search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "administrators"

    • அனைவரும் பேரணியாக சென்று ஊரணிபுரம் கடைத்தெருவில் சங்க கொடியினை ஏற்றினார்.
    • மாவட்ட அளவில் செயல்பட தீர்மானிக்கப்பட்டு அதன் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்கத்தின் 2 வது வட்டார மாநாடு மற்றும் பேரணி ஊரணிபுரத்தில் நடைபெற்றது.

    வட்டார விவசாய நல சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ், தலைமை தாங்கினார். மேலும் சங்க செயலாளர் வி.கே.சின்னத்துரை வரவேற்று ஸ்தாபனம் வேலை அறிக்கையினை முன்மொழிந்து பேசினார். பொருளாளர் துரைராஜ், நிர்வாகிகள் வ.பெ.தங்கராசு, அன்பழகன், பெரியசாமி, சி.துரைராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் திருச்சி (பொ.ப.து) நீர்வளத்துறையின் செயற்பொறியாளர் முருகேசன், மாநாட்டு பேரணியை துவக்கி வைத்து பேரணியாக சென்று ஊரணிபுரம் கடைத்தெருவில் சங்க கொடியினை ஏற்றினார். தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர், ஜெஷ்டின், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் இளங்கண்ணன், வழக்க றிஞர் அ.ராமகிரு ஷ்ணன், அகில இந்திய எல்.ஐ.சி.முகவர் சங்க பட்டுக்கோட்டை கிளை செயலாளர் பஞ்சாட்சரம், மற்றும் நிர்வாகி தர்மராஜ், மாவட்ட கவுன்சிலர் திருஞானசம்பந்தம், பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பாரதி, அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர். ஆர், கண்ணையன், டெல்டா இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் முத்துராசு, மற்றும் அதன் நிர்வாகிகள் சரவணன், முத்து, முருகேசன்.

    தஞ்சை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் போராட்டக்குழு தலைவர் செங்குட்டுவன், திருவோணம் வட்டார வாடகை பாத்திர சங்கத்தின் தலைவர் செல்வம், சிபிஐ மாவட்ட க்குழு உறுப்பினர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் கருப்பையா, விவசாயிகள் சங்க தலைவர் சவுந்தர்ராஜன், தங்கராஜ், சாமி.மனோகரன், சீனிவா சன், கே.ஆர்.முருகே சன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.

    மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருவோணம் வட்டார அளவில் செயல்பட்டு வந்த இச்சங்கத்தினை தஞ்சை மாவட்ட அளவில் செயல்பட தீர்மானிக்கப்பட்டு அதன் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக வி.கே.சின்ன துரை நன்றி கூறினார்.

    • ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
    • புதியதாக தேர்ந்தெ–டுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் தெற்கு, வடக்கு ஆகிய பகுதிகளுக்கான தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடந்தது.இதனடிப்படையில் தி.மு.க. தலைமை கழகம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தெற்குப்பகுதிக்கு புதிய நிர்வாகிகளாக அவைத் தலைவர் திருப்பாலைக்குடி முகமது உமர் பாரூக், செயலாளராக பனிக்காேட்டை மோகன், ஒன்றிய துணைச்செயலாளராக உகந்தங்குடி ராமநாதன், பால்குளம் அர்ச்சுனன், மோர்ப்பண்ணை லதா சரவணன், பொருளாளர் ரகுநாதமடை மாணிக்கம், மாவட்ட பிரதிநிதிகளாக சீனாங்குடி நாகமுத்து, திருப்பாலைக்குடி- பழங்கோட்டை சபரிநாதன், ஆர்.எஸ்.மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் (ஓய்வு) மணிமாறன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதுபோல் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய வடக்குப் பகுதிக்கான புதிய நிர்வாகிகளாக அவைத்தலைவர் புல்லமடை ஆறுமுகம், செயலாளர் புதுக்குறிச்சி கண்ணன் (எ) ராமசுப்பிரமணியன், துணை செயலாளர்கள் சனவேலி மேழிச்செல்வம், வரவணி முத்தரசு, ஆயங்குடி மாதரசி கருணாநிதி, பொருளாளர் துக்கனாங்கரை நாக–நாதன், மாவட்ட பிரதி–நிதிகள் ஆயிரவேலி வெங்கடாஜலபதி, கீழ்மருதங்குளம் விவேகானந்தன், ஆப்பிராய் சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதியதாக தேர்ந்தெ–டுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டன.
    • ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதிக்கான தி.மு.க. உட்கட்சித்தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் (தெற்கு) பகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதிக்கான தி.மு.க. உட்கட்சித்தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது.

    இதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைமை கழகம் பேரூர் தி.மு.க. அவைத் தலைவராக தென்றல் ஜலீல், நகரச் செயலாளராக கண்ணன், துணைச் செயலாளராக சேக்அப்துல்லா, சங்கர் மவுசூரியா, பொருளாளராக ராமர், மாவட்ட பிரதிநிதியாக கந்தசாமி, சரவணன் ஒன்றிய பிரதிநிதியாக மருது, ராஜீ, பிரபாகரன், செய்யதுஅப்தாகீர், காளிதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் புதிய நகர செயலாளர் கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் நகரின் முக்கிய வீதிகளில் மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக வந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றனர்.

    • மேலூரில் அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.

    மேலூர்

    மேலூரில், மதுரை புறநகர் அ.ம.மு.க. வடக்கு மாவட்டத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். தேர்தல் பிரிவு செயலாளரும், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான மகேந்திரன், பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். வருகிற ஜூலை 30-ந் தேதி மதுரையில் நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

    கூட்டத்தில் மேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சாமி மகன் ஆசையன் சாமி, மேலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சோமாசி, காஞ்சி கமல், மேலூர் நகர் செயலாளரும், மேலூர் நகர்மன்ற கவுன்சிலருமான ஆனந்த், மேலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், மதுரை கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர்கள் திருமோகூர் சரவணன், பாஸ்கரன், சிவக்குமார், செல்வகுமார், சேதுராமன், செந்தில் குமார், முன்னாள் கவுன்சிலர் துரை, பிரசாத், ரமேஷ், சந்தைப்பேட்டை யாசின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு பல்வேறு புதிய பொறுப்புகளை வழங்கி வருகிறார்.
    • மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வை நியமனம் செய்தார்.

    மதுரை

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு பல்வேறு புதிய பொறுப்புகளை வழங்கி வருகிறார்.

    இதனையடுத்து அமைப்புச்செயலாளராக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வை நியமனம் செய்தார். இதைத் தொடர்ந்து ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

    இதனையடுத்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள், இளைஞரணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட அவைத் தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், துணைச் செயலாளர் ஓம்.கே.சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, கார்சேரி கணேசன், பொன் ராஜேந்திரன், பொன்னுச்சாமி. வெற்றிச்செழியன், குலத்துங்கன், வாசு என்ற பெரியண்ணன், பகுதி செயலாளர் வண்டியூர் செந்தில்குமார், வழக்கறிஞர் ஜீவானந்தம், திருப்பாலை கோபி, அவனியாபுரம் முருகேசன், பன்னீர்செல்வம், வெள்ளாளப்பட்டி உமாபதி, எம்.ஜி.ஆர். மன்ற மாநிலத் துணைச் செயலாளர் ஒத்தக்கடை முத்துகிருஷ்ணன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் கே.சி.பி. ஜெயக்குமார், கலைப்பிரிவு செயலாளர் அரசு, மாணவரணி செயலாளர் முத்துகிருஷ்ணன், ஓட்டுனர் அணி அன்பு செல்வம், கார்த்திகேயன், ராஜேந்திரன், சேனாதிபதி, தினேஷ்குமார், செல்வகுமார், எம்.ஆர்.குமார், மகாராஜன், வரிச்சூர் சரவணன், பெருமாள், வெள்ளரிப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பிரபு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு பிரசன்னா, குமார், வெற்றிவேல், ராஜா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டு வேஷ்டி-சால்வை கொடுத்தும் வாழ்த்து பெற்றனர்.

    • விநாயகர்கோவில் கும்பாபிஷேகத்தில் மதுரை ஆதீனம் பங்கேற்றனர்.
    • சமூக சேவகர் ராமராஜ் தலை மையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் மாப்பிள்ளை விநாயகர்கோவில் உள்ளது. இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி விநாயகர் பூஜை, எந்திர ஸ்தாபனம், கலச ஸ்தாபனம் யாகசாலை பூஜை ஆகியவை நடந்தன.

