search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tradition"

    • மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா பாரம்பரிய முறைப்படி நடந்தது.
    • பக்தர்கள் அம்பாளுக்கு காவடி, பூத்தட்டு எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    வாய்மேடு அருகே தாணிக்கோட்டகத்தில் வாணங்காடு ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆடி திருவிழா பாரம்பரிய முறைப்படி நடந்தது.

    முன்னதாக அம்பாளுக்கு பால், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு போட்டும், முடி இறக்கவும், அம்பாளுக்கு காவடி, பூத்தட்டு எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பின்பு பண்டைய கால முறைப்படி பாரம்பரியம் மாறாமல் பனை மட்டை ஓலைகளில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    • கலை பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி 4 நாட்கள் நடைபெறுகிறது.
    • மாலை 6.30 மணிக்கு அருங்காட்சியகத்தில் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுமம், சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் கடை கூடத்தின் சார்பில் சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த 4 நாட்களும் எனது பாரம்பரியம் என்ற தலைப்பில் தஞ்சை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் தங்கள் கலை பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி நடைபெறுகிறது .

    நாளை காலை 10 மணிக்கு தஞ்சை கலைக்கூடத்தில் அருங்காட்சியக நடை பயணமும் நடைபெற உள்ளது. 19-ந் தேதி காலை 10 மணிக்கு 5-ம் வகுப்பு 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அருங்காட்சியகத்தில் ஓவிய போட்டியும், 20-ந் தேதி காலை 10 மணிக்கு அருங்காட்சியகத்தில் புகைப்பட போட்டியும் நடைபெறுகிறது.

    21-ந் தேதி காலை 10 மணிக்கு சரஸ்வதி மகால் நூலகத்தில் அருங்காட்சியகங்களின் வரலாறு என்ற தலைப்பில் பொது மக்களுக்கான பணிமனையும், மாலை 6.30 மணிக்கு அருங்காட்சியகத்தில் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதற்கு அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம். மேலும் பதிவு மற்றும் விவரங்களுக்கு 9842455765, 9443267422, 9442547682 என்ற எண்களை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு தலைப்புகளில் பாரம்பரிய சிக்கு கோலங்கள் வரைந்து விழிப்புணர்வு.
    • 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம், கண்டிதம்பட்டு ஊராட்சியில் பாரம்பரிய சிக்கு கோலம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கண்டிதம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமையில் தமிழ் கவிஞர்கள், திருக்குறள் தமிழ் ஐம்பெருங்காப்பியங்கள், தமிழ் மொழியின் சிறப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பொதுமக்கள் பாரம்பரிய சிக்கு கோலங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறந்த கோலங்கள் வரைந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார், அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    முடிவில் ஜோதி அறக்கட்டளை கள ஒருங்கிணைப்பாளர் நாராயணவடிவு நன்றி கூறினார்.

    • பாரம்பரிய உணவு வகைகள் தயாரித்தல் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டுள்ளது.

    மன்னார்குடி:

    மன்னார்குடிஅரசு உதவி பெறும் தூயவளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக பாரம்பரிய உணவு வகைகள் தயாரித்தல் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றது. பள்ளியின் திட்ட அலுவலர் மேரி செல்வராணி வரவேற்று பேசினார். தலைமையாசிரியை சகோதரி ஜெபமாலை தலைமை வகித்தார்.

    நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா மற்றும். மன்னை ஜேசிஸ் சங்க முன்னாள் தலைவர் உழவன் அருண் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    என்.எஸ்.எஸ். மாணவிகள் தங்கள் வீட்டில் தயாரித்த பாரம்பரிய உணவு வகை பொருட்களை கண்காட்சிக்கு
    வைத்திருந்தனர். கண்காட்சி நடுவர்களாக இருந்து ராஜப்பா மற்றும் அருண் ஆகியோர் பரிசுக்குரிய உணவு வகைகளை தேர்ந்தெடுத்தனர்.

    போட்டியில் தர்ஷினி முதல் பரிசையும். திவ்யதர்ஷினி 2ம் பரிசையும் செ. துர்கா 3ம் பரிசையும் பெற்றனர். சிறப்பு பரிசுகளாக முடவாட்டம் கிழங்கு அடை மற்றும் கேழ்வரகு களியுடன் மீன் குழம்பு தயார் செய்திருந்த வி.தீபிகா, சுண்டைக்காய் வடை தயார் செய்திருந்த மு.ப்ரீத்தி தேவி, கவுனி அரிசி பொங்கல் தயார் செய்திருந்த மீரா தர்ஷினி ஆகியோர் சிறப்பு பரிசுகளையும் பெற்றனர்.

    பள்ளியில் பயிலும் 3800 மாணவிகளும் ஆசிரியைகளும் கண்காட்சியை பார்வையிட்டு பாரம்பரிய உணவு பொருட்கள் தயார் செய்யும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். முன்னதாக பாரம்பரிய நெல் வகைகள் சேகரித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆதிரெங்கம் நெல் ஜெயராமனின் நினைவு நாளை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    உதவி திட்ட அலுவலர் ஷோபனா நன்றி கூறினார்.

    • தமிழ் இலக்கியம் கூறும் கலைகளை பாதுகாக்கும் வகையில் நடைபெற்றது.
    • மாவட்ட அளவில் நடைபெறும் கலை திருவிழாவில் பங்கேற்க தகுதி பெறுவர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கான, வட்டார அளவிலான கலை திருவிழா, நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் தலைமை தாங்கினார்.

    நன்னிலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் பழனிவேல், வட்டார வளமைய மேற்பார்வையாளர் நடேஸ்துரை, வட்டார கல்வி அலுவலர்கள் மணி, முருகபாஸ்கர் ஆகியோர் போட்டியின் நடுவர்களாக இருந்தனர்.

    இதில் நன்னிலம் வட்டாரத்தை சேர்ந்த 7 உயர்நிலை பள்ளிகள், 16 நடுநிலை பள்ளிகள், 11 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த சுமார் 380-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    போட்டியானது கவின் கலை, நுண் கலை, இசைப்பாட்டு, கருவி இசை, நடனம், நாடகம் மொழித்திறன் ஆகிய ஆறு தலைப்புகளின் கீழ் தமிழகத்தின் பாரம்பரிய பண்பாட்டு நினைவுகளை போற்றி பாதுகாக்க கூடிய வகையில், தமிழ் இலக்கியம் கூறும் கலைகளை பாதுகாக்கும் வகையில் புத்துணர்வு ஊட்டக்கூடிய வகையில் நடைபெற்றது.

    இதில் மாணவ- மாணவிகள் ஏராள–மாணவர்கள் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற கலைக்குழு மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் கலை திருவிழாவில் பங்கேற்க தகுதி பெறுவர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

    • விவசாயிகள் பயிற்சிகள், இயற்கை வேளாண்மை, பாரம்பரியம் மற்றம் புதியா நெல் ரகங்களை ஊக்கப்படுத்துதல் என பல்வேறு விவரங்களை எடுத்துரைத்தார்.
    • ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் கிராமங்களில் செயல்படுத்தப்படும் என விவாதிக்கப்பட்டது,

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் வேளா ண்மை மற்றும் உழவர் நலத்துறையில்இயங்கி வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் வட்டார தொழில்நுட்பக் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழுகூட்டம் திருப்பனந்தாள் வேளாண்மை அலுவல கத்தில் நடைப்பெற்றது.

    இக்கூட்டத்தில் வட்டார தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை உதவி இயக்கநர் விஜயாலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் சிவா சுப்பரமணியம் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பி னர்கள் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி இந்த ஆண்டு திருப்பனந்தாள் வட்டாரத்திற்கு ஒதுக்க ப்பட்ட மாவட்டத்திற்க்குள் விவசாயிகள் பயிற்சிகள், இயற்கை வேளாண்மை, பாரம்பரியம் மற்றம் புதியா நெல் ரகங்களை ஊக்கப்படுத்துதல், பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள், இயற்கை வேளாண்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த விவசாயிகளுக்கான கண்டூணர்வு சுற்றுலா மற்றும் பாரம்பரியம் நெல் சாகுபடி, தீவனபுல் மேலாண்மை, செயல்விளக்கம் அமைத்தல் தொடர்பான விவரங்களை எடுத்துரைத்தார்.

