search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. நிர்வாகிகள்"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழகிய மண்டபத்தில் கலந்துகொள்ளும் மாவட்ட இளைஞரணி ஊழியர் கூட்டம்

    மார்த்தாண்டம் :

    குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகிற 17-ந்தேதி தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழகிய மண்டபத்தில் கலந்துகொள்ள இருக்கும் மாவட்ட இளைஞரணி ஊழியர் கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்தும், வருகிற 14-ந்தேதி சென்னையில் நடைபெற இருக்கும் மகளிர் உரிமை மாநாடு ஆயத்த பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரெமோன், பப்புசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெகநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் புஷ்பலீலா ஆல்பன், ராஜூ, ஒன்றிய செயலாளர்கள் டி.பி.ராஜன், வழக்கறிஞர் ராஜேஷ்குமார், குழித்துறை நகர செயலாளர் வினுக்குமார், பேரூர் செயலாளர்கள் சத்யராஜ், ஆனந்த ராஜன், மணி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கவுன்சிலர் அலாவுதீன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூரில் தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், உட்கட்சி வேற்றுமையை மறந்து வரும் தேர்தலில் அனை வரும் பொறுப்பாளராக செயல்பட வேண்டும். மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் தங்களுக்குரிய பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். செயல்படாத நிர்வாகிகள் கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    நகராட்சி தலைவர் முகமது யாசின், வல்லாளபட்டி சேர்மன் குமரன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ் சுபைதா அப்பாஸ், தொண்டரணி அமைப்பாளர் வேலாயுதம், இளைஞர் அணி அமைப்பாளர் அழகுபாண்டி, வேலூர் யூனியன் துணை சேர்மன் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் ராஜராஜன், கிருஷ்ணமூர்த்தி, பிரபு, பழனி வல்லாளப்பட்டி கார்த்திகேயன், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைபுகழேந்தி, முருகானந்தம், நகராட்சி கவுன்சிலர் அலாவுதீன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. நிர்வாகிகள் அமைச்சரிடம் வாழ்த்து தெரிவித்தனர்.
    • தி.மு.க. அயலக அணி சிவகங்கை மாவட்ட தலைவராக ஆர்விஎஸ்.சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பத்தூர்

    தி.மு.க. அயலக அணி சிவகங்கை மாவட்ட தலைவராக ஆர்விஎஸ்.சரவணனும், துணைத் தலைவராக ஜான்பீட்டரும், அமைப்பாளராக அஜித் குமார், துணை அமைப்பா ளர்களாக நெடுஞ்செழியன், புகழேந்தி, சதீஷ்குமார், சிவசுப்பிரமணியன், ராஜ்குரு மற்றும் சீமான் சன் சுப்பையா ஆகியோரை பொதுச் செயலாளர் நியமனம் செய்துள்ளார்.

    நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் திருப்பத்தூரில் கூட்டுறவு துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். புதிய நிர்வாகிகள் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றனர்.

    • திருமங்கலம் நகர தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • ஒவ்வொரு வார்டு வீதம் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நகர தி.மு.க. சார்பில் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆலோசனையின்பேரில் நடந்த இந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதிய மான், அவைத் தலைவர் அப்துல்கலாம் ஆசாத், துணைச் செயலாளர் செல்வம், கவுன்சிலர்கள் வீரகுமார், திருக்குமார், சின்னசாமி, சாலிகா உல்பத் ஜெய்லானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருமங்கலத்தில் நடைபெறும் தமிழக அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் ஏ.வ. வேலு வருகை-வரவேற்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஒவ்வொரு வார்டு வீதம் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    • நெற்குப்பையில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோரின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பையில் தி.மு.க. பேரூர் சார்பில் நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. நகர அவைத்தலைவர் முத்து தலைமை தாங்கினார்.

    உள்கட்சி செயல்பாடு குறித்தும், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோரின் பிறந்த நாள் விழாவை முப்பெரும் விழாவாக நமது பகுதியில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பேரூராட்சி சேர்மன் புசலான் வேண்டுகோள் விடுத்தார். நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கட்சிக் கொடியை நிறுவி அதற்கான செலவினங்களை தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

    மாவட்ட செயலாளரின் ஒப்புதலோடு வருகிற நாட்களில் முப்பெரும் விழா நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பொருளாளர் ராமன், மாவட்ட பிரதிநிதி நடராஜன், முன்னோடிகள் ராசு, சேவுகன், நாகு, பாபு, பாதர் வெள்ளை,12-வது வார்டு பிரதிநிதி சேவுகன்.

    கவுன்சிலர் சின்னையா, வார்டு செயலாளர்கள் ரியாஸ் அஹமது, ராமு வெள்ளைச்சாமி, நகர துணை செயலாளர் போதும் பொண்ணு, நகர துணை இளைஞரணி வீரமணி, ஒன்றிய பிரதிநிதிகள் சாமிநாதன், பாண்டியன், மாணவரணி அமைப்பாளர் பாலமுருகன், நகர தொழில் நுட்ப அணி அமைப்பாளரும், 2-வது வார்டு கவுன்சிலருமான கண்ணன், உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள், மகளிரணி, என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

    • விருதுநகர் மாவட்ட தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
    • மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதன் விவரம் வருமாறு:-

    விருதுநகர் வடக்கு மாவட்ட மேற்கு ஒன்றிய அவை தலைவர்-சிவா னந்தம், செயலாளர்- ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ., பொருளாளர்-பால்பாண்டி. வடக்கு ஒன்றிய அவை தலைவர்-சங்கர்ராஜ், செயலாளர் ஆவுடை யம்மாள், பொருளாளர்-ரவிக்குமார்.சிவகாசி வடக்கு ஒன்றிய அவை தலைவர்-கதிரேசன், செயலாளர்-தங்கராசா, பொருளாளர்-அண்ணாமலை.