    அதன்பின்னர் 3-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு யோகினியர் லலிதா மகிளா சமாஜம் சுவாமிகள் கணபதி ஹோமத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மங்கல வாத்திய நிகழ்ச்சி மற்றும் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, சுதர்சன பூஜை லட்சுமி ஹோமம், தீப வழிபாடு நடைபெற்றது.

    மாலை வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், முதல் கால யாக பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலை 2-ம் கால யாகபூஜை, மகாபூர்ண ஹூதி வழிபாட்டுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மதுரை ஆதீனம் ஞா னசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஆதி வழி விடு விநாயகர் கோவில் அர்ச்சகர் சோமசுந்தரம் பட்டர், கார்த்திக் சாஸ்திரிகள் கும்பாபிஷேக பூஜைகளை நடத்தினர்.

    பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் அழங்க ப்பட்டது. பின்னர் மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்களும், பக்தர்களும் கலந்து கொண்டு வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர்கோவில் நிர்வாகத்தினர், சமூக சேவகர் ராமராஜ் தலை மையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க தலைவர் பூம்புகார் சங்கர்பிள்ளை தலைமை வகித்தார். செயலாளர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார்.
    • இறால் ஏற்றுமதியாளர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்குள் விலைநிர்ணயம் செய்து இறால் விவசாயிகளுக்கு சரியான விலை தராமல், சந்தை மதிப்பை மறைத்து, குறைத்து விலை தருவதை கண்டிப்பது,

    சீர்காழி:

    சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க தலைவர் பூம்புகார் சங்கர்பிள்ளை தலைமை வகித்தார். செயலாளர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார்.

    நிர்வாகிகள் அரவிந்தன், அரிகிருஷ்ணன், கோபால், ராஜ்குமார், சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், இறால் ஏற்றுமதியாளர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்குள் விலைநிர்ணயம் செய்து இறால் விவசாயிகளுக்கு சரியான விலை தராமல், சந்தை மதிப்பை மறைத்து, குறைத்து விலை தருவதை கண்டிப்பது,

    மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உரிமம் வாங்குவது, புதுப்பிப்பதில் உள்ள தேவையற்ற காலதாமத்தை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் நிர்வாகிகள் ஞானம், இளங்கோ, அக்பர், சுந்தர் பங்கேற்றனர். முடிவில் சரவணன் நன்றிக் கூறினார்.

    தேனி மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளராக பி.ரவிச்சந்திரகுமாரை நியமித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புரட்சி தலைவி அம்மா பேரவை நிர்வாகிகளை அறிவித்துள்ளனர்.

    தேனி மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளராக பி.ரவிச்சந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஆவார்.

    வேலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக புலவர் ரமேசும், திருச்சி புறநகர் மாவட்டத்துக்கு கிருஷ்ணணும், பெரம்பலூர் மாவட்டத்துக்கு உதயம் எஸ்.ரமேசும், மதுரை மாநகர் மாவட்டத்துக்கு எஸ்.எஸ். சரவணனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    முன்னாள் அமைச்சர் கே.ஏ. கிருஷ்ணசாமி மகன் கே.ஏ.கே. முகிலனுக்கு அம்மா பேரவை தென்சென்னை வடக்கு மாவட்ட இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

    அவர் ஏற்கனவே வகித்த எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    இதேபோல் அம்மா பேரவையின் தென் சென்னை தெற்கு மாவட்ட இணை செயலாளர் பொறுப்புக்கு ஜெயவர்த்தன் எம்.பி. நியமிக்கப்பட்டு உள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதால் புதிய கட்சி தொடங்குவதில் தீவிரமாகி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
    சென்னை:

    ரஜினி உண்மையிலேயே அரசியல் களத்துக்குள் வந்து விட்டாரா? அல்லது காலா படத்துக்காக பாவ்லா காட்டுகிறாரா? என்பது போன்ற கருத்துக்கள் சமூக வலைதளங்களில் கொட்டி கிடக்கின்றன.

