search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • புத்தக திருவிழாவில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துமாறு தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் குமரன், தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி ஆகியோரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து திருப்பூரில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார். கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை குறித்தும், கொத்தடிமை தொழிலாளர் கண்டறியப்பட்டால் அதற்கு விதிக்கப்படும் அபராதம், அவர்கள் மறுவாழ்வுக்கு அரசு செய்துள்ள ஏற்பாடுகள் தொடர்பான விவரங்களை திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணயாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்தார்.

    விழாவில் மாவட்ட நூலக அலுவலர், திருப்பூர் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், விழுதுகள் அமைப்பின் தலைவர், அதன் உறுப்பினர்கள், பள்ளி குழந்தைகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    தாரை, தப்பட்டை கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு பாடல்கள் பாடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பலூன்களை வானில் பறக்க விட்டனர். கொத்தடிமை தொழிலாளியாக நடத்தினால் சட்டப்படி தண்டனை வழங்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

    Next Story
    ×