search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andrea"

    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்திருக்கிறார்கள். #Andrea
    ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார்.

    இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிக்கிறார். நடிப்பு தவிர பாடகியாகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் வெளியிடுகிறார்.



    தனது இளமை பொலிவை வெளிப்படுத்த அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் பட்டன் போடாத டாப்ஸ் அணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். கச்சிதமான அவரது தோற்றத்துக்கு ஏற்ப கவர்ச்சி வேடத்தை அவருக்கு இயக்குனர்கள் யாராவது தாருங்களேன் என்று சில ரசிகர்கள் கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர். சிலர் அந்த கவர்ச்சி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.
    தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா, எவ்வளவு உழைத்தாலும் அவர்களுக்கு இணையான சம்பளம் கிடைக்காது என்று கூறியுள்ளார். #Andrea
    ஆண்ட்ரியா அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் ஆணாதிக்கம் இருக்கிறதா என்ற கேள்விக்கு ‘சினிமாவில் சம்பளத்தில் வித்தியாசங்கள் இருக்கு. `தரமணி’ ரிலீசுக்கு முன்பே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் எனக்கு நிறைய வந்தது. அந்த கதைகள்ல நான்தான் ஹீரோ.

    ஆனா, சம்பளம் பற்றிப் பேசினால், ‘ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட். அதனால சம்பளம் அவ்ளோ கொடுக்க முடியாது’ன்னு சொல்வாங்க. இங்கே ஒரு பெண்ணா எவ்வளவு உழைத்தாலும் ஆணுக்கு இணையான சம்பளம் கிடைக்காது. 



    இது ஆண்-பெண் இருவருக்கும் சம உரிமை தருகிற துறை இல்லை. ஆனால், இப்போது கொஞ்சம் மாறிட்டு வருது. அந்த மாற்றம் மகிழ்ச்சியை தருகிறது’ என்று கூறியுள்ளார்.
    தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வட சென்னை’ படத்தில் சர்ச்சை காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கி விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #VadaChennai
    வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா நடித்த வட சென்னை படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ஆபாச காட்சிகளும், சர்ச்சை வசனங்களும் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று மீனவர் நல சங்கத்தினர் வற்புறுத்தினர்.

    சர்ச்சை காட்சிகளையும், வசனங்களையும் நீக்காவிட்டால் வருகிற 29-ந் தேதி சாஸ்திரி பவன் எதிரில் போராட்டம் நடத்துவோம் என்று தணிக்கை குழு அதிகாரிக்கு திரைப்பட பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன் கடிதம் அனுப்பினார். இதைத் தொடர்ந்து சர்ச்சை காட்சிகளை நீக்கி விடுவோம் என்று படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்தார்.

    அவர் கூறும்போது, “வடசென்னை படம் எந்த ஒரு தனி நபரையோ, சமுதாயத்தையோ பற்றியது அல்ல. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். படத்தில் கடலுக்குள் அமீரும், ஆண்ட்ரியாவும் நடித்த முதல் இரவு காட்சியையும், சில வசன காட்சிகளையும் நீக்க முடிவு செய்து இருக்கிறோம்” என்றார்.



    இதைத் தொடர்ந்து வட சென்னை படத்தை தணிக்கை குழுவுக்கு மீண்டும் அனுப்பி வைத்து முதல் இரவு காட்சியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அமீர் ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு காட்சிகளை இணைத்துள்ளனர்.

    அதுபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் சர்ச்சை வசனங்களும் நீக்கப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
    முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியா, மீடூ குறித்த கேள்விக்கு கடின உழைப்பு மீது மட்டுமே நம்பிக்கை என்று கூறியிருக்கிறார். #VadaChennai #MeToo
    வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எப்போதுமே துணிச்சலான கருத்துகளை பேசும் ஆண்ட்ரியா சமீபத்திய பரபரப்பான மீடூ இயக்கம் பற்றியும் துணிச்சலாக கருத்து தெரிவித்துள்ளார். ‘மீ டூ’ இயக்கத்தை வரவேற்கிறேன்.

    தற்போது மாற்றத்திற்கான நேரம். பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கத் துவங்கியுள்ளது. இந்த மீ டூ இயக்கம் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வாய்ப்பு இல்லை. பட வாய்ப்புக்காக என்னை யாரும் படுக்கைக்கு அழைத்தது இல்லை. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது ஆண்களின் தவறு மட்டும் அல்ல.

