என் மலர்

  நீங்கள் தேடியது "explain"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக வண்ணாரப்பேட்டை விருந்தினர் மாளிகையில் இருந்து இன்று காலை புறப்பட்டு வந்தார்.
  • விவசாயம், இல்லம் தேடிக் கல்வி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், நான் முதல்வன் திட்டம், மாணவ-மாணவிகளுக்கு இலவச சிற்றுண்டி, ஊனமுற்றோருக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விளக்கும் வகையிலான பேனர்களை 11 மேடைகளாக அமைக்கப்பட்டு இடம்பெற்று இருந்தன.

  நெல்லை:

  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக வண்ணாரப்பேட்டை விருந்தினர் மாளிகையில் இருந்து இன்று காலை புறப்பட்டு வந்தார்.

  அவருக்கு தி.மு.க.வினர் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா மற்றும் தச்சை பகுதி தி.மு.க. செயலாளர் தச்சை சுப்பிரமணியன் ஆகியோரது ஏற்பாட்டில் பாளை நீதிமன்றம் அருகே உள்ள ஒரு பள்ளி முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டங்களை விளக்கி மேடை அமைக்கப்பட்டிருந்தது.

  விவசாயம், இல்லம் தேடிக் கல்வி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், நான் முதல்வன் திட்டம், மாணவ-மாணவிகளுக்கு இலவச சிற்றுண்டி, ஊனமுற்றோருக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விளக்கும் வகையிலான பேனர்களை 11 மேடைகளாக அமைக்கப்பட்டு இடம்பெற்று இருந்தன.

  அவற்றை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

  நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், மாநகராட்சி கவுன்சிலர் கோட்டையப்பன் மற்றும் நிர்வாகிகள் ஆ.க.மணி, பொன்னையா பாண்டியன், பகுதி செயலாளர் கோபி என்ற நமச்சிவாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாவட்ட, ஒன்றிய, நகர தலைவர்கள் அறிமுக கூட்டம்.
  • முன்னாள் ஒன்றிய தலைவர் செந்தில் தலைமை தாங்கினார்.

  சாத்தான்குளம்:

  மத்திய பா.ஜனதா அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர தலைவர்கள் அறிமுக கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் ஒன்றிய தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். பா.ஜனதா ஒன்றிய பொதுசெயலாளர் ராம்மோகன் வரவேற்றார்.

  தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், ஒன்றிய தலைவர் சரவணன், நகர தலைவர் ஜோசப், மாவட்ட பொதுசெயலாளர்கள் சிவமுருக ஆதித்தன், ராஜா,மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், பிரசார பிரிவு தலைவர் மகேஸ்வரன், இளைஞரணி மாநில செயலாளர் பூபதி பாண்டியன், மகளிரணி மாவட்ட தலைவர் தேன் மொழி, மாவட்ட செயலாளர் ராஜபுனிதா,முன்னாள் மாவட்ட துணை தலைவர் எஸ்.பி.கணேசன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு ஏன், எப்படி தப்ப அனுமதிக்கப்பட்டார் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார். #Congress #AbhishekSinghvi #VijayMallya
  புதுடெல்லி:

  நிதி மந்திரியை சந்தித்ததாக விஜய் மல்லையா கூறியது பற்றி காங்கிரஸ் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளது.  இதுபற்றி அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், “விஜய் மல்லையா உள்ளிட்டோர் தப்பிச் செல்வதற்கு மத்திய அரசு உடந்தையாக இருந்துள்ளது. விஜய் மல்லையா ஏன், எப்படி தப்ப அனுமதிக்கப்பட்டார்? அவருக்கும், நிதி மந்திரிக்கும் இடையிலான சந்திப்பில் பேசப்பட்டது என்ன? என்று அறிந்துகொள்ள நாடு விரும்புகிறது. அதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார். #Congress #AbhishekSinghvi #VijayMallya
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு கோர்ட்டில் உள்ளதால் சட்டசபையில் பேசுவது மரபல்ல என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
  சென்னை:

  சட்டசபையில் இன்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சம்பவம் குறித்து சில கருத்துக்களை கூறினார். அவரது பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

  இதுகுறித்து இறுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-  ஸ்டெர்லைட் பிரச்சனை சம்பந்தமாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து முழு விசாரணை மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் தலைமையிலே விசாரணை தொடங்கப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த பிரச்சனை குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆகவே, நீதிமன்றத்திலே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு சம்பவத்தை பற்றி, பொருளைப் பற்றி, அவையிலே விவாதிப்பது, மரபல்ல. தி.மு.க. ஆட்சியிலே, அப்பொழுது அமைச்சராக இருந்து, தற்போது தி.மு.க.வின் சட்டமன்ற துணைத்தலைவராக இருக்கின்ற மரியாதைக்குரிய துரைமுருகனே, இதைப்பற்றி சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

  நீதிமன்றத்திலே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு பொருளைப் பற்றி அவையிலே பேசுவது மரபல்ல என்ற ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார். அதன் அடிப்படையிலே, எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், இது தொடர்பாக விசாரணை கமி‌ஷனிலே அளிக்கலாம் என்பதை தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உணவு பொருட்களில் கலப்படத்தை தரம் அறிவது எப்படி? என்பது குறித்து கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
  கரூர்:

  கரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் கோடைகால உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி உணவு பொருட்களின் தரம் பற்றி எப்படி அறிவது? என்பதை விளக்கும் வகையிலான அரங்கு ஒன்று அங்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் மிளகு, மிளகாய்தூள், டீத்தூள், பேரீச்சம்பழம், உப்பு, வெல்லம், நல்லெண்ணெய் உள்பட அத்தியாவசிய பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டால் அதன் நிலை எப்படி இருக்கும் என்பது பற்றியும், தரமான பொருள் எப்படி இருக்கும் என்பது பற்றியும் இருவிதமாக பாட்டிலில் அடைத்து வைத்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் விளக்கு ஏற்றுவதற்கான நல்லெண்ணெய் என பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை சமையலுக்கு பயன்படுத்த கூடாது. தரமான மிளகு தண்ணீரில் மூழ்கி விடும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

  இந்த அரங்கினை மாவட்ட கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டார். அத்தியாவசிய பொருட்களின் தரத்தை கண்டறிவது பற்றி கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், இந்த முகாம் மே மாத இறுதி வரை நடக்கும். முகாமில் பொதுமக்கள் பார்வையிட்டு கோடை காலத்தில் பாதுகாப்பான உணவு மற்றும் ஆரோக்கியத்தை கடைபிடிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். மேலும், உணவுப்பொருள் குறித்த பொதுமக்களின் புகார்களை நியமன அலுவலரின் 94440 42322 என்கிற வாட்ஸ்-அப் எண் வழியாக தெரிவித்தால் 24 மணி நேரத்தில் புகார் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் (பொறுப்பு) புஷ்பராஜ் மற்றும் அனைத்து வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  
  ×