search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Devarkonda"

    • 2023 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்தார்
    • மிருணாள் தாகூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் விஜய்தேவரகொண்டா. 'நுவ்விலா' படத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு சினிமா துறையில் விஜய் தேவரகொண்டா அறிமுகமானாலும். 2016 ஆம் ஆண்டு வெளியான 'பெல்லி சூப்புலு' படத்தின் மூலம் இவரை மக்கள் அங்கீகரிக்க ஆரம்பித்தார்கள்.

    இப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அதற்கு அடுத்து 2017 ஆம் ஆண்டு விஜயதேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் வெளிவந்த அர்ஜூன் ரெட்டி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

    அர்ஜூன் ரெட்டி புகழ் உலகமெங்கும் பரவியது. விஜய் தேவரகொண்டாவை ஒரு ரக்கட் பாய்-க்கு முன்னுதாரணமாக வைத்து இருந்தனர். அர்ஜூன் ரெட்டி படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டது.

    பின் அவர் அடுத்தடுத்து படங்களில் நடித்தார். கீதா கோவிந்தம் படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பும் , கெமிஸ்டிரியும் மிக அழகாக அமைந்து இருக்கும். பின் 2023 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்தார். இந்த படம் மக்களிடையெ எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை.

    இந்நிலையில் அடுத்ததாக விஜய் தேவரகொண்டா 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தில் நடித்துள்ளார். மிருணாள் தாகூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கீதா கோவிந்தத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுடன், பரசுராம் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் அப்படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 8 ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி எப்படி வெற்றி அடைந்ததோ அதே போல் மிருணாள் தாகுர் ஜோடியும் வெற்றி பெறும் என ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை சமந்தா இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படத்தில் நடித்து வந்தார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பட்டுள்ளது.

    சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.


     



    இந்நிலையில் குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • தமிழில் கார்த்தியுடன் 'சுல்தான்', விஜய் ஜோடியாக 'வாரிசு' படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
    • விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவு சென்றது தவறா? என்று நடிகை ராஷ்மிகா ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

    தமிழில் கார்த்தியுடன் 'சுல்தான்', விஜய் ஜோடியாக 'வாரிசு' படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடை விதிக்கும்படி வற்புறுத்தினர். நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாகவும், அவருடன் மாலத்தீவுக்கு சென்று வந்ததாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டியில், "சமீபகாலமாக சமூக வலைதளங்களில் என்மீது அவதூறு செய்வது அதிகமாகிவிட்டது. சிறு வயது முதலே ஹாஸ்டலில் தங்கி படித்தேன். பள்ளியில் அதிகமாக யாரோடும் சேரமாட்டேன். அதனால் நிறைய பேர் எனக்கு திமிர் என்று தவறாக புரிந்து கொண்டார்கள். அறையில் தனியாக உட்கார்ந்து அழுத நாட்கள் கூட உண்டு.

    வாழ்க்கையில் இன்னும் நிறைய தூரம் பயணம் செய்ய வேண்டியது இருக்கிறது. இந்த சிறிய பிரச்சினைக்கு நீ இப்படி இடிந்து போய்விட்டால் எப்படி என்று அம்மா சொன்ன வார்த்தைகள் எனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்தன. ஒரு எல்லை வரை காத்திருப்பேன். எல்லை தாண்டினால் யாராக இருந்தாலும் சரி எதிர்த்து பதிலடி கொடுப்பேன். மாலத்தீவுக்கு விஜய் தேவரகொண்டாவுடன் சென்றீர்களாமே? அவருடன் காதலில் இருக்கிறீர்களா? இப்படி எல்லாம் விமர்சனம் செய்கிறார்கள். விஜய் தேவரகொண்டா எனது நண்பர். அவரோடு 'டூர்' சென்றால் தவறு என்ன?'' என்றார்.

    காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்திற்கு ஹீரோ என தலைப்பு வைத்துள்ளனர். #HERO #VijayDevarkonda #AnandAnnamalai
    அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஆனந்த் சங்கர் இயக்கிய நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் அவர் நடிக்கும் படங்களுக்கு தமிழிலும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

    இந்த நிலையில், விஜய் அடுத்ததாக மற்றுமொரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.



    விளையாட்டு சம்பந்தப்பட்ட த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா பைக் ரேசராக நடிப்பதாக கூறப்படுகிறது. ஹீரோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22-ந் தேதி டெல்லியில் துவங்க இருக்கிறது.