    வேலைக்காக படுக்கைக்கு செல்ல பெண்கள் விருப்பமாக இல்லாவிட்டால் ஆண்கள் அழைக்க மாட்டார்கள். எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது, நான் யாருடனும் படுக்கைக்கு செல்ல மாட்டேன் என்று பெண்கள் தைரியமாக சொன்னால் தான் இந்த பழக்கம் முடிவுக்கு வரும். நான் பெரிய, பெரிய இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றுகிறேன்.



    நல்ல நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கிறேன். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறேன். படுக்கைக்கு செல்லாமல் தான் இத்தனை படங்களிலும் நடித்துக் கொண்டிருக்திறேன். கடின உழைப்பு, திறமை மீது நம்பிக்கை வைத்திருப்பவள் நான்’ என்று கூறியிருக்கிறார்.
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், திரையில் என்றுமே போட்டி தொடரும், வடசென்னை வெற்றி பெற வாழ்த்துக்கள் என சிம்பு குறிப்பிட்டுள்ளார். #VadaChennai #Dhanush
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ள படம் வடசென்னை. இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப், பவல் நவகீதன், சாய் தீனா, சரண் சக்தி, பவர்பாண்டி விக்கி, சோமு என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கிறது.

    வடசென்னை ரிலீசை ஒட்டி தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள சிம்பு அதில் கூறியிருப்பதாவது,



    அருமை நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் வடசென்னை படக்குழுவுக்கு எனது சார்பாகவும், எனது ரசிகர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரையில் நமக்கிடையே போட்டி தொடரும், சமூக வலைதளங்களில் அல்ல. ஒரு நல்ல தரமான படத்தை என்றுமே ஆதரிக்க வேண்டும் என்று எனது ரசிகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு சிம்பு குறிப்பிட்டுள்ளார். #VadaChennai #Dhanush #STR

    வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வடசென்னை' படத்தின் முன்னோட்டம். #VadaChennai #Dhanush
    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வடசென்னை'. 

    வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப், பவல் நவகீதன், சாய் தீனா, சரண் சக்தி, பவர்பாண்டி விக்கி, சோமு உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - சந்தோஷ் நாராயணன், படத்தொகுப்பு - ஜி.பி.வெங்கடேஷ், ஆர்.ராமர், ஒளிப்பதிவு - வேல்ராஜ், ஒலி வடிவமைப்பு - டி.உதயகுமார், கலை இயக்குனர் - ஜாக்கி, சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், ஸ்டில்ஸ் - ராபர்ட், ஆடை வடிவமைப்பு - அமிர்தா ராம், தயாரிப்பு - தனுஷ், தயாரிப்பு மேற்பார்வை - எஸ்.பி.சொக்கலிங்கம், தயாரிப்பு நிறுவனம் - வுண்டர்பார் பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் - வெற்றிமாறன்.



    படம் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் அமீர் பேசும் போது,

    வடசென்னை படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவம். நிறைய கதைகளில் நடிக்க அழைக்கிறார்கள். குறிப்பாக வில்லன் கதாபாத்திரங்கள் அதிகம் வருகிறது. தனுஷின் திறமையை பார்க்கும் போது தான், ஏன் ஒரு இயக்குநர் தொடர்ச்சியாக 3 படங்கள் இயக்குகிறார் என்பது தெரிகிறது. நிச்சயமாக வெற்றிமாறன் என்ற இயக்குநர் வேறு ஒருவரை வைத்து இந்த படத்தை எடுக்க முடியாது. 

    மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் முதல் பாகம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #VadaChennai #Dhanush 

    வடசென்னை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பாவல் நவகீதனின் நடிப்பை பாராட்டிய இயக்குநர் வெற்றிமாறன், அவருக்கு நடிகராக ஒரு பெரிய இடம் காத்திருப்பதாக கூறியுள்ளார். #VadaChennai
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வடசென்னை. பொதுவாக வெற்றிமாறன் எந்த நடிகரையும் பாராட்ட மாட்டார்.

