search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Award"

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 5.12 கோடி செலவில் மாநகராட்சி நிர்வாகம் புதுப்பித்தது.
    • கலாசார பிரிவில் 39 நகரங்களிலிருந்து பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேல வீதியிலுள்ள அய்யன் குளம் நாயக்க மன்ன ர்கள் காலத்தில் உருவாக்க ப்பட்டது. மொத்தம் 7 ஆயிரத்து 630 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இக்குள த்துக்கு பெரிய கோயில் அருகிலுள்ள சிவகங்கை குளத்திலிருந்து நீர் ஆதாரம் ஏற்படுத்தப்பட்டது.

    இதற்காக சிவகங்கை குளத்திலிருந்து அய்யன் குளத்துக்கு சுரங்க நீ ர்வழிப்பாதை அமைக்கப்ப ட்டது.

    காலப்போக்கில் பராமரி ப்பின்மை காரணமாக நீர் வரத்து இன்றி மிக மோசமான நிலையில் இருந்த இக்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 5.12 கோடி செலவில் மாநகராட்சி நிர்வாகம் புதுப்பித்தது.

    இதில், குளம் தூர் வாரப்பட்டு, சுற்றிலும் நடைபாதை, அலங்கார மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், நடைபாதையோரம் 64 வகையான ஆயக்கலைகள், ஐவகை நிலங்கள் உள்ளிட்டவற்றை விளக்கும் ஓவியப் பதாகைகள் காட்சிப்ப டுத்தப்பட்டு உள்ளன.

    நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்க நீர்வழிப் பாதையைக் கண்டுபிடிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டவிருது போட்டியை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் 2022 ஆம் ஆண்டு நடத்தியது.

    இப்போட்டி சுற்றுச்சூழல், கலாசாரம், பொருளாதாரம், ஆளுமை, வணிக மாதிரி, தூய்மை உள்பட பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில், கலாசார பிரிவில் 39 நகரங்களிலிருந்து பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இப்பிரிவில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பாரம்பரிய கட்டுமா னம், சுற்றுலாவை மேம்படுத்தி யதற்காக அகமதாபாத், பாரம்பரிய கட்டடங்களைப் புனரமைப்பு செய்த தற்காக போபால், அய்யன் குளத்தைப் பாதுகாத்தலுக்காக தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

    இதில் கலாச்சார பிரிவில் அகில இந்திய அளவில் தஞ்சாவூர் மாநகராட்சி அய்யன்குளத்திற்கு 3-ம் இடம் கிடைத்தது .

    இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    அப்போது இந்திய அளவில் 3-ம் இடம் பிடித்த தஞ்சாவூர் மாநகராட்சி அய்யன்குளத்திற்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் , தஞ்சை மாநகராட்சி மேயர் சண் ராமநாதனிடம் வழங்கி பாராட்டினார் . அப்போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அரியலூரில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது
    • அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அழைப்பு

    அரியலூர்,

    பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரியலூர் மாவட்டம் தோட்டக்கலை மற்றும்ம லைப்பயிர்கள் துறை மூலம் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும்வி வசாயிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. சொந்த நிலம் அல்லது குத்தகை நிலத்தில் காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பாரம்பரிய ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய விதைகளை கொண்டு சேர்த்தல், நீர் மேலாண்மை, மண்வள மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்ற காரணிகள் குறித்து மாவட்ட அளவிலான நிபுணர் குழு மூலம் விவசாயிகள் தேர்தெடுக்கப்படுகின்றனர். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் செப்.30-க்குள் தோட்டக்கலைதுறை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் பங்கேற்கலாம்.
    • தோட்டக்கலை அலுவலகங்களில் வருகின்ற 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி, செப்.21-

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில், தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விள ங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளது. மேலும், சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பங்கேற்கலாம்.

    அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்து பிற விவசாயிகளிடம் பாரம் பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், முறை யான மண்வள மேம்பாடு அங்கக முறையில் விதை களை மீட்டெடுத்தல் போன்ற காரணங்களின் அடிப்படை யில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் சிறந்த விவசாயிகள் தேர்ந்தெ டுக்கப்படுவார்கள். மேலும், இதற்கான விண்ணப்பம் மற்றும் வழிகாட்டு நெறி முறைகள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்ப ட்டுள்ளது. விருது பெறுப வர்களுக்கு முதல் பரிசாக ரூ15,000 2-ம் பரிசாக ரூ.10,000 வரைவோலை வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க இத்திட்ட த்தின்கீழ் தோட்டக் கலை த்துறை இணைய தளத்தில் விண்ண ப்பிக்கலாம் அல்லது விண்ண ப்பங்களை பூர்த்தி செய்து வட்டார தோட்டக்கலை அலுவலகங்களில் வருகின்ற 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும், கூடுதல் தகவலுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களான உமா கள்ளக்குறிச்சி- 8098327732, முருகன் சின்னசேலம்- 9787863135, சத்தியராஜ் சங்கராபுரம்- 9524737498, முருகன் ரிஷிவந்தியம்- 9688940083, சக்திவேல் திருக்கோவிலூர்- 7811967632, முரளி திருநா வலூர்- 9976196911, சொர்ணம் தியாகதுருகம்- 8903555527, விஜயலட்சுமி உளுந்தூர்பேட்டை- 9894142635, வாமலை வெள்ளி மலை- 9787237797 ஆகியோர்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டும் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவல கங்களை நேரில் அணுகியும் தகவல் பெற்று பயன்பெற லாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • அண்ணா நூற்றாண்டு அரங்கில் வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மாநாடு நடக்கிறது.
    • மாநாட்டில் 10 அறிஞர்களுக்கு உலக பெருந்தமிழர் விருது வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    உலகத்தமிழர் பேரமை ப்பின் 10-ம் ஆண்டு மாநாடு தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

    2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ் அறிஞர்களும், தொல்லாய்வு அறிஞர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    முதல் நாள் மாநாட்டுக்கு அரசு தலைமை தாங்குகிறார்.

    சிவசுப்பிரமணியன் தொடக்க உரை ஆற்றுகிறார். 2-ம் நாள் கருத்தரங்கிற்கு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பால சுப்பிரமணியம் தலைமை தாங்குகிறார்.

    வக்கீல் பானுமதி தொடக்க உரை ஆற்றுகிறார். இதில் பல்வேறு அறிஞர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    மாநாட்டில் தமிழுக்கு அயராது தொண்டாற்றி வரும் 10 அறிஞர்களுக்கு உலக பெருந்தமிழர் விருது வழங்கப்படுகிறது.

    முதல்நாள் விருந்தளிப்பு விழாவிற்கு கவிஞர் காசி ஆனந்தன், 2-ம் நாள் நடைபெறும் விழாவிற்கு சு.வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    விருதுகளை நான் வழங்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 63-வது மாநில அளவிலான காவல்துறை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • திருப்பூர் மாநகர ஆயுதப்படை முதல்நிலை பெண் காவலர் விஜயபாண்டி பங்கேற்றார்.

    திருப்பூர்

    சென்னை புதுப்பேட்டை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் 63-வது மாநில அளவிலான காவல்துறை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர ஆயுதப்படை முதல்நிலை பெண் காவலர் விஜயபாண்டி பங்கேற்றார். இவர் மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கம், பளுதூக்கும்போட்டியில் வெள்ளிப்பதக்கம், கைமல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

    இதுபோல் திருப்பூர் மாநகர ஆயுதப்படை காவலர் அமித்குமார், பளுதூக்கும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.இதைத்தொடர்ந்து பதக்கம் வென்ற ஆயுதப்படை காவலர்கள் விஜயபாண்டி, அமித்குமார் ஆகியோரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

    • சிகரம் 2023 விருது வழங்கும் விழா புதுச்சேரியில் நடைபெற்றது.
    • இவ்வாண்டிலும் இவ்விருதினை தொடர்ந்து பெறுவது என்பது எங்களுக்கு மிகவும் பெருமைக்குரியதாக உள்ளது‌.

