என் மலர்
சினிமா

துருவ் விக்ரமின் வர்மா டிசம்பரில் வெளியீடு
பாலா இயக்கத்தில் துருவ் - மேகா நடிப்பில் உருவாகி இருக்கும் வர்மா படத்தை டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. #Varma #DhruvVikram #Megha
தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா என்ற மாடல் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார்.
ஏற்கெனவே ஒரு பெங்காலிப் படத்தில் நடித்திருக்கும் மேகா, ‘வர்மா’ மூலம் தமிழில் அறிமுகமாகிறார். கதக் நடனத்தில் தேர்ச்சி பெற்ற இவருடைய கேரக்டர் பெயரும் மேகா என்று தகவல் கிடைத்துள்ளது. முதல் படத்திலேயே சொந்தப் பெயரில் நடிப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் மேகா.
இந்தப் படத்துக்கு ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார். சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்கா, வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு, கடந்த செப்டம்பர் 17-ம் தேதியுடன் நிறைவுற்றது.

இதன் டீஸர் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தை வருகிற டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #Varma #DhruvVikram #Megha
Next Story