search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    பாலாவை பார்த்து பயந்தேன் - சான்ட்ரா ஏமி
    X

    பாலாவை பார்த்து பயந்தேன் - சான்ட்ரா ஏமி

    பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்தித்தில் நடித்துள்ள சான்ட்ரா ஏமி, பாலாவை பார்த்து முதலில் பயந்ததாகவும், பின்னர் மிகவும் வசதியாக உணர்ந்ததாகவும் கூறினார். #Varma #SandraAmy
    காற்றின் மொழி படத்தில் பண்பலைத் தொகுப்பாளினியாக நடித்து கவனம் பெற்றவர் சான்ட்ரா ஏமி. அடுத்து அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வர்மா படத்தை எதிர்பார்த்துள்ளார்.

    அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகும் வர்மா படத்தை பாலா இயக்குகிறார். நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் தேவி என்ற கதாபாத்திரத்தில் சான்ட்ரா நடித்துள்ளார். அவர் பாலா இயக்கத்தில் நடித்த அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். 



    “காற்றின் மொழி படத்திற்கு முன்பே வர்மா படத்தில் ஒப்பந்தமாகிவிட்டேன். ஆர்வமுள்ள எந்த நடிகருக்கும் பாலா இயக்கத்தில் நடிப்பது கனவாக இருக்கும். கதாபாத்திர தேர்வு நடைபெற்ற போது கலந்து கொண்டு தேர்வு ஆனேன். எந்த நடிகருக்கும் முதல் நாள் படப்பிடிப்பில் நடிக்கும்போது பதட்டமாக இருக்கும். பாலா மிரட்டுவார் என்று கூறி இருந்தார்கள். வசனம் சரியாக பேசவில்லை என்றாலோ அல்லது சரியாக நடிக்கவில்லை என்றாலோ மட்டும் தான் கோபப்படுவார் என்பதை நான் நடிக்கத் தொடங்கிய பின் புரிந்துகொண்டேன். மிகவும் வசதியாக உணர்ந்தேன்.

    ஒவ்வொரு காட்சியையும் ரசித்து நடித்தேன். அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். தேவி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். துருவ் விக்ரமுடன் இணைந்து சில காட்சிகளில் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார். #Varma #DhruvVIkram #Bala #SandraAmy

    Next Story
    ×