என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
  X

  அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்,அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அருகில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் உள்ளனர்.

  அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு பல்வேறு புதிய பொறுப்புகளை வழங்கி வருகிறார்.
  • மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வை நியமனம் செய்தார்.

  மதுரை

  அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு பல்வேறு புதிய பொறுப்புகளை வழங்கி வருகிறார்.

  இதனையடுத்து அமைப்புச்செயலாளராக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வை நியமனம் செய்தார். இதைத் தொடர்ந்து ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

  இதனையடுத்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள், இளைஞரணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட அவைத் தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், துணைச் செயலாளர் ஓம்.கே.சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, கார்சேரி கணேசன், பொன் ராஜேந்திரன், பொன்னுச்சாமி. வெற்றிச்செழியன், குலத்துங்கன், வாசு என்ற பெரியண்ணன், பகுதி செயலாளர் வண்டியூர் செந்தில்குமார், வழக்கறிஞர் ஜீவானந்தம், திருப்பாலை கோபி, அவனியாபுரம் முருகேசன், பன்னீர்செல்வம், வெள்ளாளப்பட்டி உமாபதி, எம்.ஜி.ஆர். மன்ற மாநிலத் துணைச் செயலாளர் ஒத்தக்கடை முத்துகிருஷ்ணன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் கே.சி.பி. ஜெயக்குமார், கலைப்பிரிவு செயலாளர் அரசு, மாணவரணி செயலாளர் முத்துகிருஷ்ணன், ஓட்டுனர் அணி அன்பு செல்வம், கார்த்திகேயன், ராஜேந்திரன், சேனாதிபதி, தினேஷ்குமார், செல்வகுமார், எம்.ஆர்.குமார், மகாராஜன், வரிச்சூர் சரவணன், பெருமாள், வெள்ளரிப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பிரபு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு பிரசன்னா, குமார், வெற்றிவேல், ராஜா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டு வேஷ்டி-சால்வை கொடுத்தும் வாழ்த்து பெற்றனர்.

  Next Story
  ×