search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவுவகை"

    • பாரம்பரிய உணவு வகைகள் தயாரித்தல் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டுள்ளது.

    மன்னார்குடி:

    மன்னார்குடிஅரசு உதவி பெறும் தூயவளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக பாரம்பரிய உணவு வகைகள் தயாரித்தல் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றது. பள்ளியின் திட்ட அலுவலர் மேரி செல்வராணி வரவேற்று பேசினார். தலைமையாசிரியை சகோதரி ஜெபமாலை தலைமை வகித்தார்.

    நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா மற்றும். மன்னை ஜேசிஸ் சங்க முன்னாள் தலைவர் உழவன் அருண் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    என்.எஸ்.எஸ். மாணவிகள் தங்கள் வீட்டில் தயாரித்த பாரம்பரிய உணவு வகை பொருட்களை கண்காட்சிக்கு
    வைத்திருந்தனர். கண்காட்சி நடுவர்களாக இருந்து ராஜப்பா மற்றும் அருண் ஆகியோர் பரிசுக்குரிய உணவு வகைகளை தேர்ந்தெடுத்தனர்.

    போட்டியில் தர்ஷினி முதல் பரிசையும். திவ்யதர்ஷினி 2ம் பரிசையும் செ. துர்கா 3ம் பரிசையும் பெற்றனர். சிறப்பு பரிசுகளாக முடவாட்டம் கிழங்கு அடை மற்றும் கேழ்வரகு களியுடன் மீன் குழம்பு தயார் செய்திருந்த வி.தீபிகா, சுண்டைக்காய் வடை தயார் செய்திருந்த மு.ப்ரீத்தி தேவி, கவுனி அரிசி பொங்கல் தயார் செய்திருந்த மீரா தர்ஷினி ஆகியோர் சிறப்பு பரிசுகளையும் பெற்றனர்.

    பள்ளியில் பயிலும் 3800 மாணவிகளும் ஆசிரியைகளும் கண்காட்சியை பார்வையிட்டு பாரம்பரிய உணவு பொருட்கள் தயார் செய்யும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். முன்னதாக பாரம்பரிய நெல் வகைகள் சேகரித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆதிரெங்கம் நெல் ஜெயராமனின் நினைவு நாளை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    உதவி திட்ட அலுவலர் ஷோபனா நன்றி கூறினார்.

    ×