    புதுச்சேரி:

    தமிழ்நாட்டின் செய்தி தொலைக்காட்சி நிறுவனமானது சிகரம் விருது என்ற விருதுகள் வழங்கும் விழாவினை ஆண்டுதோறும் கல்வி சேவையில் சிறந்து விளங்குவோரை அங்கிகரிக்கும் நோக்கத்தோடு நடத்தி வருகிறது.

    அதன் அடிப்படையில் இவ்வாண்டிற்கான சிகரம் 2023 விருது வழங்கும் விழா புதுச்சேரியில் நடத்தியது.இதில் பல்வேறு கல்வியாளர்கள், வல்லுநர்கள் ,கல்வி நிறுவனத்தினர் பலர் பங்கேற்றனர்.

    சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .

    இந்நிகழ்வில் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிகரம்-2023 சிறந்த உயர்கல்விக்கான விருது சிறப்பு விருந்தினர்கள் மூலம் வழங்கப்பட்டது.

    இதனை துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து துறைக்கு இவ்விருதானது 2-வது முறையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:-

    கடந்தாண்டு மற்றும் இவ்வாண்டிலும் இவ்விருதினை தொடர்ந்து பெறுவது என்பது எங்களுக்கு மிகவும் பெருமைக்குரியதாக உள்ளது.

    இவ்விருதானது எங்கள் கல்லூரியின் உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் தகுதி மாணவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி தருவதற்காக மேற் கொள்ளும் நடவடிக்கைகள் என பல்வேறு செயல்பாடு களை அடிப்படையாகவும் , ஆராய்ந்து இவ்விருது வழங்கப் பட்டுள்ளது.

    இது எங்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. என்றார்.

    இவ்விருதினை பெறுவதற்கு தனது சிறந்த பங்களிப்பினை அளித்த துறையின் டீனுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் மற்றும் துறை பேராசிரியர்கள் வாழ்த்தினையும் பாராட்டையும் தெரி வித்தனர்.

    • 18 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்பிக்கடைசி நாள் 31.8.2023 ஆகும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - தேசிய குழந்தைகள் விருது 2023-ற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது அறிவிக்கப்பட்டு 18 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    புதிய கண்டுபிடிப்பு , கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரத்தீர செயல் புரிந்த தனி தகுதிப்படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக (பால் புரஷ்கார் )எனும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகியவற்றை கொண்டதாகும். இவ்விருதுக்கான தகுதியுடையோர் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற முறைகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்பிக்கடைசி நாள் 31.8.2023 ஆகும். இறுதி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருது பெரும் போட்டியில் வாடியூர், மாயமான்குறிச்சி, மேலவீராணம் ஆகிய ஊராட்சிகள் மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளனர்.
    • தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், மாயமான்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் பால்தாய் ஆகியோரிடம் சான்றிதழை வழங்கினார்.

    ஆலங்குளம்:

    மத்திய அரசின் 2023-ம் ஆண்டிற்கான தேசிய ஊராட்சிகள் விருது பெரும் போட்டியில் பங்கு கொண்டு தமிழ்நாடு மாநில அளவில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த வாடியூர், மாயமான்குறிச்சி, மேலவீராணம் ஆகிய ஊராட்சிகள் மாநில அளவில் முதல் இடத்தையும், மாறாந்தை ஊராட்சி மாநில அளவில் 2-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையின் சார்பாக வழங்கப்பட்ட சான்றிதழை தென்காசியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், மாயமான்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் பால்தாய் ஆகியோரிடம் வழங்கினார்.

    • கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், மணவாசி நடுநிலை பள்ளிக்கு ‘புதிய பாரத எழுத்தறிவு’ விருது வழங்கப்பட்டு உள்ளது
    • எழுதபடிக்கத்தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்கியதற்காக விருது வழங்கப்பட்டது

    கரூர்,

    தமிழகத்தில், மத்திய அரசு சார்பில், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வியை வழங்கிடும் நோக்கில், 'புதிய பாரத எழுத்தறிவு' திட்ட செயல்படுத்தப்படுகிறது. இதில், எழுத்தறிவு மட்டுமல்லாது வங்கி ஏ.டி.எம்., அஞ்சலக பயன்பாடு குறித்து பயிற்சிகள் தரப்படுகிறது. இதில், மாவட்டங்களில் சிறப்பாக செயல்படும் மையம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. அதன்படி, கரூர் மாவட்டத்தில், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மணவாசி நடுநிலைப்பள்ளி சிறந்த மையமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற ஆசிரியர் பயிற்றுனர் செந்தாமரைச்செல்வி, தலைமை ஆசிரியர் தேன்மொழி தன்னார்வலர் வசந்தி ஆகியோருக்கு, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா வாழ்த்து தெரிவித்தார்.

    • அரசு பள்ளிக்கு ‘புகையிலை இல்லா கல்வி நிறுவனம்’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது
    • சான்றிதழை சுகாதார ஆய்வாளர் வழங்கினார்

    கரூர்,

    புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்ப டுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு புகையிலை பொருட்களால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை விளக்கி அவற்றை பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து கல்வி நிறுவனங்களும் "புகையிலை இல்லா கல்வி நிறுவனம்" என்ற சான்றிதழை பெற அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆய்வு செய்து சான்று கரூர் கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வு செய்யப்பட்டு, "புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி" 'என்ற பதாகைகள் வைக்கப்பட்டன. புகையிலை தடுப்பு சட்டத்தை விளக்கி பள்ளி வளாகத்தில் புகைப்பிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல் தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டு, மீறி பயன்படுத்தினால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.fileimaஇந்த நடவடிக்கையின் படி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு "புகையிலை இல்லா கல்வி நிறுவனம்" என்ற சான்றிதழை சுகாதார ஆய்வாளர் கோகுல் ராஜ், தலைமை ஆசிரியர் சாகுல் அமீதுவிடம் பள்ளிக்கு நேரில் வந்து வழங்கினார்.

    • புனேயில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு பிறகு மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    புனே:

    சுதந்திர போராட்டத்தில் முக்கிய நபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலகங்காதர திலகர். அவர் திலக் மகராஜ், லோக மான்ய திலகர் என்றும் போற்றப்பட்டார்.

    லோகமான்ய திலகரின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களுக்கு திலக் ஸ்மார்க் மந்திர் அறக்கட்டளையால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ந்தேதி திலக் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கரஸ் தலைவருமான சரத்பவார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மோடியுடன் அவர் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தார்.

    இந்த விழாவில் சரத் பவார் கலந்து கொள்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. மகாராஷ்டிராவில் இந்த 3 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சியின் எதிர்ப்பையும் மீறி சரத்பவார் இந்த விழாவில் கலந்து கொண்டார். இதனால் அவர் மீது காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அதிருப்தி அடைந்தன.

    இதற்கிடையே பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

    லோகமான்ய திலகர் தேசிய விருதை பெறுவதற்கு முன்பு பிரதமர் மோடி புனேயில் உள்ள கணேசர் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

    விருது நிகழ்ச்சிக்கு பிறகு மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    • ஒரு ஏக்கர் பரப்பளவில் அங்கக வேளாண்மையில் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
    • தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் ரொக்க பரிசு வழங்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்த (2023-24)-ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி, சக விவசாயிகளையும் ஊக்குவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது.

    விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளத்தில் வருகிற நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.100 ஆகும்.

    குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவில் அங்கக வேளாண்மையில் பயிர் சாகுபடி செய்ய வேண்டும். முழு நேர அங்கக விவசாயியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

    வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை குடியரசு தினவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.

    இதில் முதல் பரிசாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பதக்கம், 2-ம் பரிசாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பதக்கம் வழங்கப்படும்.

    மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×