    சிவகாசி தெற்கு ஒன்றிய அவை தலைவர்-சாகுல்அமீது, செயலாளர்-விவேகன்ராஜ், பொருளாளர்-செல்வம். சிவகாசி கிழக்கு ஒன்றிய அவை தலைவர்-சுப்பராஜ், செயலாளர்கோபிகண் ணன், பொருளாளர்-முத்துராஜ்.

    திருச்சுழி வடக்கு ஒன்றிய அவை தலைவர்-அழகன், செயலாளர்- சந்தன பாண்டியன், பொருளாளர்-சாமிகண்ணு. திருச்சுழி தெற்கு ஒன்றிய அவை தலைவர்-சம்சுதீன், செயலாளர்-பொன்னுச்சாமி, பொருளாளர்-முத்து.

    நரிக்குடி வடக்கு ஒன்றிய அவை தலைவர்-ஆண்டி மூப்பன், செயலாளர்-கண்ணன், பொருளாளர்-மகாலிங்கம். நரிக்குடி தெற்கு ஒன்றிய அவை தலைவர்-தியாகராஜன், செயலாளர்-போஸ், பொருளாளர்-கோபாலகிருஷ்ணன்.

    காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அவை தலைவர்-மகேந்திரசாமி, செயலாளர்-செல்வம், பொருளாளர்-அழகுமலை. காரியாபட்டிமேற்கு ஒன்றிய அவை தலைவர்-ரமேஷ், செயலாளர்-கண்ணன், பொருளாளர்-ஜெயசூரியன்.

    விருதுநகர் தெற்கு மாவட்ட கிழக்கு ஒன்றிய அவை தலைவர்-அல்ேபான்ஸ்ராஜ், செயலாளர்-செல்லப்பாண்டியன், பொருளாளர்-அழகர்சாமி. அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய அவை தலைவர்-அழகர்சாமி, செயலாளர்-பொன்ராஜ், பொருளாளர்-பிரேம்குமார்.

    அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய அவை தலைவர்-கே.வி.கே.ஆர்.பிரபாகரன், செயலாளர்-பாலகணேசன், பொருளாளர்-உதயசூரியன்.

    சாத்தூர் கிழக்கு ஒன்றிய அவை தலைவர்-ரா‌ஜூ, செயலாளர்-முருகேசன், பொருளாளர்-காசிராஜன். சாத்தூர் மேற்கு ஒன்றிய அவை தலைவர்-தர்மராஜ், செயலாளர்-கடற்கரைராஜ், பொருளாளர்-முத்துவேல் பாண்டியன்.

    ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய அவை தலைவர்-குருசாமி, செயலாளர்-சரவணமுருகன், பொருளாளர்-விவேகானந்தன். ராஜபளையம் மேற்கு ஒன்றிய அவை தலைவர்-நடராஜன், செயலாளர்-தங்கப்பாண்டி, பொருளாளர்-ஜஸ்டின் சவுரிராஜ்.

    ராஜபளையம் தெற்கு ஒன்றிய அவை தலைவர்-முருகேசன், செயலாளர்-ஞானராஜ், பொருளாளர்-ராமகிருஷ்ணன்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய அவை தலைவர்-காளிதாசன், செயலாளர்-ஆறுமுகம், பொருளாளர்-முருகன்.

    வத்திராயிருப்பு ஒன்றிய அவை தலைவர்-கண்ணன், செயலாளர்-முனியாண்டி, பொருளாளர்-மதிவாணன். வெம்பக்கோட்டை ஒன்றிய அவை தலைவர்-புஷ்பராஜ், செயலாளர்-கிருஷ்ணகுமார், பொருளாளர்-செல்வராஜ்.

    வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அவை தலைவர்-திருப்பதி, செயலாளர்-ஜெயபாண்டியன், பொரு ளாளர்-விவேகானந்தன்.

    மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. இேத போல துணைச்செயலாளர்கள், துணைத்தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
    • புதியதாக தேர்ந்தெ–டுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் தெற்கு, வடக்கு ஆகிய பகுதிகளுக்கான தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடந்தது.இதனடிப்படையில் தி.மு.க. தலைமை கழகம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தெற்குப்பகுதிக்கு புதிய நிர்வாகிகளாக அவைத் தலைவர் திருப்பாலைக்குடி முகமது உமர் பாரூக், செயலாளராக பனிக்காேட்டை மோகன், ஒன்றிய துணைச்செயலாளராக உகந்தங்குடி ராமநாதன், பால்குளம் அர்ச்சுனன், மோர்ப்பண்ணை லதா சரவணன், பொருளாளர் ரகுநாதமடை மாணிக்கம், மாவட்ட பிரதிநிதிகளாக சீனாங்குடி நாகமுத்து, திருப்பாலைக்குடி- பழங்கோட்டை சபரிநாதன், ஆர்.எஸ்.மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் (ஓய்வு) மணிமாறன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதுபோல் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய வடக்குப் பகுதிக்கான புதிய நிர்வாகிகளாக அவைத்தலைவர் புல்லமடை ஆறுமுகம், செயலாளர் புதுக்குறிச்சி கண்ணன் (எ) ராமசுப்பிரமணியன், துணை செயலாளர்கள் சனவேலி மேழிச்செல்வம், வரவணி முத்தரசு, ஆயங்குடி மாதரசி கருணாநிதி, பொருளாளர் துக்கனாங்கரை நாக–நாதன், மாவட்ட பிரதி–நிதிகள் ஆயிரவேலி வெங்கடாஜலபதி, கீழ்மருதங்குளம் விவேகானந்தன், ஆப்பிராய் சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதியதாக தேர்ந்தெ–டுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×