    ஒரு நடிகர் நன்றாக நடித்தால் அவரது வேடம் பெரிதாகி விடும். அப்படி அமீரின் வேடம் பெரிய கதாபாத்திரமாக மாறியுள்ளது. இதேபோல் பாவல் நவகீதன் என்ற நடிகரின் வேடமும் பெரிதாகி உள்ளது. மெட்ராஸ், குற்றம் கடிதல், மகளிர் மட்டும் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் பாவல் நவகீதன். அடிப்படையில் டைரக்டரான இவர் இப்போது முழுநேர நடிகராக மாறியுள்ளார்.



    இதுபற்றி அவர் கூறும்போது ’உதவி இயக்குனராக வந்த என்னை மெட்ராஸ் படத்தில் நடிக்க வைத்தவர் ரஞ்சித் தான். விஜி என்ற அந்த வேடம் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. வடசென்னை படம் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். வித்தியாசமான வில்லன் வேடம். வடசென்னை படம் தான் நான் டைரக்டர் ஆவதா? இல்லை நடிகராக தொடர்வதா என்பதை முடிவு செய்யும் என்று வெற்றிமாறனிடம் கூறினேன். அவர் என்னிடம் ‘உனக்கு நடிகராக ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது. சிறப்பாக நடித்துள்ளாய்.



    எனவே நடிகராக உனது கேரியரை தொடர்ந்து அமைத்துக்கொள். பின்னர் டைரக்டர் ஆகலாம் என்றார். இந்த படத்தில் ஒரிஜினலாக சில இடங்களில் வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியிருக்கிறது. அதோடு நடித்திருக்கிறேன்.’ என்றார். #VadaChennai #Dhanush #PavelNavageethan

    `வடசென்னை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அமீர், தனுஷ் இல்லாமல் வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது என்று கூறினார். #VadaChennai #Dhanush #Ameer
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வடசென்னை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடந்தது. அதில், வெற்றிமாறன், தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் பேசும் போது,

    வடசென்னை படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவம். நிறைய கதைகளில் நடிக்க அழைக்கிறார்கள். குறிப்பாக வில்லன் கதாபாத்திரங்கள் அதிகம் வருகிறது. ரவுடியாகவோ, வில்லனாகவோ நடிப்பதில் தப்பில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் எந்த இயக்குநரை நம்பி போகிறோம் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கும். அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது வெற்றிமாறன் தான்.

    நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் வேறு ஒருவர் நடிப்பதாய் இருந்தது என்பது பின்னர் தான் தெரியும். முதல் நாள் படப்பிடிப்பில் தயக்கமாக இருந்தது. என்னை சுற்றி இருக்கும் ஆட்கள் அனைவருமே சினிமாவில் பெரிய ஆட்கள். இது சரியா வருமா என்று வெற்றியை அழைத்து கேட்டேன். ஏற்கனவே இயக்குநர் ஒருவர் என்னை அழைத்து நடனமாட விட்டுவிட்டார். அதையே இன்னமும் மறக்க முடியவில்லை. இந்த மாதிரியான ஒரு கதை வேறு ஒருவருக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அப்படி இந்த கதை என்னிடம் வந்தால், நான் நடித்திருக்கும் இந்த கதாபாத்திரத்தில் கண்டிப்பாக நான் நடிக்கமாட்டேன். ஒரு நல்ல இயக்குநர், தேசிய விருது வாங்கியவர் படப்பிடிப்பு தளங்களில் ஜாலியாக இருப்பது அரிதானது. 



    படம் பார்த்தேன். படத்தில் தனுஷை பார்த்து பிரமித்து போனேன். ஆரம்ப கால தமிழ் சினிமா அவருக்கு கொடுத்த விமர்சனங்கள், பேச்சுகள் அனைத்தையும் தாண்டி, இன்று தமிழ் சினிமாவின் ஆயுதமாக வந்து நிற்கிறார் தனுஷ் என்று நான் பார்க்கிறேன். 

    தனுஷின் திறமையை பார்க்கும் போது தான், ஏன் ஒரு இயக்குநர் தொடர்ச்சியாக 3 படங்கள் இயக்குகிறார் என்பது தெரிகிறது. நிச்சயமாக வெற்றிமாறன் என்ற இயக்குநர் வேறு ஒருவரை வைத்து இந்த படத்தை எடுக்க முடியாது. #VadaChennai #Dhanush #Ameer

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் `வடசென்னை' படம் தணிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில், படத்திற்கு வெட்டே கிடையாது என்று தனுஷ் தெரிவித்துள்ளார். #VadaChennai #Dhanush
    வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `வடசென்னை'.

    வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    வடசென்னை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு தணிக்கை குழுவில் `ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

    வடசென்னை அதன் இயல்பான குணத்துடன் வெட்டு ஏதுமின்றி தணிக்கை குழுவில் `ஏ' சான்றிதழை பெற்றுள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார். 
    சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி படம் ரிலீசாக இருக்கிறது.

    மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் முதல் பாகத்திற்கான புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு மற்றும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #VadaChennai #Dhanush

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வடசென்னை படம், சீனாவின் பிங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. #VadaChennai #Dhanush
    வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வடசென்னை'. 

    வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் முதல் பாகத்திற்கான புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி படம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில், சீனாவில் நடைபெற உள்ள பிங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் வட சென்னை படம் திரையிடப்பட இருக்கிறது. பிங்யோ சர்வதேச திரைப்பட விழா வருகிற 11-ஆம் தேதி துவங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. #VadaChennai #Dhanush

    தானே சொந்தமாக பாடல் எழுதி பாடி ஹானஸ்ட்லி என்ற ஆல்பத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆண்ட்ரியா கவர்ந்திருக்கிறார். #Andrea #Honestly
    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் பின்னணி பாடகியான ஆண்ட்ரியாவின் ஆல்பம் சாங் கடந்த வாரம் வெளியானது. இந்த பாடலின் பெயர் (Honestly) "ஹானஸ்ட்லி".

    இந்த பாடலுக்கு ஆண்ட்ரியாவே பாடல் வரிகளை எழுதியும், பாடியும் மற்றும் நடித்துள்ளார். இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும் கெபா ஜெரிமியா (guitarist ) ஆகியோரின் பங்களிப்பு இப்பாடலில் உள்ளது.

    ஆண்ட்ரியா தமிழில் தனுஷ், சிம்பு, பஹத் பாசில் போன்ற நடிகர்களுடன் வெற்றி திரைப்படங்களில் நடித்தவர். மேலும் யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் ஆனா பாடல்களும் பாடியுள்ளார்.



    தற்போது ஆங்கில மொழியில் இவரது (Honestly) "ஹானஸ்ட்லி" பாடல் வீடியோ காட்சி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
    பாடகி, நடிகை என பிசியாக இருக்கும் ஆண்ட்ரியா, சினிமா துறையில் எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார். #Andrea
    ஆண்ட்ரியா நடித்த ‘விஸ்வரூபம்–2’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. அடுத்து தனுசுடன் நடித்துள்ள வடசென்னை படம் திரைக்கு வர தயாராகிறது.

    சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சர்ச்சைகள் குறித்து ஆண்ட்ரியா கருத்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

    ‘‘யாருக்காவது நல்லது நடந்தால் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் கெட்டது நடந்தால் அதை சொல்வது இல்லை. சினிமாவில் அந்த நிலைமை இப்போது மாறிக்கொண்டு வருகிறது. பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக பேசுகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. 

    அப்படி பேசினால்தான் தவறு செய்தவர்களை தண்டிக்க முடியும். சினிமா துறையில் எனக்கு அந்த மாதிரி நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை. அது மகிழ்ச்சியாக இருக்கிறது. பாலியல் தொல்லைகள் எனக்கு நடந்தது என்று வெளியே வந்து தைரியமாக சொல்பவர்களையும், அப்படி நடப்பதை கண்டித்து பேசியவர்களையும் பாராட்ட வேண்டும். 



    எனக்கு நடிப்பு, இசை இரண்டு கண்கள் மாதிரி. எதில் வாய்ப்பு வந்தாலும் அதை பயன்படுத்திக்கொள்வேன். ஒரு படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டால் அதில் எத்தனை கதாநாயகர்கள் இருக்கிறார்கள். எத்தனை கதாநாயகிகள் இருக்கிறார்கள் என்றெல்லாம் சிந்திப்பது இல்லை. எனது கதாபாத்திரம் என்ன என்பதை மட்டும்தான் கண்டுகொள்வேன்.

    இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார்.
    ×