search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரம்பரிய சிக்கு கோலம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    நிகழ்ச்சியில் சிறந்த கோலங்கள் வரைந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பாரம்பரிய சிக்கு கோலம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • பல்வேறு தலைப்புகளில் பாரம்பரிய சிக்கு கோலங்கள் வரைந்து விழிப்புணர்வு.
    • 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம், கண்டிதம்பட்டு ஊராட்சியில் பாரம்பரிய சிக்கு கோலம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கண்டிதம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமையில் தமிழ் கவிஞர்கள், திருக்குறள் தமிழ் ஐம்பெருங்காப்பியங்கள், தமிழ் மொழியின் சிறப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பொதுமக்கள் பாரம்பரிய சிக்கு கோலங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறந்த கோலங்கள் வரைந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார், அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    முடிவில் ஜோதி அறக்கட்டளை கள ஒருங்கிணைப்பாளர் நாராயணவடிவு நன்றி கூறினார்.

    Next Story
    ×