    இந்த படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். முரளி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. #HERO #VijayDevarkonda #AnandAnnamalai

    பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் வர்மா படத்தை கைவிடுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்த நிலையில், அதற்கான காரணம் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Varmaa #DhruvVikram
    விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளிவந்த தெலுங்கு படம், ‘அர்ஜூன் ரெட்டி’. இந்த படம் தென்னிந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை கேரளாவை சேர்ந்த ஈ4 எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் முகேஷ் ஆர்.மேத்தா பெற்று இருந்தார்.

    முகேஷும், நடிகர் விக்ரமும் நெருங்கிய நண்பர்கள். அதனால், விக்ரமின் மகனான துருவை வைத்து இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டார். தனக்கு சேது படத்தின் மூலம் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த பாலா படத்தில் தன் மகனை அறிமுகம் செய்ய வேண்டும் என்பது விக்ரமின் எண்ணம்.



    இதைத் தொடர்ந்து துருவை அறிமுகம் செய்ய பாலாவும் ஒப்புக் கொண்டார். அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா தொடங்கியது. சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரெய்லரும் வெளியானது. அதற்கு வரவேற்பும் கிடைத்தது. படத்தை காதலர் தினமான வரும் 14-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பு சார்பில் படம் கைவிடப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது.

    சேது படம் மூலம் விக்ரமுக்கு திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தவர் இயக்குனர் பாலா. பிதாமகன் படத்தின் மூலம் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று தந்தவர். நான் கடவுள் படத்தின் மூலம், சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றவர்.



    இந்த நிலையில் தயாரிப்பு தரப்பு வேறு இயக்குனரை வைத்து வர்மா படத்தை எடுக்க இருப்பதாக அறிவித்து இருப்பது, தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் சுமார் ரூ.15 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் வீணாகப்போகிறது. தயாரிப்பு தரப்புக்கு ரூ.15 கோடிக்கு மேல் நஷ்டம் ஆகலாம் என்கிறார்கள்.

    இதன் பின்னணி பற்றி படக்குழுவை சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம். அவர்கள் கூறியதாவது, ‘முதலில் ரீமேக் படத்தை எடுக்க பாலா விரும்பவே இல்லை. அவரை கட்டாயப்படுத்தி தான் சம்மதிக்க வைத்தார்கள். வர்மா படத்தின் கதையில் பாலா ஏகப்பட்ட மாற்றங்கள் செய்தார். அசல் தெலுங்கு பதிப்பில் சில காட்சிகளில் மட்டுமே வரும் வீட்டு வேலை செய்யும் பெண்மணியின் வேடத்தை பெரிதாக்கி படம் முழுக்க வருவது போல மாற்றி அமைத்தார்.

    அந்த கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். படம் தொடங்கியபோதே விக்ரமுக்கும், பாலாவுக்கும் செட் ஆகவில்லை. பாலா இசையமைப்பாளராக இளையராஜாவை ஒப்பந்தம் செய்யலாம் என்று சொன்னார். ஆனால் விக்ரம் அதை நிராகரித்து அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தின் இசையமைப்பாளர் ரதனை ஒப்பந்தம் செய்ய சொன்னதாகவும் தெரிகிறது.



    முழு படத்தையும் பார்த்த விக்ரமுக்கும், அவரது மகன் துருவ்வுக்கும் திருப்தி இல்லை. நெருக்கமான காட்சிகள் அதிகமாக படத்தில் இருந்ததும் இதற்கு காரணம். இதனால் கோபமான துருவ் சினிமாவே வேண்டாம் என்று கூறி அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். இந்த படத்தை ரிலீஸ் செய்தால் துருவ்வுக்கு மோசமான தொடக்கமாக அமையும் என்பதால் தான் விக்ரம் பாலாவின் நட்பை மீறி இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.

    படத்தை பார்த்த தயாரிப்பாளர் கதையில் சில மாற்றங்கள் செய்ய கூறி இருக்கிறார். ஆனால் ஒரு காட்சியை கூட மாற்ற மாட்டேன் என்று பாலா கூறிவிட்டார். தமிழ் சினிமா மட்டும் அல்ல இந்திய சினிமா வரலாற்றிலேயே முழுமையாக எடுக்கப்பட்ட படத்தை கைவிடுவது முதல் நிகழ்வு. ஆனால் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக நஷ்டத்தை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளரை பாராட்டியே ஆகவேண்டும்’ என்றனர். #Varmaa #DhruvVikram

    பாலா இயக்கத்தில் துருவ் - மேகா நடிப்பில் உருவாகி இருக்கும் `வர்மா' படத்தை கைவிடுவதாக அறிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம் படம் ரிலீசாகாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. #Varma #DhruvVikram #Megha
    தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

    பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை கைவிடுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இ4 என்டர்டெயின்மெண்ட் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற தலைப்பில் தயாரித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. மேலும் படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால், படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம். மேலும் வர்மா படத்தை துருவ்வை வைத்தே மீண்டும் முதலில் இருந்து எடுக்க முடிவு செய்திருக்கிறோம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும். 

    படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள், கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும். விரைவில் படப்பிடிப்பை தொடங்கி 2019 ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். 

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. #Varma #DhruvVikram #Megha

    பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்தித்தில் நடித்துள்ள சான்ட்ரா ஏமி, பாலாவை பார்த்து முதலில் பயந்ததாகவும், பின்னர் மிகவும் வசதியாக உணர்ந்ததாகவும் கூறினார். #Varma #SandraAmy
    காற்றின் மொழி படத்தில் பண்பலைத் தொகுப்பாளினியாக நடித்து கவனம் பெற்றவர் சான்ட்ரா ஏமி. அடுத்து அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வர்மா படத்தை எதிர்பார்த்துள்ளார்.

    அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகும் வர்மா படத்தை பாலா இயக்குகிறார். நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் தேவி என்ற கதாபாத்திரத்தில் சான்ட்ரா நடித்துள்ளார். அவர் பாலா இயக்கத்தில் நடித்த அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். 



    “காற்றின் மொழி படத்திற்கு முன்பே வர்மா படத்தில் ஒப்பந்தமாகிவிட்டேன். ஆர்வமுள்ள எந்த நடிகருக்கும் பாலா இயக்கத்தில் நடிப்பது கனவாக இருக்கும். கதாபாத்திர தேர்வு நடைபெற்ற போது கலந்து கொண்டு தேர்வு ஆனேன். எந்த நடிகருக்கும் முதல் நாள் படப்பிடிப்பில் நடிக்கும்போது பதட்டமாக இருக்கும். பாலா மிரட்டுவார் என்று கூறி இருந்தார்கள். வசனம் சரியாக பேசவில்லை என்றாலோ அல்லது சரியாக நடிக்கவில்லை என்றாலோ மட்டும் தான் கோபப்படுவார் என்பதை நான் நடிக்கத் தொடங்கிய பின் புரிந்துகொண்டேன். மிகவும் வசதியாக உணர்ந்தேன்.

    ஒவ்வொரு காட்சியையும் ரசித்து நடித்தேன். அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். தேவி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். துருவ் விக்ரமுடன் இணைந்து சில காட்சிகளில் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார். #Varma #DhruvVIkram #Bala #SandraAmy

    ‘வர்மா’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவிருக்கும் துருவ் விக்ரம், திரிஷாவுடன் நடிக்க ஆசைப்படுவதாகவும், நான் தூங்கும் போது அவர் கன்னத்தை கிள்ளிச் சென்றதாகவும் கூறியுள்ளார். #DhruvVikram #Trisha
    தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ‘வர்மா’ படத்தில் மேகா என்ற மாடல், துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தை வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தை பிப்ரவரியில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 



    இந்நிலையில், ‘எந்த நடிகையோடு நடிக்க ஆசை?’ என துருவ் விக்ரமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், “சிறுவயதில் இருந்தே திரிஷாவை ரொம்பப் பிடிக்கும். ஆனால், இதுவரை அவரைச் சந்தித்தது கூட இல்லை. ஒருமுறை பிரிவியூ தியேட்டரில் இருந்தபோது நான் தூங்கிவிட்டேன். அப்போது அவர் வந்து என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு சென்றுவிட்டார்” எனத் தெரிவித்தார். #DhruvVikram #Trisha #Varma

    பாலா இயக்கத்தில் துருவ் - மேகா நடிப்பில் உருவாகி இருக்கும் `வர்மா' படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Varma #DhruvVikram #Megha
    தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா சவுத்ரி என்ற மாடல் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். 

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் கைப்பற்றியிருக்கிறார். படத்தை வருகிற பிப்ரவரியில், காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே `வானோடும் மண்ணோடும்' என்ற பாடல் வரிகள் அடங்கிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.


    இந்தப் படத்துக்கு ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரதன் இசையமைக்க சுகுமார் இந்த படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். #Varma #DhruvVikram #Megha

    பாலா இயக்கத்தில் துருவ் - மேகா நடிப்பில் உருவாகி இருக்கும் வர்மா படத்தை டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. #Varma #DhruvVikram #Megha
    தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா என்ற மாடல் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். 

