என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனப்பாக்கம் பேரூராட்சியில் வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம்
    X

    பனப்பாக்கம் பேரூராட்சியில் வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம்

    • போக்குவரத்து நெரிசல் குறைவான நேரத்தில் பொருட்களை இறக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்
    • போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து வியாபாரிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நெமிலி தாசில்தார் பாலசந்தர் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பள்ளி, அலுவலக காலை வேலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

    ஆதலால் வணிக பொருட்களை ஏற்றிவரும் லாரிகளுக்கு போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் நேரங்களில் பொருட்களை இறக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

    போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் கடைகளை நடத்தவேண்டும்.

    கடைக்கு வருபவர்கள் வாகனங்களை சாலையின் ஓரமாக நிறுத்த ஆலோசனை வழங்கவேண்டும்.

    மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    குட்கா, போதை பொருட்களை யாராவது விற்பனை செய்தால் பொதுமக்கள் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, வியாபாரிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×