search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adi Festival"

    • மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா பாரம்பரிய முறைப்படி நடந்தது.
    • பக்தர்கள் அம்பாளுக்கு காவடி, பூத்தட்டு எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    வாய்மேடு அருகே தாணிக்கோட்டகத்தில் வாணங்காடு ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆடி திருவிழா பாரம்பரிய முறைப்படி நடந்தது.

    முன்னதாக அம்பாளுக்கு பால், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு போட்டும், முடி இறக்கவும், அம்பாளுக்கு காவடி, பூத்தட்டு எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பின்பு பண்டைய கால முறைப்படி பாரம்பரியம் மாறாமல் பனை மட்டை ஓலைகளில் பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.
    • சுமங்கலி பெண்கள் தங்கள் மஞ்சள் கயிறை மாற்றி புதிய கயிறை மாற்றிக்கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் வெக்காளி யம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு நாளன்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இன்று காலை பூக்குழி இறங்குவதற்காக பூமேடை தயார்படுத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    கோவில் பூசாரி முதலில் பூக்குழி இறங்கிய பின் பக்தர்கள் ஒவ்வொருவராக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தீச்சட்டி எடுத்தபடியும், அலகு குத்திய படியும், குழந்தைகளை சுமந்தவாறும் பக்தர்கள் பூக்குழி இறங்கிய காட்சி பக்தர்களை பரவச ப்படுத்தியது. இதேபோல் திண்டுக்கல் கோட்டை மாரியம்ம ன்கோவில், அபிராமி அம்மன் கோவில், புவனே ஸ்வரி அம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.

    அதிகாலை முதல் ஏராள மான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் கோட்டை குளத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். சுமங்கலி பெண்கள் தங்கள் மஞ்சள் கயிறை மாற்றி புதிய கயிறை மாற்றிக்கொண்டனர்.

    • வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ். தர்மர் கொடியேற்றுகிறார்.
    • தேரோட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் களக்காடு சுந்தரபாகவதர் குமார் ஜெயராமன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்னதர்மம்

    கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை, 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. கொடியை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ். தர்மர் கொடியேற்றுகிறார்.

    காலை 7 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் பவனி, 9 மணிக்கு அன்னதர்மம், 12 மணிக்கு உச்சிபடிப்பு, பணிவிடை 1 மணிக்கு அன்னதர்மம், மாலை 4 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை, 5 மணிக்கு புஷ்ப வாகன பவனி, 6 மணிக்கு அன்னதர்மம் இனிமம் வழங்குதல் நடக்கிறது.

    11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலையில் உகப்படிப்பு, பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம், மாலையில் உகப்படிப்பு பணிவிடையும் நடக்கிறது. இதே போல் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம், கருட வாகனம், குதிரை, ஆஞ்சநேயர், இந்திரன் என பல்வேறு வாகனங்களில் பவனி நடக்கிறது.

    தேரோட்டம்

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 31-ந்தேதி பகல் 12.05 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தை மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் களக்காடு சுந்தரபாகவதர் குமார் ஜெயராமன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். அன்று இரவு 1 மணிக்கு காளை வாகன பவனியும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகிலத்திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர், செயலாளர் பொன்னுத்துரை, துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார், இணைத் தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், செல்வின், வரதராஜபெருமாள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    ×