என் மலர்
உள்ளூர் செய்திகள்

துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட காட்சி.
கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் பிப்ரவரி 9-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
- பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பல்லடம் :
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ந்தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து பல்லடத்தில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பல்லடம் தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்துறை சார்பில், பல்லடம் பஸ் நிலையம் மற்றும் கடைவீதி உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், பொதுமக்கள் மற்றும் கடைகளில் பணி புரியும் தொழிலாளர்கள், கடை உரிமையாளர்கள் ஆகியோருக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் பல்லடம் தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் சுகந்தி, வருவாய்த்துறை ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக உதவியாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story