    ஏற்கெனவே ஒரு பெங்காலிப் படத்தில் நடித்திருக்கும் மேகா, ‘வர்மா’ மூலம் தமிழில் அறிமுகமாகிறார். கதக் நடனத்தில் தேர்ச்சி பெற்ற இவருடைய கேரக்டர் பெயரும் மேகா என்று தகவல் கிடைத்துள்ளது. முதல் படத்திலேயே சொந்தப் பெயரில் நடிப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் மேகா. 

    இந்தப் படத்துக்கு ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார். சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்கா, வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு, கடந்த செப்டம்பர் 17-ம் தேதியுடன் நிறைவுற்றது.



    இதன் டீஸர் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தை வருகிற டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #Varma #DhruvVikram #Megha

    ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - மெஹ்ரீன் பிர்சாடா நடிப்பில் வெளியாகி இருக்கும் `நோட்டா' படத்தின் விமர்சனம். #NOTAReview #VijayDevarakonda #MehreenPirzada
    தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார் நாசர். அவரது மகன் விஜய் தேவரகொண்டா, அரசியலில் ஈடுபாடு இல்லாமல் வெளிநாட்டில் வீடியோ கேம் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

    சிறு வயதிலேயே தாயை இழந்த விஜய் தேவரகொண்டா, ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளுக்கு, இந்தியா வந்து தனது அம்மா பெயரில் இருக்கும் ஆசிரமத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த ஆசிரமத்தை சத்யராஜ் நிர்வகித்து வருகிறார். அவரது மகளான மெஹ்ரின் பிர்சாடா பத்திரிகை ஒன்றில் நிருபராக இருக்கிறார்.



    இப்படி இருக்க, தனது பிறந்தநாளுக்காக இந்தியா வரும் விஜய் தேவரகொண்டா, தனது பிறந்தநாளை கருணாகரன் மற்றும் யாஷிகா ஆனந்துடன் கொண்டாடி வருகிறார். இந்த நிலையில், நாசர் அழைப்பின் பேரில் அவசரமாக அழைத்துச் செல்லப்படும் விஜய் தேவரகொண்டா இரவோடு இரவாக தமிழகத்தின் புதிய முதல்வராக அறிவிக்கப்படுகிறார்.

    நாசர் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள எண்ணிய நாசர், சாமியார் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் தனது மகனையே முதலமைச்சராக்குகிறார். நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை விஜய் தேவரகொண்டா வெளியில் வரவேண்டாம் என்றும் நாசர் அறிவுறுத்துகிறார்.

    இந்த நிலையில், நாசருக்கு எதிராக அந்த வழக்கின் பின்னணி திரும்ப, அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். நாசர் கைது செய்யப்படுவதால், தமிழ்நாட்டில் கலவரம் மூள்கிறது. அந்த கலவரத்தில் உயிரிழப்புகளும் ஏற்டுகிறது. இந்த நிலையில், செய்வதறியாது தவிக்கும் விஜய், மக்களை சந்திக்க வெளியில் வருகிறார்.



    அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் ஆக்ரோஷமாக பேசும் விஜய், கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். அவரது ஆக்ரோஷமான உத்தரவு அவருக்கு ரவுடி முதலமைச்சர் என்ற பெயரை வாங்கிக் கொடுக்கிறது. எதிர்கட்சி தலைவரின் மகளான சஞ்சனா நடராஜன், கல்லூரியில் படிக்கும் போதே விஜய் ரவுடி தான் என்று பிரசாரம் செய்து, அவருக்கு எதிராக சில சதிதிட்டங்களையும் தீட்டுகிறார்.

    இதற்கிடையே ஜாமீனில் வெளியில் வரும் நாசர், குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். வேண்டா வெறுப்பாக அரசியலில் நுழைந்து தற்போது மக்களுக்காக உழைக்க வேண்டும், நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் கவனம் செலுத்துகிறார் விஜய். அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, டம்மியான ஒருவரை பதவியில் உட்கார வைக்க நாசர் முடிவு செய்கிறார். ஒருகட்டத்தில் இது அப்பா, மகன் அரசியல் சண்டையாக மாறுகிறது.



