search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attempt"

    • மேச்சேரி அருகே கோவில் உண்டியலை உடைக்க முயன்ற 2 பேர் கைது செய்தனர்.
    • திருட முயன்ற மர்ம நபர்கள் 2 பேரையும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள சிந்தாமணியூர் பகுதியை சேர்ந்தவர் செல்வசக்தி. இவர் இந்த கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் அருகே ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது,

    இக்கோவில் நுழைவு வாயில் கேட்டினை 2 நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முற்பட்டனர். இதை கண்ட செல்ல சக்தி உடனே சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு அங்கு வந்து திருட முயன்ற மர்ம நபர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இவர்கள் இருவரும் சேலம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் தீபன்ராஜ் ( வயது 23) மற்றொருவர் தீபக் (23) என்பதும், இவர்கள் இருவரும் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட முயற்சி செய்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து 2 பேரையும் பொதுமக்கள் மேச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    செங்குன்றம் அருகே காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுதொடர்பாக காதலனை போலீசார் கைது செய்தனர்.
    ஊத்துக்கோட்டை:

    செங்குன்றம் அருகே உள்ள ஆரிக்கம்பட்டை சேர்ந்தவர் ஜெயபால். பூ வியாபாரி. இவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.

    திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஜெயபால் இளம்பெண்ணுடன் உல்லாசமாக சுற்றி வந்தார். இந்த நிலையில் ஜெயபாலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்ததாக தெரிகிறது.

    இதனை அறிந்த இளம்பெண், அவரிடம் தட்டிக்கேட்டார். அப்போது ஜெயபால் இளம்பெண்ணை திட்டி திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார். இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் வி‌ஷம் குடித்து மயங்கினார்.

    அவருக்கு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இளம்பெண்ணின் தாய் ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தார்.
    ரஷிய விமானத்தை கடத்த முயன்ற குடிகார நபரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #RussianFlight #HijackPlane
    மாஸ்கோ:

    ரஷிய விமானம் ஒன்று, சைபீரியாவின் சூர்குத் நகரத்தில் இருந்து மாஸ்கோ நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு நபர், விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு திருப்பும்படி விமான ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் விமானி அந்த விமானத்தை அவசரமாக காண்டி மான்சிய்ஸ்க் நகரில் தரையிறக்கினார். அந்த விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் அந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்தது.

    போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீசார் விமானத்தில் ஏறி அந்த நபரை கைது செய்தனர். குடிபோதையில் இருந்த அவர் சூர்குத் நகரை சேர்ந்தவர் என்பதும், சொத்துகளை சேதம் செய்த வழக்கில் தண்டனை அனுபவித்தவர் என்பதும் தெரிந்தது. அவர் மீது விமானத்தை கடத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #RussianFlight #HijackPlane

    அம்பத்தூரில் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்பத்தூர்:

    அம்பத்தூர், சி.டி.எச். சாலையில் உள்ள தொலைப்பேசி இணைப்பகம் அருகே இன்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள ‘சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா’ வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் உள்ள வருகை புத்தகத்தில் கையெழுத்திட ரோந்து போலீசார் சென்றனர்.

    அப்போது ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்து இருந்தது. மேலும் கண்காணிப்பு கேமிராவும் திருப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் மர்ம கும்பல் தங்களது திட்டத்தை கைவிட்டு தப்பி சென்று இருப்பது தெரிந்தது. இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

    இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    பிரேசில் நாட்டில் வங்கிக் கொள்ளையர்களுக்கும் போலீசாருக்குமிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பிணைக்கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். #BrazilBankRobbery
    ரியோ டி ஜெனீரோ:

    பிரேசில் நாட்டின் சியரா மாநிலம் மிலாக்ரஸ் நகரின் பிரதான சாலையில் பல்வேறு வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் உள்ளன. நேற்று அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளைக் கும்பல், வங்கிகளுக்குள் சென்று  கொள்ளையடிக்க முயன்றது. ஏடிஎம் மையங்களையும் உடைக்க முயற்சித்துள்ளனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். கொள்ளையர்களும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அத்துடன் அங்கிருந்து தப்பிச் செல்லும் முயற்சியாக, பொதுமக்கள் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்தனர்.



    பின்னர் போலீசாரின் தாக்குதல் தீவிரமடைந்ததால் பிணைக் கைதிகளை கொள்ளையர்கள் சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடினர். அவர்களை சுற்றி வளைத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

    சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சண்டையில் 6 பிணைக் கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சில கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். #BrazilBankRobbery
    கொடைக்கானல் மலையில் கொலை செய்யப்பட்டு பள்ளத்தாக்கில் வீசப்பட்ட வாலிபர் உடலை 3-வது நாளாக மீட்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மதுரை ஜெய்ஹிந்த் புரம் சோலை அழகுபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவருடன் 4 பேர் கொடைக்கானலுக்கு கடந்த 24-ந் தேதி சுற்றுலா வந்தனர். மணிகண்டன் என்பவருக்கும் அவரது நண்பர் சீனிவாசன் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் மணிகண்டனை கொலை செய்யும் நோக்கில் சீனிவாசன் மற்றும் அவரது கூட்டாளிகள் சபரி, மகாராஜன், சரவணன், ஆகியோர் கொடைக்கானலுக்கு அழைத்து வந்தனர்.

    வட்டக்கானல் பகுதியில் அவர்கள் தங்கி இருந்து விட்டு இரவு விடுதியில் மது அருந்தினர். பின்னர் மணிகண்டனை கொலை செய்து பாம்பார்புரத்தில் 3 ஆயிரம் அடி பள்ளத்தில் தூக்கி வீசினர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் மதுரைக்கு திரும்பி விட்டனர்.

    இதனிடையே மணிகண்டனின் குடும்பத்தினர் அவரை காணாமல் திடுக்கிட்டு ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் நண்பர்களே அழைத்துச் சென்று கொலை செய்து கொடைக்கானலில் வீசிச் சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து தீயணைப்புத்துறையினர், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கடந்த 2 நாட்களாக கொலை செய்யப்பட்ட மணிகண்டன் உடலை தேடி வந்தனர்.

    வட்டக்கானல் பகுதியில் 1,000 அடிக்கு கீழ் பாறைகளின் இடுக்கில் மணிகண்டன் உடல் கிடந்ததை நேற்று இரவு உறுதி செய்தனர். ஆனால் வெளிச்சம் இன்மை காரணமாகவும், சாரல் மழை பெய்ததாலும் அவரது உடலை மேலே கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது.

    இதனையடுத்து உடலை எடுத்து வருவதற்கான உபகரணங்கள் அனைத்தும் அதே இடத்தில் வைத்து விட்டு அவர்கள் மேலே ஏறினர். இன்று காலையில் மீண்டும் 1,000 அடி பள்ளத்தில் சிக்கியுள்ள மணிகண்டன் உடலை மேலே கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதல் பிரச்சினையில் துணை நடிகை விஷ்ணுபிரியாவின் காதலன் பிரபாகரன் என்பவர் கொலை செய்யப்பட்டு மலையில் வீசப்பட்டார். அவரது உடல் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கொடைக்கானல் நகர மக்களையும் சுற்றுலா பயணிகளையும் பீதியடைய வைத்துள்ளது.

    இயற்கையை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் இது போன்ற கொலைக்களமாக மாறி வரும் கொடைக்கானல் பகுதிக்கு வர அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ×