search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொம்மலாட்டம்"

    • கலை பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி 4 நாட்கள் நடைபெறுகிறது.
    • மாலை 6.30 மணிக்கு அருங்காட்சியகத்தில் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுமம், சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் கடை கூடத்தின் சார்பில் சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த 4 நாட்களும் எனது பாரம்பரியம் என்ற தலைப்பில் தஞ்சை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் தங்கள் கலை பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி நடைபெறுகிறது .

    நாளை காலை 10 மணிக்கு தஞ்சை கலைக்கூடத்தில் அருங்காட்சியக நடை பயணமும் நடைபெற உள்ளது. 19-ந் தேதி காலை 10 மணிக்கு 5-ம் வகுப்பு 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அருங்காட்சியகத்தில் ஓவிய போட்டியும், 20-ந் தேதி காலை 10 மணிக்கு அருங்காட்சியகத்தில் புகைப்பட போட்டியும் நடைபெறுகிறது.

    21-ந் தேதி காலை 10 மணிக்கு சரஸ்வதி மகால் நூலகத்தில் அருங்காட்சியகங்களின் வரலாறு என்ற தலைப்பில் பொது மக்களுக்கான பணிமனையும், மாலை 6.30 மணிக்கு அருங்காட்சியகத்தில் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதற்கு அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம். மேலும் பதிவு மற்றும் விவரங்களுக்கு 9842455765, 9443267422, 9442547682 என்ற எண்களை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வளரிளம் பருவத்தினர் மத்தியில் பள்ளி இடைவிலகல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும்விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • மாணவிகள் ஏறாளமானோர் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

    திருப்பூர் :

    மாநகராட்சி பள்ளி சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம் மற்றும் பொம்மலாட்ட க்கலைக்குழுவினர் சார்பில்,வளரிளம் பெண்களின் தொடர்கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த பொம்மலாட்டக் கலைப்ப யணமானது திருப்பூர் மாவட்டத்தில் இன்று துவங்கி வருகிற 12- ந் தேதி தேனியில் முடிவடைகிறது.

    இதில் திருப்பூர்., கோவை. ஈரோடு., திண்டுக்கல்., தேனி போன்ற தொழில் நகரங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் ஆடை உற்பத்தி தொடர்பான பல்வேறு வேலைகளுக்கு செல்லும் வளரிளம் பருவத்தினர் மத்தியில் பள்ளி இடைவிலகல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும்விதமாக, திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வியின் அவசியத்தை மாணவிகளுக்கு எடுத்துறைக்கும் விதமாக, பொம்மலாட்டம் நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதனை மாணவிகள் ஏறாளமானோர் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

    ×