    கடைசியில், அப்பா, மகனுக்கு இடையே நடந்த அரசியல் போரில் யார் வெற்றி பெற்றார்? தனக்கு எதிராக வந்த சூழ்ச்சிகளை விஜய் தேவரகொண்டா முறியடித்தாரா? முதலமைச்சராக நீடித்தாரா? தனது பழைய வாழ்க்கைக்கே திரும்பினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தமிழில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே நல்ல அடித்தளத்தை அமைத்திருக்கிறார் என்று சொல்லலாம். முதலமைச்சர் பதவி பற்றி எந்த அனுபவமுமின்றி வேண்டா வெறுப்பாக அதில் உட்காரும் அவர், தனக்கு எதிராக வரும் சிக்கல்களை எதிர்நோக்கும் காட்சிகளிலும், தமிழ் வசனங்களை பேசும் போதும் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

    மெஹ்ரீன் பிர்சாடாவுக்கு சொல்லும்படியாக பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு நாயகியான சஞ்சனா நடராஜன் அரசியல் களத்தில் தீயை பற்றவைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.



    படத்திற்கு முக்கிய பலம் சத்யராஜ் மற்றும் நாசரின் நடிப்பு. சத்யராஜ் அவரது உண்மையான தோற்றத்தில் வந்து ரசிக்க வைக்கிறார். படத்தின் ஓட்டத்திற்கும், திருப்புமுனைக்கும் நாசர் முக்கிய பங்காற்றுகிறார். அவரது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். கருணாகரன் ஒரு சில காட்சிகளில் வருகிறார்.

    பொதுவாக அரசியல் சம்பந்தப்பட்ட கதைகளை எடுக்க ஒரு துணிச்சல் வேண்டும். அனைவரும் அரசியல் சம்பந்தப்பட்ட கதைகளை கையில் எடுப்பதில்லை. அப்படி கையில் எடுத்தவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்கள் என்றும் கூறமுடியாது. அந்த வகையில் தைரியமாக அரசியல் கதையை இயக்கியுள்ள ஆனந்த் சங்கருக்கு பாராட்டுக்கள். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாவது பாதி கொஞ்சம் நீளமாகவும் இருக்கிறது. திரைக்கதையில் இரண்டாவது பாதியின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

    சாம்.சி.எஸ் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பாடல்களும் கேட்கும் ரகம் தான். சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.

    மொத்தத்தில் `நோட்டா' ஒருமுறை வாக்களிக்கலாம். #NOTAReview #VijayDevarakonda #MehreenPirzada

    விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் நோட்டா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சத்யராஜ், தனது லொள்ளு பேச்சால் அரங்கில் இருப்பவர்களை சிரிப்பலையில் மூழ்கடித்தார். #NOTA #Sathyaraj
    ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்த படத்தின் மூலம் நாயகனாக தமிழில் அறிமுகமாகிறார். நாயகியாக மெஹ்ரீன் பிர்சாடா, சன்சனா நடராஜன் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சத்யராஜ் பேசும் போது,

    “நடப்பு அரசியலை அதிரடியாக படமாக எடுக்கும் தைரியம் இயக்குனர் மணிவண்ணனுக்கு மட்டுமே இருந்தது. அமைதிப்படை, கோ என அரசியல் படங்களில் புதிய பாணியை புகுத்தியது போல இந்தப்படத்திலும் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர். எனக்கு பொதுவாகவே வேறு மொழியில் டப்பிங் பேசுவது தான் கொஞ்சம் கஷ்டமான விஷயம். நண்பன் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக தெலுங்கை தமிழில் எழுதி வைத்துக்கொண்டு ஈஸியாக பேசிவிடலாம் என நினைத்தேன். ஆனால் ஒருநாள் முழுதும் முயன்றும் என்னால் ஒரிஜினல் தெலுங்கில் பேசமுடியவே இல்லை. ஆனால் இந்தப்படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா, அழகான தமிழ் உச்சரிப்புடன் நாலு பக்க வசனங்களை ஞாபகமாக வைத்து பேசுவது கண்டு பிரமித்து போனேன். 



    நான் இந்த படத்தில் ஜாலியாக நடித்திருக்கிறேன் என்று நாசர் சொன்னார். என்னுடைய 41 வருட சினிமா வாழ்க்கையில், சின்ன மேக்கப் கூட இல்லாமல் நான் நடித்த முதல் படம் இது தான். விக் இல்லாமல் கூட நடித்திருக்கிறேன். ஆனால், ரொம்ப நாளாகவே எந்த மேக்கப்பும் இல்லாமல் இயல்பான கெட்டப்பில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தது. அந்த ஆசையை இதில் நிறைவேற்றி வைத்துவிட்டார் ஆனந்த் சங்கர். #NOTA #Sathyaraj #VijayDevarakonda

    சத்யராஜ் பேசிய வீடியோவை பார்க்க:

    ×