search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pingyao International Film Festival"

    `வடசென்னை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அமீர், தனுஷ் இல்லாமல் வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது என்று கூறினார். #VadaChennai #Dhanush #Ameer
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வடசென்னை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடந்தது. அதில், வெற்றிமாறன், தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் பேசும் போது,

    வடசென்னை படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவம். நிறைய கதைகளில் நடிக்க அழைக்கிறார்கள். குறிப்பாக வில்லன் கதாபாத்திரங்கள் அதிகம் வருகிறது. ரவுடியாகவோ, வில்லனாகவோ நடிப்பதில் தப்பில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் எந்த இயக்குநரை நம்பி போகிறோம் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கும். அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது வெற்றிமாறன் தான்.

    நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் வேறு ஒருவர் நடிப்பதாய் இருந்தது என்பது பின்னர் தான் தெரியும். முதல் நாள் படப்பிடிப்பில் தயக்கமாக இருந்தது. என்னை சுற்றி இருக்கும் ஆட்கள் அனைவருமே சினிமாவில் பெரிய ஆட்கள். இது சரியா வருமா என்று வெற்றியை அழைத்து கேட்டேன். ஏற்கனவே இயக்குநர் ஒருவர் என்னை அழைத்து நடனமாட விட்டுவிட்டார். அதையே இன்னமும் மறக்க முடியவில்லை. இந்த மாதிரியான ஒரு கதை வேறு ஒருவருக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அப்படி இந்த கதை என்னிடம் வந்தால், நான் நடித்திருக்கும் இந்த கதாபாத்திரத்தில் கண்டிப்பாக நான் நடிக்கமாட்டேன். ஒரு நல்ல இயக்குநர், தேசிய விருது வாங்கியவர் படப்பிடிப்பு தளங்களில் ஜாலியாக இருப்பது அரிதானது. 



    படம் பார்த்தேன். படத்தில் தனுஷை பார்த்து பிரமித்து போனேன். ஆரம்ப கால தமிழ் சினிமா அவருக்கு கொடுத்த விமர்சனங்கள், பேச்சுகள் அனைத்தையும் தாண்டி, இன்று தமிழ் சினிமாவின் ஆயுதமாக வந்து நிற்கிறார் தனுஷ் என்று நான் பார்க்கிறேன். 

    தனுஷின் திறமையை பார்க்கும் போது தான், ஏன் ஒரு இயக்குநர் தொடர்ச்சியாக 3 படங்கள் இயக்குகிறார் என்பது தெரிகிறது. நிச்சயமாக வெற்றிமாறன் என்ற இயக்குநர் வேறு ஒருவரை வைத்து இந்த படத்தை எடுக்க முடியாது. #VadaChennai #Dhanush #Ameer

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வடசென்னை படம், சீனாவின் பிங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. #VadaChennai #Dhanush
    வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வடசென்னை'. 

    வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் முதல் பாகத்திற்கான புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி படம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில், சீனாவில் நடைபெற உள்ள பிங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் வட சென்னை படம் திரையிடப்பட இருக்கிறது. பிங்யோ சர்வதேச திரைப்பட விழா வருகிற 11-ஆம் தேதி துவங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. #VadaChennai #Dhanush

    ×