என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா
மதுரையில் 20-ந் தேதி எழுச்சி மாநாடு: நெல்லையில் நாளை மறுநாள் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
- ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரை வலையங்குளத்தில் அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
- ஆலோசனை கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
நெல்லை:
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரை வலையங்குளத்தில் அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தும் விதமாக அ.தி.மு.க. மூத்த தலைமை நிர்வாகிகள் மாவட்டந்தோறும் சென்று கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை அளிக்கவும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை பாளை கே.டி.சி. நகரில் உள்ள மாதா மாளிகையில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.எல்.ஏ.க்கள் நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா, மகளிர் அணி செயலாளர் வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவன், அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் பங்கேற்று கூட்டத்தில் எழுச்சி உரையாற்றுகின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