    மேலும் மேற்கண்ட திட்டங்கள் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் கிராமங்களின் செயல்படுத்தப்படும் என்பதை குறித்து விவாதி க்கப்பட்டது.

    இறுதியாக அட்மா திட்ட வட்டரா தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி நன்றியுரை கூறினார்.

    இக்கூ ட்டத்திற்கு ராஜா,கோகிலா மற்றும் சந்தியா ஏற்பாடு செய்திருந்தனர்.

    • பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கையான மற்றும் விஷமில்லாத உணவாக பயன்படுகிறது.
    • இயற்கை உயிர் உரங்களை பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் விளக்கம்.

    பேராவூரணி:

    சேதுபாவாசத்திரம் வட்டாரம் திருவத்தேவன் கிராமத்தில் விவசாயிகள் பாரம்பரிய மற்றும் புதிய நெல் ரகங்களை சாகுபடி செய்வது தொடர்பான தொழில் நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் முரளி, துணைத் தலைவர் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்வில் வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி பேசியதாவது,

    பாரம்பரிய நெல்- புதிய ரகங்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வர வேண்டும். பாரம்பரிய நெல் ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை.

    இவை சர்க்கரை நோய், புற்றுநோய், வயிற்றுப்புண், நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கும் திறன் கொண்டது. பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கையான மற்றும் விஷமில்லாத உணவாக பயன்படுகிறது.

    விவசாயிகள் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

    இயற்கை உரம் நிகழ்ச்சியில் இயற்கை உழவர் இயக்கத்தின் செயலாளர் முருகையன் பேசும்போது, 'விவசாயிகள் அனைவரும் செயற்கை உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி சாகுபடி செய்வதால் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குதல் இன்றி பயிர் நன்றாக வளர்ந்து நஞ்சில்லாத மற்றும் தரமான உணவை உற்பத்தி செய்ய முடியும்' என்றார்.

    நிகழ்ச்சியில் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, சீரகச் சம்பா, காட்டுயாணம், கருப்புக் கவுனி, சிவப்பு கவுனி, ஆத்தூர் கிச்சடி சம்பா, தேங்காய் பூ சம்பா, கந்தசாலா, கிச்சடி சம்பா போன்ற ரகங்களின் பண்புகள், குணாதிசயங்கள் மற்றும் சாகுபடி முறை குறித்தும், இயற்கை உயிர் உரங்களை பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் தமிழழகன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் பிரதீபா, அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு கோர்ட்டில் உள்ளதால் சட்டசபையில் பேசுவது மரபல்ல என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சம்பவம் குறித்து சில கருத்துக்களை கூறினார். அவரது பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

    இதுகுறித்து இறுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-



    ஸ்டெர்லைட் பிரச்சனை சம்பந்தமாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து முழு விசாரணை மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் தலைமையிலே விசாரணை தொடங்கப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த பிரச்சனை குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆகவே, நீதிமன்றத்திலே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு சம்பவத்தை பற்றி, பொருளைப் பற்றி, அவையிலே விவாதிப்பது, மரபல்ல. தி.மு.க. ஆட்சியிலே, அப்பொழுது அமைச்சராக இருந்து, தற்போது தி.மு.க.வின் சட்டமன்ற துணைத்தலைவராக இருக்கின்ற மரியாதைக்குரிய துரைமுருகனே, இதைப்பற்றி சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

    நீதிமன்றத்திலே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு பொருளைப் பற்றி அவையிலே பேசுவது மரபல்ல என்ற ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார். அதன் அடிப்படையிலே, எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், இது தொடர்பாக விசாரணை கமி‌ஷனிலே அளிக்கலாம் என்பதை தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    ×