search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attempt"

    • 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.
    • 4 பேரும் இளம்பெண் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றனர்.

    கோவை,

    கோவை அருகே உள்ள சிறுமுகையை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், கொண்டையாம் பாளையத்தை சேர்ந்த சுவாதி (24) என்பவருக்கும் திருமணம் செய்வது என நிச்சயம் செய்யப்பட்டது.

    சம்பவத்தன்று தனது வருங்கால மனைவிக்கு பிறந்த நாள் என்பதால் ஜார்ஜ் அவரை சரவணம் பட்டியில் உள்ள துணிக்கடைக்கு அழைத்து சென்று ஆடை வாங்கி கொடுத்தார்.

    பின்னர் அவர் சுவாதியை அவரது வீட்டில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். மோட்டார் சைக்கிள் கீரநத்தம்- அத்திப்பாளையம் ரோட்டில் சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த 4 பேர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் தென்னை மட்டையால் ஜார்ஜை தாக்கினர். இதனை தொடர்ந்து அந்த கும்பல் சுவாதி கழுத்தில் அணிந்து இருந்த செயினை பறிக்க முயன்றனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் 4 பேரையும் பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் அங்கு இருந்து ஓடி விட்டனர்.

    இது குறித்து ஜார்ஜ் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரை தாக்கி அவரது வருங்கால மனைவியிடம் செயின் பறிக்க முயன்ற 4 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

    • டாஸ்மாக் கடை கொள்ளை முயற்சி நடந்தது.
    • காமிரா காட்சிகள் வெளியானதால் பரபரப்பு நிலவியது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் - மானாசாலை செல்லும் வழியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு முருகன், பாலகிருஷ் ணன் ஆகியோர் விற்பனை யாளர்களாகவும், திருச்சுழியை சேர்ந்த இரு ளாண்டி சூப்பர்வைசராக வும் பணியாற்றி வருகின்ற னர்.

    இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை அடித்து நொறுக்கிவிட்டு கடையில் இருந்த மதுபான பாட்டில்களை மூட்டை களாக கட்டி தூக்கிக் கொண்டு வெளியே வந்துள்ளனர்.

    அப்போது இரவு ரோந்து செல்லும் வீரசோழன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் அந்தப்பகுதியில் வருவதை கண்ட மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையில் திருடிய மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

    இது தொடர்பாக கடையின் சூப்பர்வைசர் இருளாண்டி கொடுத்த புகாரின் பேரில் வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே டாஸ்மாக் கடையில் புகுந்து மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடும் சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் கடந்த ஒரு வாரமாக பூட்டிய வீடுகளை குறி வைத்து தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது.
    • கடந்த வாரம் பரமத்தி ஆசிரியர் காலனியில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவர் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டி இருந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் கடந்த ஒரு வாரமாக பூட்டிய வீடுகளை குறி வைத்து தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது.

    கடந்த வாரம் பரமத்தி ஆசிரியர் காலனியில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவர் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டி இருந்தனர்.

    அதேபோல் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் வெளியூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் கதவை உடைத்து கைவரிசை காட்டியதும் தெரிய வந்துள்ளது.

    இந்த 2 வீடுகளிலும் பணமோ, மதிப்புமிக்க பொருட்களோ கொள்ளை போகாததால் சம்மந்தப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுக்கவில்லை. எனினும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, பரமத்தியில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி எழுந்து கூச்சலிட்டார். இதையடுத்து அவரை கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவங்கள் பரமத்தியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பரமத்தி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. 

    • ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்தனர்.
    • அலாரம் அடித்தது குறித்து உடனே சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள பரவை மெயின்ரோட்டில் அரசு வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லை. இதை நோட்டமிட்ட மர்மநபர் தலைகவசம் அணிந்தபடி ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்தார். அவர் அங்கிருந்த கற்களை வைத்து ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் பகுதியை திறக்க முயன்றார்.

