search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருள் ஒழிப்பு"

    • விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
    • போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கடலூர்:

    ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதைப் பொருள் ஒழிப்பு தினமான இன்று கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாரத்தான் போட்டியில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டார்.

    இந்த போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு டவுன்ஹாலில் இருந்து பாரதி சாலை, பீச் ரோடு வழியாக சென்று கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் முடித்தனர். அப்போது கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, போலீஸ் இன்ஸ்பெ க்டர்கள் குருமூர்த்தி, உதயகுமார் மற்றும் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

    • போதைப் பொருள்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
    • போதைப்பொருள்லிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் காவல் துறை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.காங்கயம்- தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கயம் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன், பள்ளியின் தலைமை ஆசிரியா் சிவகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

    இதில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்தும், போதைப் பொருள்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும், பாலியல் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கயம் போலீசார், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • போதைப்பொருட்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும் என விஜயகாந்தி கோரிக்கை
    • டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

    சென்னை:

    தமிழகத்தில் போதை மருந்து நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, அதனை விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். போதை பொருளை தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். முதல்வரின் நடவடிக்கை தொடர்பாக அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.

    அவ்வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் தூண்களாக இருக்கும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

    புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய திமுக, 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?

    கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, மதுபானங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும் போதை இல்லாத பாதையில் இன்றைய இளைஞர்களை வழிநடத்தி செல்ல வேண்டியது தமிழக அரசின் கடமை.

    இவ்வாறு விஜயகாந்த் கூறி உள்ளார்.

    ×