார்பில், பல்லடம் பஸ் நிலையம் மற்றும் கடைவீதி உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், பொதுமக்கள் மற்றும் கடைகளில் பணி புரியும் தொழிலாளர்கள், கடை உரிமையாளர்கள் ஆகியோருக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் பல்லடம் தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் சுகந்தி, வருவாய்த்துறை ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக உதவியாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • புத்தக திருவிழாவில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துமாறு தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் குமரன், தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி ஆகியோரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து திருப்பூரில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார். கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை குறித்தும், கொத்தடிமை தொழிலாளர் கண்டறியப்பட்டால் அதற்கு விதிக்கப்படும் அபராதம், அவர்கள் மறுவாழ்வுக்கு அரசு செய்துள்ள ஏற்பாடுகள் தொடர்பான விவரங்களை திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணயாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்தார்.

    விழாவில் மாவட்ட நூலக அலுவலர், திருப்பூர் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், விழுதுகள் அமைப்பின் தலைவர், அதன் உறுப்பினர்கள், பள்ளி குழந்தைகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    தாரை, தப்பட்டை கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு பாடல்கள் பாடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பலூன்களை வானில் பறக்க விட்டனர். கொத்தடிமை தொழிலாளியாக நடத்தினால் சட்டப்படி தண்டனை வழங்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

    • பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதற்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்து இடங்களை கண்டறிவது, மற்றொன்று நம்மை காக்கும் 48.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர்களாக நெல்லை வட்டார மண்டல போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபா கரன், சாலை பாதுகாப்பு குழு தலைவர் நைனா முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்துக்கு அதிகாரி சந்திரசேகர் பேசியதாவது:-

    விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதற்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்து இடங்களை கண்டறிவது, மற்றொன்று நம்மை காக்கும் 48.

    இந்த திட்டத்தின் கீழ் 48 மணி நேரத்திற்குள் மருத்துவ மனையில் சேர்த்தால் அந்த செலவை அரசே ஏற்கிறது. விபத்துக்குள்ளானவர் களை உடனே மருத்துவ மனைக்கு கொண்டுசென்று காப்பாற்றுபவர்களுக்கு நற்கருணை வீரர் விருது தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    மேலும், சாலை விதிகளை மதிக்காதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யும் நிலை கூட ஏற்படும். இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது சாலை விதிகளை மதித்து கவனத்துடன் செல் வதன் மூலம் பாது காப்பான பயணத்தை மேற்கொள்ளவேண்டும்.

    உங்களை நம்பி பெற் றோர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிறுவனர் கிளிட்டஸ் பாபு பேசுகையில், மாணர்கள் தங்களது வாழ்க்கையில் லட்சியங்களை அடைய சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம். வாகனங்களில் செல்லும்போது சாலை பாதுகாப்பு விதிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    இதனையடுத்து, சாலை பாதுகாப்பு குழு தலைவர் நைனா முகமது, சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களையும், ஓட்டுநர் உரிமம் குறித்த அவசியத்தை வலியுறுத்தினார். தொடர்ந்து மாணவ,மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து, சாலை விதிகளை மதிப்போம் என மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முடிவில் இயக்குநர் ஜான் கென்னடி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் ஸ்காட் கல்வி குழும தாளாளர் பிரதர்ஷினி அருண்பாபு, பொது மேலாளர்கள் ஜெயக் குமார், கிருஷ்ணகுமார், இயக்குநர்கள் முகமது சாதிக், ஜான் கென்னடி, பேராசிரியர் ஸ்டீபன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வளாக மேலாளர் சகாரிய கேப்ரியல் வழிகாட்டுதலின் பேரில் நாட்டு நலத்திட்ட பணி இயக்குநர் சுமன் செய்திருந்தார்.

    • இளையான்குடி கல்லூரியில் மாணவர்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், தொழில் முனைவு, புதுமை மற்றும் தொழில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து ''தமிழ்நாடு மாணவர் கண்டுபிடிப்பாளர்கள்'' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக உறுப்பினர் அப்துல் முத்தலீப் வரவேற்றார். வணிகவியல்துறை தலைவர் நைனா முகம்மது வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொழில் முனைவு, புதுமை மற்றும் தொழில் மைய, கள ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் கலந்துகொண்டு பேசினார். தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    • விபத்து ஏற்படுவதை தடுக்க சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
    • விபத்து ஏற்படுவது போல் நடித்து காட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு - 2, தெற்கு போலீஸ் ஆகியன சார்பில், மத்திய பஸ் ஸ்டாண்டில், சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தெற்கு சைபர் கிரைம் இன்ஸ்பெ க்டர் சொர்ணவள்ளி, எஸ்.ஐ., ஆண்டவன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.'அதிவேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். விபத்து ஏற்படுவதை தடுக்க சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். லைசன்ஸ் இல்லாதவர் சாலையில் வாகனத்தை இயக்க அனுமதில்லை.

    மொபைல் போன் பேசியபடி வாகனத்தை இயக்குவதால் விபத்து ஏற்படுகிறது,' என, அறிவுரை வழங்கப்பட்டது.மாணவ செயலர் ராஜபிரபு, பூபதிராஜா தலைமையிலான குழுவினர், 'போதையில் வாகன ஓட்டும் போதும், மொபைல் போன் பேசியபடி வாகனத்தை இயக்கும் போது ஏற்படும் விபத்து ஏற்படுவது போல் நடித்து காட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை செய்திருந்தார்.

    • ராணுவ மையம் சாா்பில் சோலடாமட்டம் கிராமத்தில் அவுட்ரிச் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தூய்மையின் முக்கியத்துவத்தை ராணுவ வீரா்கள் விளக்கினா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், வெலிங்டன் கண்டோ ன்மென்டுக்குட்பட்ட வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் சோலடாமட்டம் கிராமத்தில் அவுட்ரிச் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், கிராம மக்களுக்கான மருத்துவ முகாம், கைப்பந்து விளையாட்டு, உடல்நலம் மற்றும் சுகாதாரம் பற்றிய விரிவுரைகளை ராணுவ மருத்துவா்கள் மற்றும் விளையாட்டுத் துறையினா் எடுத்துரைத்தனா்.

    மேலும், சமீபத்தில் தொடங்கப்பட்ட அக்னிபாத் திட்டம், அக்னிவீரா் சோ்க்கை மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிகழ்சியில், தூய்மையின் முக்கியத்துவத்தை ராணுவ வீரா்கள் விளக்கினா். இதில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாசதிஷ்குமார், இளைஞா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட சோலாடாமட்டம் பகுதியில் ராணுவத்தின் மூலம் மருத்துவ முகாம் முதியோருக்கு நலத்திட்டம், ஆண்களுக்கு விளையாட்டுப் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி ராணுவத்தில் சேர்வதற்கான அறிவுரைகளை அளித்த ராணுவ அதிகாரிகளுக்கு ஊராட்சி சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் ஊராட்சிமன்ற தலைவர் மஞ்சுளா சதிஷ்குமார் தெரிவித்தார்.

    ×