    இதனால் சத்தம் கேட்டது. தொடர்ந்து அந்த நபர் ஏ.டி.எம்.எந்திரத்தில் கற்களால் உடைக்க முயன்றார். அப்போது திடீரென அதிக சத்தத்துடன் அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர் ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெளியேறி மோட்டார் சைக்களில் தப்பினார்.

    அலாரம் அடித்தது குறித்து உடனே சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. ஏ.டி.எம். மையம் மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த காமிரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட முயன்ற நபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல்லில், சேலம் ரோடு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில், சேலம் ரோடு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.

    இதையடுத்து அந்த பெண் கூச்சலிட்டார். இதை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்தனர். உடனே மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து அந்த பெண் நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தார். அவர் சொன்ன அடையா ளங்களை வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிய 2 பெண்களிடம் செயின் பறிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற சம்பவம் பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே வழிப்பறிக் கொள்ளையர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்தார்.
    • தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வேறு வழியின்றி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் சபரி (வயது 25). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்தார்.

    மேலும் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி டார்ச்சர் கொடுத்துள்ளார். தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வேறு வழியின்றி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை மீட்டு உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின்பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் வாலிபர் சபரி மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல், பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வந்தனர். உறவினர் வீட்டில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்த போலீசார் நேற்று அங்கு சென்று சபரியை கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.

    • வங்கி ஊழியர்கள் மீது புகார் தெரிவித்தார்.
    • கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடந்தது.

    கோவை

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடந்தது. இதில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் தங்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    இதனையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்களை தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

    அப்போது அங்கு வந்த ஒருவர் திடீரென தான் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைப் பார்த்த போலீசார் அவரது கையில் இருந்த மண்எண்ணை கேனை பறித்து அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.

    பின்னர் போலீசார் அவரிடம் தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    எனது பெயர் ராஜேந்திரன் (வயது 60). ஆட்டோ டிரைவர். நான் கடந்த ஜூன் மாதம் வடவள்ளியில் உள்ள ஏ.டி.எம் மையத்துக்கு சென்று ரூ.2500 பணம் எடுக்க முயன்றேன். பணம் வரவில்லை.

    ஆனால் எனது கணக்கில் பணம் பிடித்தம் செய்ததாக காட்டியது. இதுகுறித்து வங்கி மேலாளரிடம் முறையிட்டபோது அவர்கள் என்னை தரக்குறைவாக பேசி அலைக்கழிக்கின்றனர்.

    மேலும் நான் ஏ.டி.எம்-மில் பணம் எடுத்துவிட்டு பொய்யான தகவலை கூறுவதாகவும், போலீசில் புகார் அளிப்போம் எனவும் மிரட்டுகின்றனர்.

    எனவே இந்த பிரச்சினை தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி எனது பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை சந்திப்பு பெருமாள் தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் அருண்ராஜ். எலக்ட்ரீசியன்.
    • கொள்ளை முயற்சி தொடர்பாக சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு பெருமாள் தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் அருண்ராஜ். எலக்ட்ரீசியன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 28). நேற்று இரவு ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் ராஜேஸ்வரியிடம் பிச்சை கேட்டுள்ளார். உடனே ராஜேஸ்வரி பணம் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றுள்ளார்.

    அவரை பின்தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த அந்த நபர் ராஜேஸ்வரியை கத்தியை காட்டி மிரட்டி நகையை கேட்டுள்ளார். அவர் கத்தி கூச்சலிடவே அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.இது தொடர்பாக ராஜேஸ்வரி சந்திப்பு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது ராஜேஸ்வரி வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேறுவது தெரிய வருகிறது. அந்த காட்சி பதிவுகளை கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.

