search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kannur"

    • உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன
    • 2000, 2004,2009 ஆகிய ஆண்டுகளில் கன்னோஜ் தொகுதியில் இருந்து அகிலேஷ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்

    உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடுகிறார் என சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

    இதற்கு முன்னதாக இந்த தொகுதியில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுவார் என சமாஜ்வாதி கட்சி அறிவித்திருந்தது.

    2000, 2004,2009 ஆகிய ஆண்டுகளில் கன்னோஜ் தொகுதியில் இருந்து அகிலேஷ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். 2012 இல் அவர் முதலமைச்சரான பிறகு அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அப்போது நடந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி டிம்பிள் யாதவ் போட்டியின்றி வெற்றி பெற்றார். பின்னர், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அத்தொகுதியில் டிம்பிள் வெற்றி பெற்றார். ஆனால் அவர் 2019 இல் பாஜகவின் சுப்ரத் பதக்கிடம் அவர் தோல்வியடைந்தார்.

    இந்த தொகுதிக்கு மே 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அங்கு உள்ள 80 இடங்களில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது, மீதமுள்ள 63 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும் அதன் சிறிய கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன.

    • நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வினீஷ், ஷெரின் இருவரும் படுகாயமடைந்தனர்.
    • நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடி விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் பானூர் புளியந்தோடு பகுதியை சேர்ந்தவர் வினீஷ்(வயது25), புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷெரின்(25). இவர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொண்டர்கள் ஆவர்.

    இந்நிலையில் இவர்களின் ஒருவரது வீட்டின் மாடியில் இன்று அதிகாலை நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் வினீஷ், ஷெரின் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். ஒருவரின் கைகள் துண்டிக்கப்பட்டன. மற்றொருவருக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று படுகாயமடைந்து கிடந்த இருவரையும் மீட்டு கண்ணூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்பு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடி விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். நாட்டு வெடிகுண்டு வெடித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் இருவர் படுகாயமடைந்த சம்பவம் கண்ணூர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க யஷ்வந்த்பூர் கண்ணுார் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
    • இதில், ஏசி இரண்டடுக்கு பெட்டிகள், 2, மூன்றடுக்கு, படுக்கை வசதி , பொதுப்பிரிவு, பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க யஷ்வந்த்பூர்-கண்ணுார் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.தமிழகம், கேரளாவில் தொடர் பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இதை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக, யஷ்வந்த்பூர்-கண்ணுார் இடையே(வ.எண்:06283) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.நாளை காலை, 7:40 மணிக்கு புறப்படும் ரயில், இரவு, 8:30க்கு கண்ணுார் சென்றடையும். நாளை இரவு, 11:00க்கு கண்ணுாரில் இருந்து புறப்படும் ரயில்(06284) மறுநாள் மதியம், 1:00க்கு யஷ்வந்த்பூர் அடைகிறது. இதில், ஏசி இரண்டடுக்கு பெட்டிகள், 2, மூன்றடுக்கு, 6, படுக்கை வசதி, 7, பொதுப்பிரிவு, 2 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். பனஸ்வாடி, கிருஷ்ணராஜபுரம், திருப்பத்துார், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், சொரணுார், திரூர், கோழிக்கோடு உள்ளிட்ட ஸ்டேஷன்களில் இந்த ரயில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். #LokSabhaElections2019 #PinarayiVijayan
    கண்ணூர்:

    பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம்  பினராயி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.



    கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதி பாஜக வேட்பாளர் ராகவேந்திரா ஷிகாரிபுரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, வாக்களிப்பதற்காக இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார். காந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற அவர், தன் தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும் தன்னை பார்ப்பதற்காக வீட்டின் வெளியே திரண்டிருந்த மக்களையும் மோடி சந்தித்து பேசினார்.  #LokSabhaElections2019 #PinarayiVijayan
    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் இன்று காலை புதர்மறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தில்லன்சேரி பகுதியில் உள்ள சாலையில் இன்று காலை தொழிலாளர்கள் சாலை அருகே உள்ள புதர்களை வெட்டி சுத்தம் செய்தனர்.

    அப்போது ஒரு வாழைமரத்தடியில் பந்து வடிவில் 2 மர்ம பொருட்கள் இருந்தன. சந்தேகம் அடைந்த தொழிலாளர்கள் முழக்குன்னு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். முழக்குன்னு போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    2 மர்ம பொருளை பத்திரமா மீட்டு மணல் போட்ட ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைத்தனர். மர்ம பொருளை சோதனை செய்தபோது நிபுணர்கள் அதிர்ச்சியடைந்தனர். மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்பதும், இது வெடித்தால் சுமார் 1 கி. மீட்டருக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினர். இந்த பகுதியில் பா. ஜனதாவுக்கும், கம்யூனிஸ்ட்டு கட்சிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இதனால் தொண்டர்கள் வெட்டு, குத்து, வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த வெடிகுண்டு கிடைத்துள்ளது. எனவே திட்டமிட்டு ஒரு தரப்பினர் கலவரத்தை ஏற்படுத்திவிட்டு அப்போது இந்த குண்டுகளை வீச சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

    கைப்பற்றப்பட்ட 2 வெடிகுண்டுகளையும் கண்ணூர் மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு நிபுணர்கள் எடுத்துச்சென்றனர். இது குறித்து முழக்குன்னு போலீசார் மற்றும் கண்ணூர் மாவட்ட தலைமை போலீசார் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். உளவுத்துறை போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    தாங்கள் கண்டு பிடித்தது வெடிகுண்டு என்று தெரிந்ததும் தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். #Tamilnews
    ×