    புதுக்கட்சியை தொடங்காமலேயே அரசியல்வாதியாகிவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மீது இது போன்று ஏகப்பட்ட விமர்சனங்கள். குறிப்பாக தமிழக அமைச்சர்கள் ஆளாளுக்கு ரஜினியை வசைபாடிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் ரஜினி தனது அரசியல் பாதையை வகுத்து பயணிக்க தொடங்கி விட்டார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

    இதனையெல்லாம் மனதில் வைத்துதான் காலா படப்பாடல் வெளியீட்டு விழாவில் யார் என்ன சொன்னாலும் நான் பின் வாங்கமாட்டேன் என்று எங்கள் தலைவர் பேசினார் என்றும் கூறுகிறார்கள் ரசிகர்கள்.

    மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் கடந்த 4 மாதங்களாக நடந்து முடிந்துள்ளது. உறுப்பினர் சேர்க்கையும் அசுர வேகத்தில் நடக்கிறது. கட்சியை தொடங்க வேண்டியது மட்டும்தான் பாக்கி என்பதும் ரஜினி மக்கள் மன்றத்தினரின் குரலாக ஒலிக்கிறது.


    கடந்த டிசம்பர் மாதம் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினி அதன் பின்னர் 2 மாதங்கள் தொடர்ந்து அமைதியாகவே இருந்தார். அதற்குள் கமல் புதிய கட்சியை தொடங்கி ஊர் ஊராக செல்ல தொடங்கிவிட்டார். இதனால் என்னாச்சி ரஜினிக்கு? எதுவுமே பேசாமல் இருக்கிறாரே? என்பது போன்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.

    இதற்கெல்லாம் விடை அளிக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரஜினி தனது பேச்சில் புலிப்பாய்ச்சலை வெளிப்படுத்தினார்.

    நான் அரசியலுக்கு வந்துள்ளதை பலர் ஏளனம் செய்கிறார்கள். என்னாலும் எம்.ஜி.ஆர். தந்த நல்லாட்சியை தர முடியும் என்று பொங்கினார்.

    இதன் பின்னர் அவரது இமயமலை பயணமும் அப்போது அரசியல் பேசாமல் தவிர்த்ததும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இமயமலையில் இருந்து திரும்பிய பின்னர் கடந்த 9-ந்தேதி நடந்த காலா விழா ரஜினியின் அரசியல் வேகத்துக்கு மீண்டும் அடித்தளம் அமைத்துள்ளது என்றே கூறலாம்.


    அந்த விழாவில் ரஜினி கூறிய தவளை கதை, தன்னை தினமும் விமர்சிப்பவர்களுக்கு அவர் கொடுத்துள்ள பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. ரஜினியை பற்றி பலரும் பலவிதமான விமர்சனங்களை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இவை எதற்குமே ரஜினி பதில் கூறுவதில்லை. தன்னை விமர்சிப்பவர்களுக்காகவே தவளை கதையை கூறி தெளிவு படுத்தியுள்ளார் என்கிறார்கள் அவரது கட்சியினர். 3 தவளைகள் மலை ஏறும் போது, சுற்றி நிற்பவர்கள் எல்லாம் அவ்வளவு தூரம் ஏறமுடியாது என்று கூறியதையும் தாண்டி ஒரு தவளை மட்டும் மலை உச்சியை தொட்டது.

    ஏனென்றால் அந்த தவளைக்கு காது கேட்கவில்லை. இப்படி நம்மை சுற்றி இருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்காமல் செல்ல வேண்டிய இலக்கை அடைய வேண்டும் என்றே ரஜினி எங்களிடம் அறிவுறுத்தி உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

    மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணியினரின் ஆலோசனைக்கு பின்னர் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியுள்ள ரஜினி பெண்களின் ஓட்டுகளை கவரவும் திட்டமிட்டுள்ளார்.

    இன்னும் ஒன்று அல்லது 2 மாதங்களில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்க உள்ள ரஜினி தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த உள்ளார்.

    தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் செயல்பட முடியாத நிலை ஆகியவை ஏற்படுத்தி இருக்கும் வெற்றிடத்தை நிரப்பவே வந்துள்ளதாக கூறும் ரஜினி, அதற்காக நகர்த்தி வரும் காய்கள் வெற்றிக் கோட்டை எட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம். #Rajinikanth #RajiniMakkalMandram
    ×