என் மலர்

  நீங்கள் தேடியது "Abhishek Singhvi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாஜக அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல்காந்தி துன்புறுத்தப்படுகிறார்.
  • மத்திய அமலாக்கத்துறையில் வழக்குகள் தேங்கிக் கிடக்கும் போது இந்த வழக்குக்கு ஏன் முன்னுரிமை?.

  நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் இன்று 5வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

  பிற்பகல் உணவு இடைவேளைக்குப் பிறகும், இரவில் அரை மணி இடைவேளைக்கு பிறகும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களில் ராகுல் காந்தியிடம் மொத்தம் 40 மணிநேரம் விசாரணை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இந்நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல் காந்தி துன்புறுத்தப் படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. அமலாக்க இயக்குநரகத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

  பாஜக மற்றும் மோடி அரசுக்கு எதிராக ராகுல்காந்தி தொடர்ந்து, உறுதியான முறையில், குரல் கொடுத்து வருவதாகவும், எனவே ராகுல்காந்தியை துன்புறுத்தும் இந்த நடவடிக்கை முற்றிலும் பழிவாங்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவது, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் போராட்டம் போன்ற முக்கிய பிரச்சனைகளில் இருந்து நாட்டை திசை திருப்பும் முயற்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

  மத்திய அமலாக்கத்துறையில் மற்ற வழக்குகள் தேங்கிக் கிடக்கும் போது இந்த வழக்குக்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு ஏன், எப்படி தப்ப அனுமதிக்கப்பட்டார் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார். #Congress #AbhishekSinghvi #VijayMallya
  புதுடெல்லி:

  நிதி மந்திரியை சந்தித்ததாக விஜய் மல்லையா கூறியது பற்றி காங்கிரஸ் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளது.  இதுபற்றி அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், “விஜய் மல்லையா உள்ளிட்டோர் தப்பிச் செல்வதற்கு மத்திய அரசு உடந்தையாக இருந்துள்ளது. விஜய் மல்லையா ஏன், எப்படி தப்ப அனுமதிக்கப்பட்டார்? அவருக்கும், நிதி மந்திரிக்கும் இடையிலான சந்திப்பில் பேசப்பட்டது என்ன? என்று அறிந்துகொள்ள நாடு விரும்புகிறது. அதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார். #Congress #AbhishekSinghvi #VijayMallya
  ×