    • கோவிலில் சாமி சிலைகளை திருட முயற்சி நடந்துள்ளது.
    • மரக்கதவுகளை உடைத்து திறக்க முயன்றுள்ளனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஓலைப்பாடி கிராமத்தில் மன்னார் சுவாமி பச்சையம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் வைக்கப்பட்டு உள்ள சாமி சிலையை திருடுவதற்கு மர்ம நபர்கள் நேற்று முன்தினம் அதிகாலை வந்துள்ளனர். அங்கு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதை அறிந்து, கண்காணிப்பு கேமராக்களின் மெயின் சுவிட்சை அணைத்துவிட்டு கடப்பாரை மற்றும் ஆயுதங்களை கொண்டு மரக்கதவுகளை உடைத்து திறக்க முயன்றுள்ளனர். ஆனால் கோவிலின் கதவுகளை உடைக்க முடியாததால் திரும்பி சென்றனர். இதனால் சாமி சிலைகள் தப்பின. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கொங்கந்தான்பாறையை சேர்ந்தவர் காயத்ரி(வயது 22).
    • காயத்ரி நேற்று இரவு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஆம்னி பஸ் நிலையம் பகுதியில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்து நின்றார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கொங்கந்தான்பாறையை சேர்ந்தவர் காயத்ரி(வயது 22). இவர் ஒரு ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஆம்னி பஸ் நிலையம் பகுதியில் அவர் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்து நின்றார்.

    அப்போது அந்த வழியாக நடந்து வந்த வாலிபர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் காயத்ரியின் கம்மல் உள்ளிட்ட நகைகளை பறிக்க முயன்றார். உடனே காயத்ரி கத்தி கூச்சலிட்டார்.

    அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்ற ஆட்டோ டிரைவர்கள் மற்றும பொதுமக்கள் ஓடி வந்து வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்து பெருமாள்புரம் போலீசில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள ஊத்து பகுதியை சேர்ந்த அஜீஸ்(31) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொதுமக்கள் தாக்கியதில் அஜீஸ் காயம் அடைந்தார். இதனால் அவரை போலீசார் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.

    • சேலம் திருவாகவுண்டனூரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்தனர்.
    • வீட்டில் 5 ஆயிரம் ரூபாய் மட்டும் வைத்திருந்ததாகவும், வேறு ஏதும் விலை மதிப்பு மிக்க பொருட்கள் இல்லை என்றும் கூறி உள்ளார்.

    சேலம்:

    சேலம் திருவாகவுண்டனூர் மேத்தாநகரில் வசித்து வருபவர் குணசேகரன் (வயது 60). இவர் திருச்சி பால் பண்ணையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சென்று விட்டார்.

    இந்த நிலையில் வீட்டில் முன்பக்கம் உள்ள மதில் சுவரின் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டின் முன் கதவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை பார்த்த அந்த பகுதியினர் குணசேகரனுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் குணசேகரனிடம் தொடர்பு கொண்டு போலீசார் பேசிய போது வீட்டில் 5 ஆயிரம் ரூபாய் மட்டும் வைத்திருந்ததாகவும், வேறு ஏதும் விலை மதிப்பு மிக்க பொருட்கள் இல்லை என்றும் கூறி உள்ளார்.

    அவர் வந்தால் தான் வீட்டில் உள்ள பணம் திருடு போனதா , என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தில் தகாத உறவுக்கு அழைத்த மாமனாரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் அருகே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்யா (வயது 25). இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன்(38), என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு 5 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். வெங்கடேஸ்வரன் லாரி டிரைவராக உள்ளார்.

    கணவர் வேலைக்கு சென்று விட்ட நேரத்தில், மாமனார் பச்சமுத்து (67), தன்னை தகாத உறவுக்கு அழைத்ததாகவும், இதற்கு மாமியார் தனலட்சுமி உடந்தையாக இருப்பதாகவும், இளம்பெண் ரம்யா கடந்த 20-ந் தேதி வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான மாமனார் பச்சமுத்து மற்றும் மாமியார் தனலட்சுமி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில், புகார் கொடுத்து ஒரு வாரம் கடந்த நிலையிலும், தன்னை மானபங்கம் செய்ய முயன்ற மாமனார், உடந்தையாக இருந்த மாமியார் மற்றும் இதனைத் தட்டிக் கேட்காத கணவர் ஆகிய மூவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து, இளம்பெண் ரம்யா, இன்று தனது குழந்தைகளுடன் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன், கடலூர் சாலையில் உறவினர்களுடன் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரம்யா மீது தண்ணீரை ஊற்றினர். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×