search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advisory meeting"

    • நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம்
    • கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர்‌ கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.

    மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் வருகிற 20-ந் தேதி நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 20-ந் தேதி மதுரை மாநாடு குறித்து பேசினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகர அதிமுக சார்பில் ராஜமலர் திருமண மண்டபத்தில் மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் கே.வெங்க டேசன் தலைமையில் நேற்று நடந்தது. நகர அவைத் தலைவர் ஏ.ஜனார்த்தனன், மாவட்ட நிர்வாகிகள் ஏ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், ஜி.கோபால், ஆர்.கே.மெய்யப்பன், இ. வெங்கடேசன், எஸ்.கோவிந்தராஜ், எச். சுரேஷ்குமார், ஜி.தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற திருவண்ணா மலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் மதுரை அதிமுக மாநாடு சுமார் 10 லட்சம் பேருக்கு மேல் பங்கேற்கும் பிரம்மாண்டமான மாநாடு.

    இந்த மாநாட்டிற்கு வருபவர்களின் பெயர் பட்டியல், ஊர் பெயர், செல் எண் போன்ற விவர ங்களை ஒருங்கிணைப்பு குழுவினர் வைத்திருக்க வேண்டும் என அறிவித்தனர்.

    ஆலோசனைக் கூட்டத்தில் நகர நிர்வாகிகள் ராஜி, எழிலரசன், அருண், இளையராஜா, மகேஷ் பச்சையப்பன், திருச்சிற்ற ம்பலம், டி.கந்தசாமி, ஜி.பூபதி, வாசுதேவன், ஜெ.வெங்கடேசன், ஜெ.சிவா, ஒன்றிய செயலா ளர்கள் எம்.அரங்கநாதன், எம்.மகேந்திரன், சி துரை, வழக்கறிஞர் முனுசாமி, பொன் அருளானந்தம், வயலூர் ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் முன்னிலை யில் திமுகவை சேர்ந்த ராஜேந்திரன், நாகராஜன், செங்காடு சுரேஷ், தேமுதிகவைச் சேர்ந்த ராஜேஷ் உள்ளிட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    • அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • சாம்பகுளம் அழகர்சாமி, அபிராமம் கர்ணன் உள்பட பலர்் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மதுரை மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் ஒன்றிய துணை செயலாளரும் வெங்கல குறிச்சி ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்.டி.செந்தில்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி சேர்மன் சுந்தர பாண்டியன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் சங்கர பாண்டியன் வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனிய சாமி பேசுகையில், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய மதுரை மாநாடு திருப்பு முனையாக அமையும். மாநாட்டிற்கு வரும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பத்துடன் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் விளங் குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கனக வள்ளி முத்துவேல், சாம்பகுளம் அழகர்சாமி, அபிராமம் கர்ணன் உள்பட பலர்் கலந்து கொண்டனர்.

    • ம.தி.மு.க. ஆலோசனை கூட்டம் திருப்பூர் காந்திநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மாநகர் மாவட்ட அவைத்தலைவர் நேமிநாதன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் முன்னிலை வகித்தார்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பெறப்பட்ட கையெழுத்து இயக்க படிவங்களை ம.தி.மு.க. அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் காந்திநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட அவைத்தலைவர் நேமிநாதன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பெறப்பட்ட 1 லட்சத்து 55 ஆயிரம் கையெழுத்து இயக்க படிவங்களை மாநில அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜிடம் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் வழங்கினார். மேலும் அதிக அளவில் கையெழுத்து பெற்ற சாமுண்டிபுரம் பகுதி செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், தனிப்பட்ட முறையில் அதிக கையெழுத்து பெற்ற 13-வது வார்டு செயலாளர் மற்றும் அனைத்து பகுதி செயலாளர்களுக்கும் மாநகர் மாவட்ட செயலாளர் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் அடுத்த மாதம் 15-ந்தேதி மதுரையில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாநகர் மாவட்ட பொருளாளர் நல்லூர் மணி என்கிற சண்முகசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர் சக்திவேல், மாநில இளைஞரணி செயலாளர் ரத்தினசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதை தொடர்ந்து அர்ஜூனராஜ் நிருபர்களிடம் கூறும்போது " பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்படும், சனாதானத்தை தாங்கி பிடிக்கின்ற கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறும் வகையிலும் நாங்கள் ஓய மாட்டோம். மத்தியில் பிரதமர் உள்பட பா.ஜ.க. அரசு அப்புறப்படுத்தப்பட வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    • சிவகங்கையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • 20-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் மதுரை மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகி கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகள் மற்றும் நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள கட்சி கொடிக்கம்பங்களில் புதிதாக கட்சி கொடியை ஏற்ற வேண்டும் என்று மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.

    இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் நாகராஜன், குணசேகரன், நகர செயலாளர் ராஜா, நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் சேவியர்தாஸ், கருணாகரன், செல்வமணி, பழனிச்சாமி, ஸ்டீபன் அருள்சாமி, சிவாஜி, பாரதி ராஜன், ஜெகதீஸ்வரன், கோபி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங் கோவன், மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் திருப்புவனம் மேற்கு ஒன்றிய செயலாளர் சோனைரவி ஏற்பாட்டில் அ.ம.மு.க. கட்சியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    • ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரை வலையங்குளத்தில் அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
    • ஆலோசனை கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரை வலையங்குளத்தில் அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தும் விதமாக அ.தி.மு.க. மூத்த தலைமை நிர்வாகிகள் மாவட்டந்தோறும் சென்று கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை அளிக்கவும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை பாளை கே.டி.சி. நகரில் உள்ள மாதா மாளிகையில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.எல்.ஏ.க்கள் நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா, மகளிர் அணி செயலாளர் வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவன், அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் பங்கேற்று கூட்டத்தில் எழுச்சி உரையாற்றுகின்றனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டல பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முத்தையாபுரத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மாநகரில் அனைத்து வார்டுகளில் உள்ள குறைகளை தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று சசிகலா புஷ்பா கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டல பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முத்தையாபுரத்தில் உள்ள மண்டல அலுவ லகத்தில் நடைபெற்றது.

    மண்டல தலைவர் மாத வன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னதங்கம், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் பரமசிவம், மண்டல பொதுச்செயலாளர் பிரபு, ஜமீன் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலகுமார், முத்து கிருஷ்ணன், முருகன் ஆகி யோர் வரவேற்று பேசினர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசுகையில், தி.மு.க. அரசு நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அவர்களின் பொய் பிரசாரங்களை மக்களிடம் எடுத்து சொல்லும் வகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து பகுதிகளிலும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். மாநகரில் அனைத்து வார்டுகளில் உள்ள குறைகளை தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் குலசை ரமேஷ், ஓ.பி.சி. அணி மாவட்ட துணை தலைவர் முகேஷ், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட செயலாளர் தனவீரபாண்டியன், மகளிர் அணி மண்டல் தலைவி செல்வி, தொழில் பிரிவு மண்டல் தலைவர் சங்கர் கணேஷ், ஓ.பி.சி. அணி மண்டல் தலைவர் துர்க்கை யப்பன், தெற்கு மண்டல் துணைத்தலைவர்கள் முத்துராஜ், அருண்பாபு ஜெயசித்ரா, பொய் சொல்லான், மண்டல் செய லாளர் முத்துகிருஷ்ணன், இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் முனிய சாமி, விவசாய அணி மண்டல் தலைவர் முத்துராஜ், ஆன்மீக பிரிவு மண்டல் தலைவர் எம்.சி. சேகர், விளையாட்டு பிரிவு மண்டல் தலைவர் பிரபாகர், சிந்தனையாளர் பிரிவு மண்டல் தலைவர் சுந்தர், சுற்றுச்சூழல் பிரிவு மண்டல் தலைவர் விவேக், சமூக ஊடகப் பிரிவு மண்டல் தலைவர் அஜய், பிறமொழி பிரிவு மண்டல தலைவர் ராஜகோபால், மகளிர் அணி துணைத் தலைவி சிலம்பொழி, செயலாளர் பாலமணிமேகலா, சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் அணிப்பிரிவு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • எஸ்.பி.மணிவண்ணன் உத்தரவு
    • மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கோட்டீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, பழனி, ராமமூர்த்தி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் என்.எஸ்.எஸ். அலுவலர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டன.

    அதன்படி, வேலூரில்' உள்ள தனியார் கல்லூரிகளின் என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி. மாணவர்களை போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுத்துவது குறித்தும் அவர்களுக்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    மாவட்டத்தில் அதிகப்படியான விபத்துகள் ஏற்படும் நேரங்களை ஆய்வு செய்து அந்த நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசும்போது, 'ஆட்டோவில் பயணித்த ஒரு மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு

    ஆளாக்கி நாட்டை உலுக்கிய சம்பவம் வேலூரில் நடைபெற்றுள்ளது.

    எனவே, வேலூரில் முறையான அனுமதி இல்லாத ஆட்டோக்களை கட்டுப்படுத்தும் வகையில் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடன் போலீஸ் துறையினரும் இணைந்து சோதனை மேற்கொள்ள வேண்டும்.

    அப்போதுதான் முறைகேடாக ஆட்டோக்கள் இயக்கப்படுவது தவிர்க்கப்படும். அதேபோல், ஆட்டோ ஓட்டுநர்கள் சீருடை அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு உட்கோட்டத்திலும் எத்தனை ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளன.

    அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

    • வேலாடும் தணிகை மலையில் நடந்தது
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லூர் ஊராட்சி மூலைகேட், தார்வழி அருகே 1000 அடி உயரமுள்ள மலைமேல் அமர்ந்து இருக்கும் வேலாடும் தணிகை மலை பால முருகன் கோவில் அமைந்துள்ளது.

    ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை பெருவிழா வெகு விமரிசையாக நடைப்பெற்று வருகின்றன. அதே போல் இந்த ஆண்டு வரும் மாதம் 8, 9-ந் தேதிகளில் ஆடிக்கி ருத்திகை திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் செய் வதுதொடர்பான ஆலோசனை கூட்டம் பாலமுருகன் கோவிலில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பால முருகன் கோவில் அறக்கட் டளை நிர்வாக தலைவர் எஸ்.பி.கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் குமார், துணைசெயலாளர் பாலு, துணை பொருளாளர் சங்கர், நிர்வாக குழு உறுப் பினர்கள் சீனிவாசன், ராஜாராம், வெங்கடேசன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் செல்வ ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும். மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கோவில் எழுத்தர் மகேந்திரன் நன்றி கூறினார்.

    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து நாளை மாலை 4 மணிக்கு மகாராஜ நகரில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
    • கூட்டத்தில் நாங்குநேரி சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டியினர் தவறாமல் கலந்து கொள்ளுமாறு எம்.எல்.ஏ. அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்தும், நாங்குநேரி சட்டமன்றத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு மகாராஜ நகரில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் நாங்குநேரி சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டியின் வட்டார, நகர, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தவறாமல் கலந்து கொள்ளு மாறு நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • போக்குவரத்து நெரிசல் குறைவான நேரத்தில் பொருட்களை இறக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்
    • போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து வியாபாரிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நெமிலி தாசில்தார் பாலசந்தர் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பள்ளி, அலுவலக காலை வேலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

    ஆதலால் வணிக பொருட்களை ஏற்றிவரும் லாரிகளுக்கு போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் நேரங்களில் பொருட்களை இறக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

    போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் கடைகளை நடத்தவேண்டும்.

    கடைக்கு வருபவர்கள் வாகனங்களை சாலையின் ஓரமாக நிறுத்த ஆலோசனை வழங்கவேண்டும்.

    மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    குட்கா, போதை பொருட்களை யாராவது விற்பனை செய்தால் பொதுமக்கள் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, வியாபாரிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மருத்துவமனையில் சில வசதிகள் செய்து தரப்படவேண்டும் என கோரிக்கை
    • கதிர் ஆனந்த் எம்.பி. பேட்டி

    வேலூர்:

    வேலூர் பென்ட்லேண்ட் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் இன்று காலை கதிர் ஆனந்த் எம்.பி. ஆய்வு செய்தார்.

    ஆஸ்பத்திரியில் உள்ள மருந்தகம் நோயாளிகள் பிரிவு சமையல் கூடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது மருத்துவர்கள் மருத்துவமனையில் சில வசதிகள் செய்து தரப்படவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனை தொடர்ந்து கதிர் ஆனந்த் எம்.பி. அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வேலூரில் உள்ள முக்கிய மருத்துவமனையாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை திகழ்கிறது. தொழிலாளர்களுக்காக பிரத்தியேகமாக இயங்குகிறது.

    தற்போது மத்திய அரசு மாநில அரசு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    அதாவது இந்த மருத்துவமனையில் வாங்கக்கூடிய பொருட்கள் மற்றும் எந்திரங்கள் தேவைப்படுகிறது என்பதை செய்து கொடுப்பதற்காக கமிட்டி ஒன்று நியமித்துள்ளனர்.

    இந்த கமிட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனை டாக்டர்கள் உறுப்பினர்களாக கொண்டு இந்த கமிட்டி செயல்படும்.

    மருத்துவமனை தொடர்பாக இனி மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கையும் இந்த கமிட்டியின் ஒப்புதல் பெற்ற பின்னரே மேற்கொள்ளப்படும். அதின் அடிப்படையில் இங்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது ஏராளமான நடுத்தர மற்றும் தொழிலாளர் மக்களுக்கு உதவிகரமாக இந்த மருத்துவமனை திகழ்வது தெரிய வந்தது.

    இந்த மருத்துவமனைக்கு பல தேவைகள் உள்ளது. அதில் முக்கியமாக இடப்பற்றாக்குறை உள்ளது. இதற்கு விடிவு காலம் பிறக்கும் வகையில் சுமார் 5½ ஏக்கர் பரப்பளவில் புதிய மருத்துவமனை அமைய உள்ளது. அதற்கான இடம் கேட்டுள்ளனர்.

    அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது நிலம் தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது. மாவட்ட கலெக்டரும் அதற்கான நிலம் தருவதாக தெரிவித்துள்ளார்.

    இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கான அனைத்து கட்டுமானத்திற்கான நிதியை தொகை மத்திய அரசு தருவதாக தெரிவித்துள்ளது.

    இந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்காக மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×