என் மலர்
சினிமா

துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாலா இயக்கத்தில் துருவ் - மேகா நடிப்பில் உருவாகி இருக்கும் `வர்மா' படத்தை கைவிடுவதாக அறிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம் படம் ரிலீசாகாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. #Varma #DhruvVikram #Megha
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.
பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை கைவிடுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
#E4Entertainment press release @proyuvraaj@sri50@E4Emovies@sooriaruna@Poffactiopic.twitter.com/cCAi0JbSNN
— MUKESH RATILAL MEHTA (@e4echennai) February 7, 2019
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இ4 என்டர்டெயின்மெண்ட் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற தலைப்பில் தயாரித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. மேலும் படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால், படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம். மேலும் வர்மா படத்தை துருவ்வை வைத்தே மீண்டும் முதலில் இருந்து எடுக்க முடிவு செய்திருக்கிறோம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும்.
படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள், கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும். விரைவில் படப்பிடிப்பை தொடங்கி 2019 ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. #Varma #DhruvVikram #Megha
Next Story