search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தூத்துக்குடியில் பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் - ஆலோசனை கூட்டத்தில் சசிகலா புஷ்பா பேச்சு
    X

    ஆலோசனை கூட்டத்தில் சசிகலா புஷ்பா பேசிய காட்சி. அருகில் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தூத்துக்குடியில் பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் - ஆலோசனை கூட்டத்தில் சசிகலா புஷ்பா பேச்சு

    • தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டல பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முத்தையாபுரத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மாநகரில் அனைத்து வார்டுகளில் உள்ள குறைகளை தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று சசிகலா புஷ்பா கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டல பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முத்தையாபுரத்தில் உள்ள மண்டல அலுவ லகத்தில் நடைபெற்றது.

    மண்டல தலைவர் மாத வன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னதங்கம், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் பரமசிவம், மண்டல பொதுச்செயலாளர் பிரபு, ஜமீன் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலகுமார், முத்து கிருஷ்ணன், முருகன் ஆகி யோர் வரவேற்று பேசினர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசுகையில், தி.மு.க. அரசு நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அவர்களின் பொய் பிரசாரங்களை மக்களிடம் எடுத்து சொல்லும் வகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து பகுதிகளிலும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். மாநகரில் அனைத்து வார்டுகளில் உள்ள குறைகளை தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் குலசை ரமேஷ், ஓ.பி.சி. அணி மாவட்ட துணை தலைவர் முகேஷ், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட செயலாளர் தனவீரபாண்டியன், மகளிர் அணி மண்டல் தலைவி செல்வி, தொழில் பிரிவு மண்டல் தலைவர் சங்கர் கணேஷ், ஓ.பி.சி. அணி மண்டல் தலைவர் துர்க்கை யப்பன், தெற்கு மண்டல் துணைத்தலைவர்கள் முத்துராஜ், அருண்பாபு ஜெயசித்ரா, பொய் சொல்லான், மண்டல் செய லாளர் முத்துகிருஷ்ணன், இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் முனிய சாமி, விவசாய அணி மண்டல் தலைவர் முத்துராஜ், ஆன்மீக பிரிவு மண்டல் தலைவர் எம்.சி. சேகர், விளையாட்டு பிரிவு மண்டல் தலைவர் பிரபாகர், சிந்தனையாளர் பிரிவு மண்டல் தலைவர் சுந்தர், சுற்றுச்சூழல் பிரிவு மண்டல் தலைவர் விவேக், சமூக ஊடகப் பிரிவு மண்டல் தலைவர் அஜய், பிறமொழி பிரிவு மண்டல தலைவர் ராஜகோபால், மகளிர் அணி துணைத் தலைவி சிலம்பொழி, செயலாளர் பாலமணிமேகலா, சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் அணிப்பிரிவு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×